Monday, July 31, 2017

பேராவூரணி இடியுடன் கூடிய மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

பேராவூரணி இடியுடன் கூடிய மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி மெய்ச்சுடர் இதழ்.

எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி மெய்ச்சுடர் இதழ்.



 

 

 

மெய்ச்சுடர் என்ற இந்த இதழ் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்து எட்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.
31.07.2010 இல் நிதர்சனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இதழ் தனது இரண்டாவது இதழிலேயே மெய்ச்சுடர் என்னும் தமிழ்ப் பெயர் தாங்கி வெளிவரத் தொடங்கியது. பேராவூரணி பகுதியின் பல்வேறு செய்திகளையும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களையும் முற்போக்கான முறையில் எடுத்துரைக்கும் பணியை செவ்வனே செய்து வருகிறது. சமூகத்தில் போற்ற வேண்டியதை பாராட்டுவதும், தூற்ற வேண்டியதை இடித்துரைப்பதும் மெய்ச்சுடர் வழி தொடர்ந்து நடந்து வருகிறது.
அச்சு இதழாக வெளிவந்து கொண்டிருந்த மெய்ச்சுடர் பெரும் பொருளாதார நெருக்கடியினாலும், ஆள் பற்றாகுறையினாலும் பிளாக்கர் மற்றும் முகநூல் வழியாக மட்டுமே வெளிவர வேண்டிய நிலையில் உள்ளது. எவ்வளவு தொழில் நுட்பங்கள் தகவல் தொடர்புத் துறையில் வந்திருந்தாலும் அச்சு ஊடகத்தின் பணி அளப்பரியது. பாமர ஏழை மக்களையும் சென்றடையும் வல்லமை கொண்டது அச்சு ஊடகம். தந்தை பெரியார் தனது வாழ்நாள் பணியாக தொடர்ந்து செய்து வந்த பணி மக்களிடம் உரையாற்றுவதும், செய்தித்தாள் நடத்தி வந்ததும்தான். அவரின் செய்தித்தாள் பணி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. தந்தை பெரியாரின் காலகட்டத்தையும் விட செய்தித்தாள் ஊடகத்தின் பணி இன்று மிகவும் அவசியமாகவேப் படுகிறது.
அச்சு ஊடகமாக - செய்தி இதழாக மீண்டும் மெய்ச்சுடர் இதழை தொடர விழைகிறோம். விரைவில் அதற்கான பணிகளைத் தொடருவோம். எங்களின் இச்சிறிய சமூகப் பணியையும் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
நா. வெங்கடேசன்
ஆசிரியர், மெய்ச்சுடர்.
31.07.2017
பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர
இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

பேராவூரணியில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அடிக்கடிநிறுத்தப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
பேராவூரணி அரசு பஸ் டெப்போவில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ்கள்இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வசூலை காரணம் காட்டி சில பகுதிகளுக்குபஸ் இயக்கம் நிறுத்தப்படுவதாகவும், அரசு சேவையில் இருந்து வணிக நோக்கோடுபோக்குவரத்து துறை செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். அரசுக்கு நஷ்டம்ஏற்பட்டாலும் பல துறைகள் பொதுமக்கள் அடையும் நன்மை கருதி லாப நோக்கமின்றிசெயல்பட்டு வருவது மரபு, ஆனால் அரசுத்துறை நிறுவனமான போக்குவரத்துதுறை லாபம்இல்லை எனில் பஸ் இயக்கம் இல்லை என முடிவு செய்து செயல்படுகிறது என கேள்விஎழுப்பப்படுகிறது. குறிப்பாக சித்தாதிக்காடு, பின்னவாசல் வழியான ரெட்டவயல் செல்லும்பேருந்து கடந்த ஒருவார காலமாக இயக்கப்படவில்லை, இதை நம்பி ,பள்ளி,அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்லும்நோயாளிகள் என யாவரும் மிகுந்த மன கஷ்டத்திற்கு ஆளாவதோடு வேறுவழி இன்றி பஸ்வரும் என்ற நம்பிக்கையில் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால்ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டதன் காரணமாகபோக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த போலீஸ் பயிற்சி உதவிஆய்வாளர்பிரகாஷ், தனிப்படை ஏட்டு பெத்தபெருமாள் ஆகியோர் மாணவர்களை சமாதானப்படுத்திஅனுப்பி வைத்தனர்.
வரலாற்றில் இன்று ஜுலை 31.

வரலாற்றில் இன்று ஜுலை 31.

ஜுலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

30 BC – மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
781 – பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.
1588 – ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
1658 – அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.
1741 – புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.
1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
1865 – உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1938 – கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.
1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
1964 – சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1971 – அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
1976 – வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.
1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
1988 – மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.
1992 – நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

பிறப்புகள்

1704 – கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் (இ. 1752)
1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1912 – மில்ட்டன் ஃப்ரீட்மன், பொருளியல் நிபுணர் (இ. 2006)
1966 – ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

1805 – தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756)
1980 – முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பி. 1924)
1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
2014 – சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்

Sunday, July 30, 2017

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம்.









செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் பசுமையைத் தூவி நிற்கும் மரங்கள், பள பள கட்டடங்கள், சுற்றுப்புறம் எங்கும் தூய்மை என ஒரு அழகிய பூங்காவைப் போல இருக்கிறது அந்த இடம். மருந்து வாடை, மருத்துவக் கழிவுகள் என மருத்துவமனைக்கு உரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார்ப்பொரேட்  மருத்துவமனைக்கு நிகராக நிமிர்ந்து நிற்கிறது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி. விவசாயத்தையே ஜீவாராதரமாகக் கொண்ட கிராமம்.  மண்ணையும்,தென்னையையும் கவனிக்கும் அளவுக்குத் தங்கள் உடல் நிலை குறித்த எந்தவிதமான கவனிப்பும், விழிப்புணர்வும் இல்லாமல் வாழும் மக்கள். இந்த ஊரில் 1968-ல் ஆரம்பிக்கபட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆரம்பத்தில் எல்லா அரசு மருத்துவமனைகளை போலவேதான் இதுவும் செயல்பட்டு வந்தது.

இன்று ஆபரேஷன் தியேட்டர், பிரசவம், குடும்பக் கட்டுபாடு, விஷ முறிவு, சித்தமருத்துவம், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டடங்கள். மெகா சைஸ் ஜெனரேட்டர் என ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தச் சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரே ஈர்க்கிறது. இங்கு என்ன என்ன சிக்கிச்சைகள் கொடுக்கப்படுகின்றன? அரசு வழங்கும் திட்டங்கள் என்னென்ன? என  அனைத்து விபரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார்கள்.

சுற்றுச்சூழல், சிகிச்சை, வசதிகள், உபசரிப்பு என எல்லா வகையிலும் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையின் மாற்றத்துக்கு யார் காரணம் என்று கேட்டால், "எங்க டாக்டர்தான்" என்று செளந்தராஜனை நோக்கி கை நீட்டுகிறார்கள் மக்கள்.

நாம் அவரைச் சந்திக்க சென்ற போது, சிகிச்சைக்காக வந்திருந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரிடமும்  அக்கறையாக விசாரிக்கிறார். எழுபது வயது இருக்கும்  வயதான பாட்டி, "எனக்கு என்ன நோவுன்னே தெரியலை... இடுப்புக்கு கீழே ஒரே வழியா இருக்கு... அந்த ஒவத்திரியம் தாங்க முடியல சாமி" என தன் மகனிடம் சொல்வதை போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார். "காலம் முழுக்க உழைத்த  உடம்பு...  எலும்பு தேய்ந்திருக்கும் இந்த மருந்த சாப்பிடு ஆத்தா சரியாயிடும்" என அன்போடு சேர்த்து மாத்திரையையும் கொடுத்து அனுப்புகிறார்.

இன்னும் சிலருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, "கொஞ்சம் இருங்க தம்பி வரேன்..." என  நம்மிடம் சொல்லிவிட்டு 'மருத்துவமனை சுற்றிலும் சுத்தமாக இருக்கிறதா' என ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து பேச ஆரம்பிக்கிறார்.

"ஒரு நோயாளி குணமாவதற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது... சுத்தமும், சுகாதாரமும் ரொம்ப அவசியம். சுற்றுப்புறம் அசுத்தமா இருந்தா அதுவே பல  நோய்கள் வருவதற்கு வழி வகுக்கும். அதனால்தான் தூய்மை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறேன்.

நான் இந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலராகவும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலைய மருத்துவராகவும் இருக்கிறேன். 1992 -ம் ஆண்டுதான்  நான் இங்கு பணிக்கு வந்தேன்.

நானும் கிராமப்பகுதியில் பிறந்தவன்தான்.  பொதுவாக, கிராமப் பகுதிகளில் இருக்கிற மக்களுக்குச்  சுகாதாரம் குறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சொல்லவே வேண்டாம். பிரசவம் குறித்த பயம், சத்துணவு இல்லாமை எனப் பல பிரச்னைகள். தாய், சேய் மரணம் அதிகமாக நடக்கும். இவற்றை முதலில் சரி செய்ய வேண்டும் என நினைத்தேன்.

வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம், "சத்து குறைபாடுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால்தான் உங்களுக்கும்,குழந்தைக்கும் குறைபாடு ஏற்பட்டு விபரீதங்கள் நடக்கின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்" என்று சொல்லி, எதெல்லாம் சத்தான உணவுகள் என்றும் சொல்லி அனுப்புவேன்.

ஒரு கட்டத்தில், "நாம ஏன் இதை சொல்வதோடு நிறுத்திக்கிறோம்... நாமே சத்தான உணவைத் தயாரித்துக் கொடுத்தால் என்ன" என்ற யோசனை வந்தது. உடனே  சில நண்பர்களைப் பிடித்து விஷயத்தை சொன்னேன். அவர்களும் ஆர்வமாக உதவ முன் வந்தார்கள். செவ்வாய்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு கொடுக்க ஆரம்பித்தோம். 2007-ம் வருடத்தில் இருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இங்கு செயல்படுத்திய பிறகே அரசு தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது..."  எனப் பெருமிதமாகச் சொல்கிறார் டாக்டர் செளந்தராஜன்.

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதற்கும் முன்னுதாரணமாக இருந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான்.   "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடுவது, பிரசவகாலத்தின் போது ஏற்படும் பய உணர்வை போக்கத்தான். அது மட்டும் இல்லாமல் வளையல் சத்தத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆக்டிவாக இருப்பதோடு அதன் வளர்ச்சியும் அதிகமாகும். இந்த விழா இரு உயிர்களுக்கான நலன் சம்பந்த பட்ட விஷயம்.

அதனால் நமது மருத்துவமனையிலேயே வளைகாப்பு விழாவையும் நடத்த வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒரு திருமண மண்டபத்தை பிடித்து  700 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் அமர வைத்தோம். கூடவே அவர்களின் உறவினர்களும். கர்ப்பிணி பெண்களுக்கு வளையலிட்டு வகை வகையான விருந்து வைத்து மருத்துவ குழுவினரோடு ஊரே கூடி வளைகாப்பு நடத்தபட்டது. அந்த நேரத்தில் பிரசவம் குறித்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தினேன். மிக பிரமாண்டமாக  நடந்த இந்த வளைகாப்பு திருவிழாவில் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள், நன்கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பின்னர்  தமிழக அரசு எல்லா ஊர்களிலும் வளைகாப்பு விழாவை நடத்த வேண்டும் என ஒரு திட்டமாகவே  உத்தரவிட்டது.  இன்று எங்கும் இந்த விழா நடப்பதற்கு நாங்கள்தான் முன்னோடி எனச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு.

ஒவ்வொரும் மாதமும் 20 முதல் 30 பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 18 பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. எங்கள் செயல்பாட்டைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியுள்ளார். ISO தரசான்றும் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சி நன்கொடையாளர்கள் மற்றும் எங்க ஊழியர்களால்தான் சாத்தியமானது என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் டாக்டர் சௌந்தர்ராஜன்.

மருத்துவமனையைச் சுற்றி ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் காய்கறித் தோட்டம், பசு மாடுகள் வளர்ப்பது அதன் மூலம் கிடைக்கும் பாலை கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா அமைப்பது எனப் பல திட்டங்கள் அரசு மற்றும் நன்கொடையாளர்கள் உதவியோடு செய்ய இருக்கிறார்கள். நன்கொடையாளர்களை மறக்காமல் அவர்களின் பெயர்களைக் கல்வெட்டிலுல் எழுதி நன்றி செலுத்துகிறார்கள்.

"சுத்தமா இருக்கும், சிகிச்சை தரமா இருக்கும் என்றுதான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்குச்  செல்கிறார்கள்.  எங்களுக்கு எல்லா வசதிகளும்  இங்கேயே கிடைத்து விடுகின்றன..." என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ஒரு மருத்துவர் மனது வைத்ததால்  ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மாறியது. எல்லா அரசு மருத்துவர்களும் மனது வைத்தால்..?


நன்றி: விகடன்


தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி
உள்ளது.

தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், தென்னை மரங்களை காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதி பெற்றவை என்றும், குறைந்தபட்சம் 5 மரங்களை வளர்க்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்றும், மரங்களின் வயதுக்கு ஏற்ப ரூ.900 முதல் ரூ.1,450 வரை இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விவரங்கள் கணக்கிடும்போது முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தால், இழப்பீடு வழங்கப்படாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் அல்லது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி தென்னை பராமரிப்புக்கு மானியம் வேளாண் அதிகாரி தகவல்.

பேராவூரணி தென்னை பராமரிப்புக்கு மானியம் வேளாண் அதிகாரி தகவல்.

தென்னை பராமரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கப்படும் என பேராவூரணி வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6290 எக்டர்பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் நோக்குடன் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம்பராமரிப்பு மானியம் வழங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பேராவூரணி வேளாண்மை உதவிஇயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்குடன், நோய் வாய்பட்ட, வயதான, மலட்டுத் தன்மையுடைய, உற்பத்தி திறனற்ற மரங்களை அகற்றிட மரம் ஒன்றிற்கு ரூ.1,000 வீதம், ஒரு ஹெக்டேர் பரப்பில் உள்ள175 மரங்களில் அதிகபட்சமாக 32 தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.32,500 மானியம் வழங்கப்படும்.

மேற்படியான பாதிப்புகள் உள்ள மரங்கள்கண்டறியப்பட்டு அவையாவும் அடையாளமிடப்பட்டு முதல் நிலை புள்ளி விபரங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரால் தயார் செய்யப்பட்டு மேற்படி விபரங்கள் யாவும் வேளாண்மை அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு பின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரால் மேற்கண்ட தென்னை மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்கப்படும். ஒப்புதல் வழங்கப்பட்ட 3 மாத காலத்திற்குள் அவை யாவும் அகற்றப்படல் வேண்டும்.தென்னை மரங்களை அகற்றி அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகளை நடுவதற்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 100 மரங்களுக்கு ரூ.4,000 வீதம் மானியமாக வழங்கப்படும்.

எனவே பேராவூரணி வட்டாரத்தில் உள்ளதென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளில் இதுபோன்று ஒட்டுமொத்த பரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் உடனே தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இன்று ஜுலை 30.

வரலாற்றில் இன்று ஜுலை 30.

