பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை நாள் விழாவையொட்டி 60 விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் ரா. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் நடராஜன் தென்னை சாகுபடி குறித்த தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.
பட்டுக்கோட்டை வேளாண் அலுவலர் எஸ். மாலதி, பேராசிரியர் சேகரன், தென்னை ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் நடராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகன்தாஸ், தொழிலதிபர் கிருஷ்ணபிரதாப் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
தென்னைக்கு வேர் மூலம் பூச்சி மருந்து மற்றும் டானிக் செலுத்துதல், வாய்க்கால் அமைக்கும் கருவி, தென்னை மரம் ஏறும் கருவி, போர்டோ கலவை தயாரிக்கும் முறை ஆகியன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்னை விவசாயிகள்- பேராசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் தங்கேஸ்வரி நன்றி கூறினார்.
0 coment rios: