Monday, May 28, 2018

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி 02.06.2018.

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி 02.06.2018.


பேராவூரணி அடுத்த ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்டம் கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும்  02,03-06-2018    வெள்ளி, சனி,  ஞாயிறு கிழமை ஆகிய தேதிகளில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.


முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹30,001 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,001 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும், ஐந்தாம் இடம்  பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹301நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.


மேலும் தொடர்புக்கு : +91 8489204843





Sunday, May 27, 2018

Saturday, May 26, 2018

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம்.

திருவாரூரில் மிக பழமையான தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது.  சைவ தலங்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற மற்றும் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகவும் உள்ளது.
ஆசியாவிலேயே மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர் இக்கோயிலின் தேராகும்.  இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.  தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவில்கலந்துகொள்ளும்பக்தர்கள் மற்றும்பொதுமக்கள்தேரினைகோயிலைசுற்றிஉள்ளவீதிகளின் வழியே பக்தி பரவசத்துடன்இழுத்துவருவார்கள்.

Sunday, May 20, 2018

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி ஏரி, குளங்களை தூர்வார கோரிக்கை.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி ஏரி, குளங்களை தூர்வார கோரிக்கை.

பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்கள், நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:"பேராவூரணி வட்டாரம் முழுவதுமே, மழை பொய்த்ததால், ஏரி குளங்கள், நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. விவசாயப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடுகளுக்குக் கூட குடிக்க தண்ணீர் இன்றி தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடையின் தாக்கத்தால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.இச்சூழலில் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள ஆவணம், சித்தாதிக்காடு, அம்மையாண்டி, ஊமத்தநாடு, பெருமகளூர், விளங்குளம், வீரியங்கோட்டை, கொரட்டூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிறியதும், பெரியதுமான பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் வறண்டு போய், காட்டாமணக்கு செடிகள் மண்டி, மணல் மேடிட்ட நிலையில் புதர்களாய் காட்சி அளிக்கின்றன.பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள நீர்நிலைகளை உடனடியாக தூர்வாரி, வரும் மழை பருவத்திலாவது தண்ணீர் தேக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் பொதுக்குளங்களில் மண் அள்ள அனுமதிக்கப்படுவதால் ஆங்காங்கே உள்ள ஏரிகளில் மண் அள்ளி, பள்ளம் ஏற்படுகிறதே தவிர முறையான தூர்வாருதல் நடைபெறவில்லை.

மேலும் 100 நாள் வேலை திட்டமும் தற்போது நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நூறு நாள் வேலை திட்டத்தை துவங்கி இப்பகுதியில் உள்ள ஏரி குளங்களை மராமத்து செய்ய வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து செய்வதன் மூலம் வரும் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க முடியும். போர்க்கால அடிப்படையில் முறையாக திட்டம் தீட்டி, அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணிப்பில், நீர்நிலைகளை மராமத்து செய்ய வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில், மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்கும் விதமாக, உரிய இடங்களை கண்டறிந்து தடுப்பணைகளை அமைக்க வேண்டும். முறைகேடின்றி தூர்வாரும் பணி நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். வரும் காலங்களிலாவது விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


 நன்றி:தீக்கதிர்
பேராவூரணி காச நோயை கண்டறிய நடமாடும் பரிசோதனை வாகனம்.

பேராவூரணி காச நோயை கண்டறிய நடமாடும் பரிசோதனை வாகனம்.

காசநோயை கண்டறியக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் பேராவூரணி வட்டாரத்திற்கு வந்தது. இந்த வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த நவீன நடமாடும் காசநோய் கண்டறியும் பரிசோதனை வாகனத்தை (CBNAAT) செருவாவிடுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தர்ராஜன் முன்னிலையில், மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி.

பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி.



பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராமத்தார்கள்  நடத்தப்படும் 21 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 26-05-2018 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு கிராமத்தில் மேற்கண்ட தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹15,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹12,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹09,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹06,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 70 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு : +91 6382934280,+91 6380704372,+91 9659225015


முதல் ஒளிப்படக்கலைக்குழுப்பயணம், ஒளிப்படங்களின் அடுத்தகட்ட பரிணாமம்.

முதல் ஒளிப்படக்கலைக்குழுப்பயணம், ஒளிப்படங்களின் அடுத்தகட்ட பரிணாமம்.



நம்ம Thiruchitrambalam Weekend Clickers-ஓட 1st Photo walk, வர்ர 28-ம் தேதி மேற்பனைக்காடு தேர் திருவிழா-வை எடுக்கலாம்னு இருக்கோம்! இதுல எல்லாரும் கலந்துக்கிடனும்னு சொல்லிகிறேன்,

இந்த திருவிழாவில் எங்க கூட சேர்ந்து இந்த நிகழ்வை படம்பிடிக்கிறவங்க & கலந்துகிட்றவங்க மட்டும் கீழ கொடுத்துருக்குற வாட்ஸப் லிங்க்ல வாங்க.

https://chat.whatsapp.com/Dfsjf4j8yz2L90TkKyPlZ4

நன்றி தாசன்

இந்த நிகழ்வுக்கு Official Partners TcbmMemes Peravurani Memes Peravurani Town Social Media

Friday, May 18, 2018

பேராவூரணி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தம் செய்யலாம்.

பேராவூரணி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தம் செய்யலாம்.

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திலுள்ள 28 அஞ்சலகங்களில் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 2 தலைமை அஞ்சலகங்கள், அதிராம்பட்டினம், ஆலத்தூர், ஆவணம், கோட்டைத்தெரு, குருவிக்கரம்பை, மதுக்கூர், நாடிமுத்துநகர், ஒரத்தநாடு, ஒட்டங்காடு, பாப்பாநாடு, பேராவூரணி, மேலஉளுர், தாமரங்கோட்டை, திருவோணம், திருச்சிற்றம்பலம், வடசேரி, ஆயக்காரம்புலம் 2 ஆம் சேத்தி, கரியாப்பட்டினம், குன்னலூர், முத்துப்பேட்டை, பாமணி, தகட்டூர், தலைஞாயிறு அக்ரகாரம், தோப்புத்துறை, வேதாரண்யம், விளக்குடி ஆகிய இடங்களில் இயங்கும் துணை அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் எண் பதிவுக்கு தங்களது வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
திருத்தங்கள் செய்ய வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் ஆதார் அட்டையையும் கொண்டு வர வேண்டும்.
ஆதார் எண்ணை பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் திருத்தம் செய்ய ரூ.30 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04373-252078, 254188, 04369-222890 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.

பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சரகம்,  களத்தூர் மேற்கு கிராமத்தில்    62 ஏக்கர் 33 சென்ட்  பரப்பளவு கொண்ட  களத்திகுளம் ஏரி தனிநபர்களால்  மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சுமார் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் தென்னந்தோப்பாகவும், கரும்பு கொல்லையாகவும் மாற்றி தங்கள் அனுபவத்திற்கு வைத்திருந்தனர். இதனால் ஏரி சுருங்கி தண்ணீர் வரத்து பாதைகள் அடைபட்டிருந்தன. இதனால்,  இந்த ஏரியை நம்பி பாசனம் செய்வோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து இதே கிராமத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற  நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக,  பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார்  மற்றும் பொதுப்பணித் துறை  உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றிடும் பணி நடைபெற்றது.  திருச்சிற்றம்பலம் காவல் துறை ஆய்வாளர் செந்தில்குமரன்,  திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி, களத்தூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் உடன் இருந்தனர்.  ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 2018 - 2019 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பேராவூரணி அரசுக் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.

பேராவூரணி அரசுக் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) இராணி கூறியது:  இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் (பி.ஏ.தமிழ்), இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ.இங்கிலீஷ்), இளநிலை வணிகவியல் (பி.காம்), இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்சி மேத்ஸ்), இளம் அறிவியல் கணினி அறிவியல் ( பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), இளநிலை வணிக நிர்வாகம் (பிபிஏ) உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளுக்கு, இருபால் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 15-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 30 ஆகும்.  பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 48, பதிவுக்கட்டணம் ரூ 2 என மொத்தம் ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், சாதிச்சான்று நகலை கொடுத்தால்  பதிவுக்கட்டணம்  ரூ 2 மட்டும் செலுத்தினால் போதுமானது என தெரிவித்தார்.