ஜுலை 30 (July 30) கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.
1629 – இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1733 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.
1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1930 – உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 – எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.
1966 – உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.
1971 – அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.
1971 – ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1997 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1818 – எமிலி புரொண்டி, ஆங்கில நாவலாசிரியர் (இ. 1848)
1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1947)
1947 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், நடிகர், அரசியல்வாதி

இறப்புகள்

1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்
2003 – கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917)

சிறப்பு நாள்

வனுவாட்டு – விடுதலை நாள் (1980)
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு

பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு

பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஜஸ்டின் அண்மையில் ஆய்வு செய்தார். பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் காலகம் கிராமத்தில் நீர் பற்றாக்குறையினால் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாத இடத்தில் நெல்லுக்கு மாற்றாக உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த 3 ஏக்கர் பரப்பினை பார்வையிட்டு உளுந்து சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் டிஏபி மற்றும் திரவ உயிர் உரங்களை உடனுக்குடன் வழங்கிட அறிவுறுத்தினார்.
பின்னர் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து வரும் இடுபொருள் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். இதுவரை நெல் சாகுபடிக்கான திரவ உயிர் உரங்கள் 500 ஏக்கர் பரப்பளவிற்கும் நெல் நுண்ணூட்டம் 168 ஏக்கர் பரப்பளவிற்கும், சிங்க் சல்பேட் 450 ஏக்கர் பரப்பளவிற்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
குறுவை நெல் சாகுபடிக்கு மாற்றாக உளுந்து சாகுபடிக்கு இதுவரையில் 538 ஏக்கர் பரப்பளவிற்கு 4300 கிலோ உளுந்து சான்று விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதையும், டிஏபி உரம் 500 ஏக்கர் பரப்பளவிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்து ஜூலை 31-க்குள் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் பணிபுரிந்து அளிக்கப்பட்ட இலக்கினை தொய்வின்றி அடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பேராவூரணி வட்டார உதவி இயக்குநர் ஆர். மதியரசன், வேளாண்மை அலுவலர் சு. ராணி, உதவி அலுவலர் என். சாந்தஷீலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Saturday, July 29, 2017

பேராவூரணியில் நகர்பகுதியில் மிதமான மழை.

பேராவூரணியில் நகர்பகுதியில் மிதமான மழை.




பேராவூரணியில் இடியுடன்  கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பேராவூரணி அடுத்த பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்
கூடம்.

பேராவூரணி அடுத்த பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம்.

பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட உள்ளது.பேராவூரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சமுதாய கூடம் அமைப்பதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமையன்று சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா சாணாகரையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில கயறு வாரிய தலைவர் நாடாகாடு நீலகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் உ.துரைமாணிக்கம், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், வி.பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் கங்கா செல்வம், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சாந்தி அசோக்குமார், ஒப்பந்ததாரர் ஞானம், கணேஷ் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
நன்றி: தீக்கதிர்
இன்றைய(ஜூலை 29) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஜூலை 29) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.37 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பேராவூரணி கடைவீதியில் தீ விபத்தில் அடுப்பு கரிக்கடை எரிந்து நாசம்.

பேராவூரணி கடைவீதியில் தீ விபத்தில் அடுப்பு கரிக்கடை எரிந்து நாசம்.

பேராவூரணி கடைவீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ 3 லட்சம் மதிப்பிலான அடுப்பு கரி எரிந்து சாம்பலானது.பேராவூரணி பள்ளிவாசல் அருகில் ஆனந்தவள்ளி வாய்க்கால் தென்கரையில் டீக்கடை, ஓட்டல்மற்றும் இரும்பு பட்டறைகளுக்கு பயன்படும் அடுப்புக்கரி விற்பனை செய்யும் கடை உள்ளது. பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் சத்தார் என்பவர் மகன் அப்துல் ஜபார் ( 60) பல ஆண்டுகளாக இங்கு கடைநடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழனன்று இரவு கடையை மூடிவிட்டு அப்துல்ஜபார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அடுப்புக்கரி கடையில் திடீரென புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரிவதைக் கண்டஇவ்வழியே சென்ற தொழிலாளி தீயணைப்பு நிலையத்திற்கும், அப்துல் ஜபாருக்கும் தகவல் தெரிவித்தார்.

மேலும் தகவல் அறிந்துஅதிகாலை 3 மணிக்கெல் லாம் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக் குமார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இத்தீவிபத்தில் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 350 அடுப்புக்கரி மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்துபேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அடுத்த ரெட்டவயல் மணக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை.

பேராவூரணி அடுத்த ரெட்டவயல் மணக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை.

பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் - மணக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், விவசாய சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான வி.கருப்பையன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, “வீரக்குடி வழியாக செல்லும் மணக்காடு- ரெட்டவயல் இணைப்பு சாலை வழியாக தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன. இச்சாலையை மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர்பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 6 கி.மீ நீளமுள்ள இச்சாலை, கடந்த 5 வருடங்களாக செப்பனிப்படாமல் குண்டுங் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள், பேருந்துகள் இப்பகுதியில் செல்லமுடியாத நிலையில் உள்ளன.

வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதும், விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாகி விட்டது. இதனால் பேருந்துகள் இவ்வழியே வருவதில்லை எனபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து,சாலை அமைத்து தரவேண்டும்” என அம்மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் கூறுகையில், “ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி ரெட்டவயல் கடைவீதியில் மறியலில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

நன்றி:தீக்கதிர்
வரலாற்றில் இன்று ஜுலை 29.

வரலாற்றில் இன்று ஜுலை 29.

ஜுலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1014 – பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.
1030 – டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.
1567 – முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1830 – பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
1848 – அயர்லாந்தில் “டிப்பெரரி” என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
1851 – 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1899 – முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
1900 – இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
1921 – ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
1957 – அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.
1967 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்” என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.
1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
1987 – இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
1999 – இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 – ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

1883 – முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
1904 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)
1905 – டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)

இறப்புகள்

1913 – டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)
1974 – கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
1999 – நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி
2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
2009 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)

சிறப்பு நாள்

ருமேனியா – தேசிய கீத நாள்
சர்வதேச புலிகள் காப்பக தினம்

Friday, July 28, 2017

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் தமிழ்
தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்.

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்.

புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சியோமி எம்.ஐ. 5X ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு தகவல்கள்.

சியோமி எம்.ஐ. 5X ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு தகவல்கள்.





சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. 5X ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ள எம்.ஐ. 5X ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆடியோ தரம் கொண்டுள்ளது.

மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் வளைந்த எட்ஜஸ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 பிளஸ் சார்ந்த வடிவமைப்பு கொண்டுள்ள புதிய எம்.ஐ. 5X மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சியோமி எம்.ஐ. 5X சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல்-எச்டி 1080x1920 பிக்சல் LTPS டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம்
* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
* 3080 எம்ஏஎச் பேட்டரி

புதிய எம்.ஐ. 5X ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளது. சீனாவில் இதன் விலை CNY 1,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 


எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்.

எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மணிமண்டபம் குறித்து அதன் பொறியாளர் பவன் குமார் கூறும்போது, ஆக்ராவிலிருந்து சிவப்பு நிற கற்கள் மற்றும் மஞ்சள் நிற கற்கள் கொண்டு வரப்பட்டது. 4 காட்சியறைகள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 700 வகையான மலர்ச் செடிகள் நடபட்டுள்ளது. அவை ஆண்டு முழுவதும் பூக்க கூடியவை. கலாமுக்கு மலர்ச் செடிகள் மிகவும் பிடிக்கும். இதனால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அவரின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலத்துடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றியதாகக் கூறுகிறார்.

2 புள்ளி 1 ஏக்கர் பரப்பிலான இந்த மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற கிரானைட் கற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்தும், சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும், உட்புறம் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை கிரானைட் கற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ இருந்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் மணிமண்டபம் உப்புக்காற்றால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் முகப்பு வாயில் கதவு மலேசிய தேக்கு மரத்தால் காரைக்குடி தச்சர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் உட்புறத்தின் நான்கு மூலைகளிலும் கலாமின் நான்கு விதமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நினைவு மண்டபத்தை சுற்றிலும் வண்ண வண்ண பூச்செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன.

கலாம் பயன்படுத்திய பொருட்கள், அவரது புகைப்படங்கள், அவரது ஆடை, அக்னி ஏவுகணை மாதிரி போன்றவையும் மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன. கலாமின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரைபடங்களும் அரங்கு முழுவதும் நிறைந்துள்ளன.
பேராவூரணி கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்.

பேராவூரணி கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்.



பேராவூரணி பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போய் கருகி வருகின்றன.தஞ்சை மாவட்டத்தில் வளமான பகுதிகளில் பேராவூரணி பகுதி முக்கியமானதாகும். கடைமடைப்பகுதியான இங்கு காவிரியின் கிளை வாய்க்கால் ஓடி வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் இருந்ததாலும் நெல், கடலை, வாழை, தென்னை என பணப்பயிர்கள் குறைவின்றி விளைந்து, விவசாயிகளுக்கு லாபம் கொடுத்து வந்தன.இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வானம் பொய்த்து இயற்கை கைவிட்டதாலும், காவிரியின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இன்றி போனதாலும் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடி கைவிட்டு போனது.

மழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நூறடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 350-400 அடிக்கு கீழே போய்விட்டது. இதனால் ஆழ்துளைக்கிணறுகள் வறண்டு போய் நீர்வரத்து இல்லாமல் ஆயின. கடும் வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கால்நடைகள், பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தண்ணீர் இல்லாததால் தென்னை மற்றும் வாழை போன்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக வாழை, தென்னை போன்ற பயிர்கள் வறட்சியின் கோரத் தாண்டவத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப்போய், மட்டைகள் கருகி கீழே சாய்ந்து வருகிறது.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.அவ்வாறு வழி இல்லாத இடங்களில் தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. தப்பித்தவறி காய்க்கும் தென்னை மரங்களில் காய்கள் திரட்சியின்றி சிறுத்துக் காணப்படுகின்றன. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இயற்கை இரங்கி மழை பெய்தால் மட்டுமே பட்டுக் கருகி வரும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியும்.
வரலாற்றில் இன்று ஜுலை 28.

வரலாற்றில் இன்று ஜுலை 28.

ஜுலை 28 (July 28) கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1364 – பிசா குடியரசுப் படைகளும், ப்ளோரன்ஸ் குடியரசுப் படைகளும் இத்தாலியில் உள்ள காசினா என்ற இடத்தில் மோதிக்கொண்டன.
1493 – மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
1540 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.
1586 – முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.
1609 – பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.
1794 – பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
1808 – இரண்டாம் மஹ்மூத் ஓட்டோமான் பேரரசின் சுல்தனாகவும், இஸ்லாமிய கலிபாவாகவும் ஆகினார்.
1821 – பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1914 – முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.
1915 – ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1945 – அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
1957 – ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.
1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1976 – சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.
1996 – வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2005 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.
2005 – இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.
2006 – ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1936 – சோபர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் துடுப்பாளர்
1951 – சந்தியாகோ கலத்ராவா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்
1954 – குகொ சவெஸ், வெனிசுவேலா ஜனாதிபதி
1977 – மனு ஜினோபிலி, ஆர்ஜெண்டீனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

சிறப்பு நாள்

பெரு – விடுதலை நாள் (1821)

Thursday, July 27, 2017

பேராவூரணி குமரப்பா பள்ளி மற்றும் தினமணி இணைந்து நடத்தும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்
கலாம் நினைவஞ்சலி பேரணி.

பேராவூரணி குமரப்பா பள்ளி மற்றும் தினமணி இணைந்து நடத்தும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவஞ்சலி பேரணி.

பேராவூரணியில் டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த பேராவூரணி குமரப்பா பள்ளி மற்றும் தினமணி நாளிதழ் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

நன்றி:JCK.RAJA ARSHAD
பேராவூரணி அடுத்த இந்திராநகர் INCC நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான
கிரிக்கெட் போட்டி.

பேராவூரணி அடுத்த இந்திராநகர் INCC நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி.

இந்திராநகர் INCC நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி.
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே வழங்கல்.

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே வழங்கல்.

பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 17 லட்சத்திலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகளை பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். பேராவூரணி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எக்ஸ்ரே கருவி பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் நிலை ஏற்பட்டால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கும் நிலை இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பேராவூரணி பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ரூ. 11 லட்சத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான எக்ஸ்ரே கருவியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் (பொ) ஜஸ்டின்பிரசாந்த் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் எஸ்.எம். நீலகண்டன், கே.பி. சேகர், சுரேஷ், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேராவூரணி அருகே மணக்காட்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு ரெட்டவயலில் பொதுமக்கள் சாலை
மறியல்.

பேராவூரணி அருகே மணக்காட்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு ரெட்டவயலில் பொதுமக்கள் சாலை மறியல்.



பேராவூரணி அருகே மணக்காடு பகுதியில்அரசு டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்தும், கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் ரெட்டவயல் கடைவீதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டம் மணக் காடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதை அறிந்த மணக்காடு, வீரக்குடி, ரெட்டவயல், கொளக் குடி, அமர சிம்மேந்திரபுரம் கிராமஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ‘டாஸ்மாக் மதுபான எதிர்ப்பு கூட்டமைப்பு’ ஏற்படுத்தியுள்ளனர். இவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் “பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை அமைத்தால் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம்” என எச்சரித்திருந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள்,சார்பில் கடந்த வாரம் பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.

அம் மனுவில், “பேராவூரணி வட்டம் மணக்காடு பகுதியில் செந்தாமரை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை தொடங்க உள்ளனர்.மணக்காடு ஊராட்சி மிகவும் பின்தங்கிய பகுதி. ஆதிதிராவிடர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும்பெண்கள், வெளியூர் சென்று வேலை செய்து வருவோர் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் பேருந்துவசதி போதிய அளவில் இல்லாதபகுதியாக இருப்பதால், ரெட்டவயல் - மணக்காடு சாலையில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் தனியே நடந்து வரும்போது அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட் டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே மேற்கண்ட இடத்தில்மதுக்கடை அமைக்க அனுமதிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள், கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி புதன்கிழமை காலை ரெட்டவயல் கடைவீதியில் சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கறுப்புக் கொடிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன், வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், கிராம நிர்வாக அலுவலர்மோகன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் தரப்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையன், விவசாயிகள் சங்க நிர்வாகி கொரட்டூர் நீலகண்டன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில்வியாழன் (ஜூலை 27) அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், அதில் சமரச தீர்வு காணலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நன்றி:தீக்கதிர்
வரலாற்றில் இன்று ஜுலை 27.

வரலாற்றில் இன்று ஜுலை 27.

ஜூலை 27 (July 27) கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.
1549 – பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.
1627 – தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
1794 – பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
1862 – சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த “கோல்டன் கேட்” என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.
1865 – வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.
1921 – பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
1929 – மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை
1941 – ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
1955 – ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
1975 – விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1983 – வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
1990 – பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
1997 – அல்ஜீரியாவில் “சி செரூக்” என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.
2007 – பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

பிறப்புகள்

1824 – அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)
1853 – விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)
1879 – நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)
1955 – அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்

இறப்புகள்

1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)
1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)
2015 – டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசுத்தலைவர், அறிவியலாளர் (பி. 1931)

Wednesday, July 26, 2017

பேராவூரணி அடுத்த கொன்றைக்காட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்.

பேராவூரணி அடுத்த கொன்றைக்காட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்.

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமையாசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு பேசுகையில், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதாலும் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்துவதன் மூலமும் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். தண்ணீரை காய்ச்சி பருகுவதோடு சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கை பற்றி கூறுவதை பெற்றோர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. டாக்டர்கள் இலக்கியா, கோகிலா, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன், தவமணி பங்கேற்றனர்.

நன்றி:தினகரன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:தஞ்சாவூர் ஒன்றியம் நீலகிரி, மேலவெளி, திருவையாறு ஒன்றியம் வைத்தியநாதன்பேட்டை, கீழத்திருப்பூந்துருத்தி, பூதலூர் ஒன்றியம் புதுக்குடி, வெண்டையம்பட்டி, ஒரத்தநாடு ஒன்றியம் கருக்காடிப்பட்டி, புலவன்காடு,  திருவோணம் ஒன்றியம் பாதிரக்கோட்டை வடக்கு, நெம்மேலிதிப்பியக்குடி, கும்பகோணம் ஒன்றியம் திருப்புறம்பியம், சேங்கனூர், திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ். புதூர், கொத்தங்குடி, திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர், பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம், பசுபதிகோவில், அம்மாப்பேட்டை ஒன்றியம் செருமாக்கநல்லூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் பண்ணவயல், மதுக்கூர் ஒன்றியம் அத்திவெட்டி, சிரமேல்குடி, பேராவூரணி ஒன்றியம் காலகம், புனவாசல் ஆகிய ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்புப்படி சமூகத் தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக் குழுவினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
பேராவூரணியில் களைகட்டும் மொய் விருந்து விழா.

பேராவூரணியில் களைகட்டும் மொய் விருந்து விழா.





பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஆகிய பகுதிகளில் மொய் விருந்து கலாசாரம் இருந்து வந்தது. தற்போது இது, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், குளமங்கலம், புள்ளான்விடுதி, நெடுவாசல், மேற்பனைக்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியுள்ளது. ஆடி, ஆவணி மாதங்களில் பிரபலமான விழா என்றால் அது மொய் விருந்து விழா தான்.

தமிழகத்தில் “மொய்விருந்து” என்ற பெயரை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது சின்னக்கவுண்டர் திரைப்படமும், விஜயகாந்தும் சுகன்யாவும் தான், ஆனால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டப்பகுதிகளில் யாரிடம் “மொய்விருந்து” என்ற வார்த்தையை கூறினாலும் அவர்கள் கூறும் ஒரே வார்த்தை “பேராவூரணி” தான். அது என்ன மொய்விருந்து?? அதுக்கும் பேராவூரணிக்கும் என்ன சம்பந்தம் என அனைவரும் கேட்கலாம்.

ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் பேராவூரணி மற்றும் அதன் சுற்றூவட்டாரப்பகுதிகளில் சற்று வித்தியாசமாக மொய்விருந்து விழா களை கட்டத்தொடங்கிவிடும். 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பேராவூரணியில் நடைபெறும் வினோத விழாவான மொய்விருந்து தற்போது சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரையிலும் பரவிவருகிறது.

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் பேராவூரணியில் சில புதிய விதிமுறைகளுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை மொய் போட்டவர்களிடமிருந்து இரண்டு மடங்காக வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக நடத்தப்பட்டுவருகிறது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை இரண்டுமடங்காக வசூலிப்பதற்காகவே 5 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்பகுதி மக்கள் மொய்விருந்து என்னும் வினோத விழாவை வைக்கிறார்கள்.

இந்த மொய்விருந்து விழா பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆடி, ஆவணி மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, பேராவூரணியில் எல்லா விழா மண்டபங்களிலும் தினந்தோறும் மொய்விருந்து விழா நடைபெறும். இதற்கென பேராவூரணியின் பல இடங்களிலும் ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிறார்கள். இதற்கென அச்சிடப்படும் சிறப்பு அழைப்பிதழின் அடியில், ‘என்னால் சிலபேருக்கு இரண்டு மூன்று தடவைகள் மொய் செய்யப்பட் டுள்ளது. எனவே இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விருந்துண்டு மொய் செய்து விழாவை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ குறிப்பிட்டிருப்பார்கள். பேராவூரணி நகரில் வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

இந்த விழாவின் போது பேராவூரணி நகர் முழுவதும் ஆட்டுக்கறி குழம்பும், அரிசி சோறின் வாசனைக்காகவே பலர் மொய்விருந்து நடைபெறும் மண்டபங்களை சுற்றிவருவர். மொய்விருந்தின் போது நெல்லுச்சோறும் ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. சைவ சாப்பாடுகளை கொண்டு மொய்விருந்து நடத்துபவர்களுக்கு அவ்வளவாக மரியாதை இல்லை.

இந்த மொய்விருந்தில் சாப்பிடுபவர்கள் அனைவரும் பந்தி தொடங்கும் போது சாப்பிட தொடங்கவேண்டும், அனைவரும் சாப்பிட்டு பந்தியிலிருந்து எழுந்துவிட்டால் யாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க கூடாது, உடனே இலையை மூடிவிட்டு எழுந்துவிட வேண்டும். குறிப்பாக மொய் போட்டவர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள், இதை கருத்தில் கொண்டு சில புத்திசாலிகள் மொய் சாப்பாடு டோக்கன் கொடுத்துவிடுத்துவிடுவார்கள்.
மொய் வசூல் செய்வதற்காக பல கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை அண்டாவில் போட்டு பின்னர் கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மொய்விருந்தில் ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் வரை வசூலானதாம்.

மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. இதனால் தங்களது சாப்பாடு, மண்டபச்செலவு உள்ளிட்ட பல செலவினத்தை குறைத்துக்கொள்வார்கள். சிலர் இதில் ரொம்ப சிக்கனம் பார்த்து ஒரே மொய் பத்திரிக்கையில் 10 பேரின் அழைப்பை இடம்பெறச்செய்வர். மெய்விருந்தின் கதாநாயகனே இந்த மொய்பத்திரிக்கை தான், ஏனென்றால் ஒருவருக்கு நீங்கள் பத்திரிக்கை கொடுக்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு தர வேண்டிய உங்களது இருமடங்கு பணத்தை திருப்பித்தர மாட்டார். வரவினத்தை தனித்தனியாக மொய் நோட்டு என்னும் சிறப்பு நோட்டில் எழுதிக்கொள்வார்கள். இந்த மொய்வரவை எழுதுவதற்கென பலர் பேராவூரணியில் இருந்துவருகிறார்கள். இந்த மொய்நோட்டில் ஒருவர் மொய் எழுதும் போது அவர் பேராவூரணி என்றால் பேராவூரணி கணக்கிலும், வெளியூர் என்றால் பல ஊர் கணக்கிலும் வரவு வைக்கப்படுவர். மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கியவர்களே ஈடுபடுவார்கள். அதே போல பணத்தை வாங்கி அண்டாவில் போடுவதற்கும் ஒருவர் அமர்ந்திருப்பார்.
.
இதேப்போல பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீட்டுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். சில மொய்விருந்து மண்டபங்களில் வங்கிகளின் ஸ்டால்கள் கூட இடம் பெற்றிருக்கும். மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், புதிய வீடுகட்டுதல், புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன. ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

திருமணத்துக்கு பத்திரிகை வைத் தால்கூட போகாமல் இருந்துவிடலாம். ஆனால், மொய் விருந்து பத்திரிகையை வாங்கி வைத்துவிட்டு போகாமல் இருந்தால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். ஒருவர் நமக்கு ஏற்கெனவே 1000 ரூபாய் மொய் செய்திருந்தால் திருப்பி அதை இரண்டு மடங்காக 2000 ரூபாய் செய்யவேண்டும். மொய் விருந்துக்கு போகாமல் இருந்துவிட்டால், நமக்காக சமைத்த சாப்பாட்டை மறுநாள் காலையில் கூலி ஆட்கள் மூலம் கொடுத் தனுப்பி மொய் பணத்தை திருப்பிக் கேட்டு அசிங்கப்படுத்திய சம்பவங்களும் ஒரு காலத்தில் நடந்ததுண்டு. இப்போது அதுபோல ‘தரை ரேட்டுக்கு’ அசிங்கப்படுத்தாமல் கொஞ்சம் நாசூக்காக அசிங்கப்படுத்துகிறார்கள். மொய் விருந்து முடிந்த 5-வது நாள், சம்பந்தப்பட்டவரே நேரடியாக வீட்டுக்குப் போய், ‘‘உங்களுக்கு இன்னின்ன தேதிகளில் இவ்வளவு மொய் செய்திருக்கிறேன். அதை முறையாக திருப்பிக் கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டு வாங்கிப் போய்விடுவார். தனி ஆவர்த்தனம் போதாதென்று கோஷ்டி கானம் வேறு. ஐந்தாறு பேர் சேர்ந்து மண்டபம் பிடித்தும் கூட்டாக மொய் விருந்து கொடுத்து அவரவருக்கு வர வேண்டிய வருமானத்தை தனித் தனியாக பாகம் பிரித்துக்கொள்கிறார்கள்.

இந்த மொய்விருந்து விழாவானது, பல நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ள விழாவாகவே பலதரப்பட்ட மக்களால் பார்க்கப்படுகிறது. மொய் விருந்துக்கு எதிராக விமர்ச னங்கள் கிளம்பினாலும் அதை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராவூரணி தாலுகா கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ‘‘நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் மொத்தமாக ரெண்டு லட்சம் மூணு லட்சத்தை பார்ப்பது கஷ்டம். அவர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். தங்களுக்கு மொத்தமாக ஒரு தொகை தேவைப்படும்போது மொய் விருந்து வைத்து வசூலித்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒருவகை சேமிப்பு. வசூலுக்காக நடத்துவதுபோலத் தெரிந்தாலும், மொய் விருந்துகள் பல குடும்பங்களில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

இதை மறுத்துப் பேசிய பட்டுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் கந்தசாமி, ‘‘வீட்டில் பிள்ளைகள் இருந்தால் காதுகுத்து, சடங்கு, கல்யாணம் போன்ற திருவிழாக்கள் மூலம் மொய்ப் பணம் வசூலாகிவிடும். பிள்ளை இல்லாதவர்கள் மொய்ப் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் ஏழைகளுக்கு கைகொடுக்கவும்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்த மொய் விருந்து பழக்கம். இப்போது காரண காரியம் இல்லாமல் நடக்கிறது. ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மொய் செய்யப்பட்டிருந்தால், அதை ரூ.20 ஆயிரமாக திருப்பித் தரும் நிலையில் அவர் இருப்பாரா? வீண் கவுரவத்துக்காக கடன் வாங்கி மொய்யை திருப்பிச் செலுத்துவார். இப்படி மொய் விருந்துக்காக கடன் வாங்கிவிட்டு பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இனியும் மொய் விருந்துகள் தேவையா என்று சம்பந்தப்பட்டவர்கள்தான் யோசிக்கவேண்டும்’’ என்றார்.

எது எப்படி இருந்தாலும் பேராவூரணியின் தமிழக அடையாளமாக மாறிப்போன மொய்விருந்து, பேராவூரணியில் பல கோடிகளை புரளவைத்திருக்கிறது என்பது தான் உண்மை.