முத்துப்பேட்டையில் இருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் சுமார் 15 கி.மீ கடல் தொலைவில் 12 ஆயிரம் ஸெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த காடுகள் தான் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்.. ஆற்று நீரும் கடல் நீரும் கலக்கும் பகுதியில் குறைந்த உப்பு தன்மை உள்ள பகுதிகளில் வளரும் மரங்கள் கொண்டது இந்த காடுகள். கடல் அலை வேகத்தையும் காற்றின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால் "அலையாத்தி காடுகள்" எனப்படுகிறது. இதன் பெயர் " லகூன் " எனப்படும்.
இது சதுப்பு நில காடுகள் வகை சார்ந்தது. இங்கு அவினீசியா வகை தாவர மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து செல்கின்றன.
இவை வேர்கள் மூலம் சுவாசிப்பதால் தலைகீழாக வளர்ந்து தண்ணீரின் மேல் காட்சி அளிக்கிறது.
கடந்த 2004 சுனாமி மற்றும் 2008 நிஷா புயல் இவற்றில் இருந்து பாதுகாத்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களின் அரணாக விளங்குகியது..
சிறப்பு:
இந்தியாவில் உள்ள மொத்த அலையாத்தி காடுகளில் 61% முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என்பது தமிழகத்திற்கு தனிச்சிறப்பு...
படகில் பயணம் செய்தும், மரப்பலகைகளில் அடிக்கப்பட்ட நடைபாதைகளில் சென்றும் இதன் அழகை ரசிக்கலாம்...
போக்குவரத்து வசதி :
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை யில் இருந்து 15 கி.மீ. பேருந்து பயணமாகவும், திருவாரூரில் இருந்தும் நேரடி பேருந்து பயணமாகவும் செல்லலாம்...
இங்கு படகில் சுற்றி பார்க்க 10 பேருக்கு 800 முதல் 1000 வரை படகு கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
0 coment rios: