Saturday, April 28, 2018

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் காவடி விடியோ இனைப்பு.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் காவடி விடியோ இனைப்பு.



பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா 2018 விடியோ இனைப்பு.

நன்றி : பேரை டிவி

Thursday, April 26, 2018

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருகோயில் தேர் திருவிழா நாளை.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருகோயில் தேர் திருவிழா நாளை.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி தேர் திருவிழா வருகை தரும் அனைவரும் வருக வருக என அன்புடன் வரவேற்பது பேராவூரணி டவுன் இணையதளம்.

Tuesday, April 24, 2018

பேராவூரணி சித்திரை திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி சித்திரை திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா முடப்புளிக்காடு கிராமத்தார்களால்  நடத்தப்படும் 5-ஆம் நாள் நிகழ்ச்சி.

Sunday, April 22, 2018

பேராவூரணி சித்திரை திருவிழா மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நேரலை.

பேராவூரணி சித்திரை திருவிழா மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நேரலை.



பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா பேராவூரணி பேரூராட்சி மண்டகப்படிதாரர்களால் நடத்தப்படும் 3-ஆம் நாள் நிகழ்ச்சி பேரை டிவியின் நேரலை.

நன்றி : பேரை டிவி

பேராவூரணி சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா 2018.

பேராவூரணி சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா 2018.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா  வருகை தரும் அனைவரும் வருக வருக என அன்புடன் வரவேற்பது பேராவூரணி டவுன் இணையதளம்.

பேராவூரணியில் விநோதம் அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்கநாணயம்.

பேராவூரணியில் விநோதம் அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்கநாணயம்.

பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு 1000 ரூபாய்  ஊக்கத்தொகையும் கிராம மக்கள் வழங்குகின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு
ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு. ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் சேர்ந்தனர்.

புதிதாக சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரி அங்கயற்கண்ணி தலைமையில் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் புதிதாகசேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். 15 குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது என்றும் அவர்களுக்கும் இதேபோல் தங்க நாணயமும் ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்றி:தினகரன்

Saturday, April 21, 2018

பேராவூரணி சித்திரை திருவிழா 3-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி சித்திரை திருவிழா 3-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா பேராவூரணி பேரூராட்சி  மண்டகப்படிதாரர்களால் நடத்தப்படும் 3-ஆம் நாள் நிகழ்ச்சி.



பேராவூரணி சித்திரை திருவிழா இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நேரலை.

பேராவூரணி சித்திரை திருவிழா இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நேரலை.



பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா  2-ஆம் நாள் சங்கரன் வகையறாக்கள் மண்டகப்படி  நடத்தப்படும் இரண்டாம் நாள் நிகழ்ச்சி. பேரை டிவியின் நேரலை.

நன்றி : பேரை டிவி

பேராவூரணி அடுத்த தென்னங்குடி அருள்மிகு தானாண்டாள் அம்மன் மஹா கும்பாபிஷேக விழா
22.04.2018.

பேராவூரணி அடுத்த தென்னங்குடி அருள்மிகு தானாண்டாள் அம்மன் மஹா கும்பாபிஷேக விழா 22.04.2018.



பேராவூரணி அடுத்த தென்னங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு தானாண்டாள் அம்மன் திருக்கோயில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

Friday, April 20, 2018

பேராவூரணி சித்திரை திருவிழா 2-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி சித்திரை திருவிழா 2-ஆம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா 2-ஆம் நாள் சங்கரன் வகையறாக்கள் மண்டகப்படி திருவிழா அழைப்பிதழ்.

 
பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி
புகைப்படத் தொகுப்பு.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி.











 
பேராவூரணி சித்திரை திருவிழா 1-ம் நாள் நேரலை நிகழ்ச்சி.

பேராவூரணி சித்திரை திருவிழா 1-ம் நாள் நேரலை நிகழ்ச்சி.



பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் நடத்தப்படும் முதல் நாள் நிகழ்ச்சி. பேரை டிவியின் நேரலை.

நன்றி : பேரை டிவி

Thursday, April 19, 2018

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று
காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருள்மிகு  ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவிற்கு அனைத்து ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வழிபாடுவார்கள்.


12 நாட்கள் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் கீழே தரப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி உற்சவ திருவிழா(1-ம் நாள் திருவிழா) இன்று சித்திரை 07 (20.04.2018) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.


2-ம் நாள் திருவிழா - சித்திரை 08 (21.04.2018) - கேடகம்.


3-ம் நாள் திருவிழா - சித்திரை 09 (22.04.2018) - காமதேனுவாகன வீதி உலா.


4-ம் நாள் திருவிழா - சித்திரை 10 (23.04.2018)- பூதவாகன வீதி உலா.


5-ம் நாள் திருவிழா-சித்திரை 11 (24.04.2018)- அன்னவாகன வீதி உலா.


6-ம் நாள் திருவிழா - சித்திரை 12 (25.04.2018)- மயில் வாகன வீதி உலா.


7-ம் நாள் திருவிழா - சித்திரை 13 (26.04.2018)- ரிஷப வாகன வீதி உலா.


8-ம் நாள் திருவிழா - சித்திரை 14 (27.04.2018)- குதிரை வாகன வீதி உலா.


9-ம் நாள் திருவிழா - சித்திரை 15 (28.04.2018)- தேரோட்டம், காவடி - பால்குடம்.


10-ம் நாள் திருவிழா - சித்திரை 16 (29.04.2018)- தீர்த்தவாரி விழா.


11-ம் நாள் திருவிழா - சித்திரை 17 (30.04.2018)- திருக்கல்யாணம், தெப்ப விழா.


12-ம் நாள் திருவிழா - சித்திரை 18 (01.05.2018)- விடையாற்றி உற்சவம்.


9-ம் நாள் திருவிழாவான 28.04.2018 அன்று தேரோட்டமும் நடக்கிறது. வருடம்தோறும் இந்த தேரோட்டத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். மேலும் அன்றைய தினத்தன்று பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பால்காவடி, பறவை காவடி, பால்குடம், பல்வேறு வகையான காவடிகள் பக்தர்கள் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். 11-ம் திருவிழாவான 30.04.2018 அன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது. திருவிழாவின் நிறைவாக 01.05.2018 அன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





பேராவூரணி சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் நடத்தப்படும் முதல் நாள் நிகழ்ச்சி.

பேராவூரணியில் நாளை(21.04.2018) மின்தடை.

பேராவூரணியில் நாளை(21.04.2018) மின்தடை.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக் காடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் சனிக்கிழமையன்று 21.04.2018  காலை 9 முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Monday, April 16, 2018

தேர் செல்லும் வீதியில் மண் அடிக்கும் பணி துவக்கம்.

தேர் செல்லும் வீதியில் மண் அடிக்கும் பணி துவக்கம்.

பேராவூரணி அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா (20.04.2018) அன்று துவங்கிறது. தேர் வீதியில் மண் அடிக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.













பேராவூரணி நல்லேர் பூட்டி வயலை உழுத விவசாயிகள்.

பேராவூரணி நல்லேர் பூட்டி வயலை உழுத விவசாயிகள்.

சித்திரை மாதம் முதல் நாளில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இந்த ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று இயற்கையை வேண்டுவதே இதன் நோக்கமாகும். இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் என்ற நல்லேர் உழவு என்றும் அழைப்பார்கள்.  வயலில் விவசாயிகள் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Saturday, April 14, 2018

பேராவூரணி சிதிரைத் திருநாள் முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் பேரை டிவியின் நேரலை
நிகழ்ச்சி.

பேராவூரணி சிதிரைத் திருநாள் முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் பேரை டிவியின் நேரலை நிகழ்ச்சி.

பேராவூரணியில் சிதிரைத் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் பேரை டிவியின் நேரலை நிகழ்ச்சி.



நீலகண்டபிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 20-இல் தொடக்கம்

நீலகண்டபிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 20-இல் தொடக்கம்

பேராவூரணியில் ஏந்தல் என்னும்பகுதியில் நீலகண்டபிள்ளையார் கோவில் அமைந்துள் ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவுதிருவிழா கொடியேற்றம், காப்பு அணிதல் தொடங்கி பால்குடம், காவடி, தேரோட்டம், தீர்த்தம், திருக்கல்யாணம், தெப்பம் என விடையாற்றியுடன் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்காக ஏப்ரல் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குகொடியேற்றமும், இரவு 10 மணிக்கு காப்பு அணிதலும்நடைபெறுவதோடு முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 12 ஆம் நாள் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகஅதிகாரி டி. கோவிந்தராசு, திருக்கோயில் பணியாளர்கள்,முடப்புளிக்காடு கிராமத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இத்தகவலை திருக்கோவிலின் நிர்வாக அதிகாரிடி.கோவிந்தராசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள்
பங்கேற்பு.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்  பங்குனி பெருந்திருவிழா கடந்த மார்ச் 27ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் நாடியம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவிளக்கு திருவிழா நடந்தது. இதில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள், நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை கோயில் தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து ேதர் இழுத்து சென்றனர். தேரடி தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார்கோயில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. நாடியம்மனின் 2ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை மீனாட்சி அம்மன் தரிசனமும், இரவு முத்து பல்லக்கில் வீதியுலாவுடன் நாடியம்பாள் கோட்டைக்கு எழுந்தருளுவார். நாளையுடன் திருவிழா முடிவடைகிறது.

பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு.

பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு.

பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் தீ தொண்டு நாள் வாரத்தையொட்டி பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Friday, April 13, 2018

Wednesday, April 11, 2018

பேராவூரணி அடுத்த பூக்கொல்லை காட்டாறு கழிவுகளால் நிரம்புகிறது.

பேராவூரணி அடுத்த பூக்கொல்லை காட்டாறு கழிவுகளால் நிரம்புகிறது.

பேராவூரணி அருகே பூக்கொல்லை - ரெட்டவயல் பூனைகுத்தியாறு காட்டாறில் இறைச்சிஉள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை-ரெட்டவயல் பூனை குத்தியாறு காட்டாறு, இப்பகுதி மக்களின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக பூக் கொல்லை பகுதியில் கோழி இறைச்சிகழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை காட்டாற்றில் மர்மநபர்கள் கொட்டுகின்றனர். இவை மலை போல்குவிந்துள்ளன. இதனால் காட்டாறு மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்பட் டுள்ளது. எனவே இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Sunday, April 8, 2018

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை பெருந்திருவிழா
முன்னிட்டு குளத்தை சுத்தம் செய்து தண்ணீர் விடப்பட்டது.

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு குளத்தை சுத்தம் செய்து தண்ணீர் விடப்பட்டது.

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் ஆலயம் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு நேற்று காலை (05.04.2018) யாக குண்டம் அமைத்து பூஜைகள் செய்யபட்டு தண்ணீர் விடப்பட்டது.