பேராவூரணியில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சிகள்.

பேராவூரணியில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சிகள்.

பேராவூரணி வட்டாரம் மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் ‘தேசிய டெங்கு தின’நிகழ்ச்சிகள் புதனன்று நடைபெற்றன.நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவஅலுவலர் பேசுகையில், “ துப்புரவு பணியாளர்கள் வரும்காலங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில், நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.



நன்றி:தீக்கதிர்
சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று வீசுவதால் 2,500
நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று வீசுவதால் 2,500 நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4 ஆயிரம் பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்ளன. இந்த மீனவர்கள் அனைவரும் விசைப்படகு மீனவர்கள் செல்லக்கூடிய திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

தற்போது விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க செல்வதற்கு தடைகாலம் உள்ளது. இதனால் நாட்டுபடகு மீனவர்கள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக 2,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் செல்லக்கூடிய படகுகள் தவிர்த்து கரை ஓரங்களில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 1,500 நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிதொழில் செய்து வருகின்றனர்.

விசைப்படகுகள் மீன்பிடி தடைகாலத்தில், நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் நாட்டுப்படகு மூலம் பிடித்து வரக்கூடிய குறைந்த அளவு மீன்களையும், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றுவிடுகின்றனர்.

இதனால் மீன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கட்டுமாவடி, உடையநாடு போன்ற பகுதிகளில் உள்ள மீன் மார்கெட் மற்றும் மீன் ஏலக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.


நன்றி:தினத்தந்தி

Saturday, May 12, 2018

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரம்.

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரம்.

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோ ரப் பகுதிகளில் விசைப்ப டகுகளை மராமத்து செய்வ தில் மீனவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி யது. இதுவரை 45 தின ங்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் தற்போது, ஏப்.15 முதல் முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை, 61 நாட்களாக அதிகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த காலக ட்டத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை மராமத்து செய்வதும், வலைகளை சீரமைப்பதும் வழக்கம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேது பாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் உள்ளன. மீன்பிடித் தடைக்காலமான தற்சமயம் விசைப்படகுகளை மரா மத்து செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக உள்ள னர். மேலும் மீனவர்கள் தங்கள் வலைகளை சீர்செய்யும் பணியிலும் ஈடு பட்டுள்ளனர். மீன்பிடித் தடை க்காலமாக உள்ளதால் துணைத் தொழில்களான ஐஸ்கட்டி தயாரிப்பு, தலை ச்சுமை வியாபாரிகள், தேநீர் கடைகள், உண வகங்கள் என சிறு வியா பாரிகள் பெருமளவில் பாதி க்கப்பட்டுள்ளனர்.



நன்றி:தீக்கதிர்
காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி
ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை.

காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை.

காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே.வி.கிருஷ்ணன், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கத்
தலைவராக ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளராக ஏ.கே.பழனிவேலு, பொருளாளராக சி.கணேசன், அமைப்பாளராக கே.வி.கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் சு.போசு, வி.கோபால், ஏ.கே.வெள்ளிமலை, மு.வீரா,
நா.வெங்கடேசன், ஆறு.நீலகண்டன், அமுதம் கந்தசாமி, வீ.கருப்பையன், பொன்.ராமமூர்த்தி, எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 25 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டது.

கூட்டத்தில், " அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே விரைந்து ரயில்சேவையை தொடங்க வலியுறுத்துவது, அதற்காக கவன ஈர்ப்பு துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, ரயில்வே அதிகாரிகளை, மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, ரயில் சேவை பணிகளை தொடங்க வலியுறுத்துவது" எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Saturday, May 5, 2018

பேராவூரணி அடுத் திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து
பொதுமக்கள் சாலை மறியல்.

பேராவூரணி அடுத் திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சந்தைப்பேட்டை ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் கடந்தாண்டு மூடப்பட்டது. இந்த கடையை தற்போது மீண்டும் செருவாவிடுதி ரோட்டில் பள்ளி அருகே திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம், சித்துக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாதென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கலால் வட்டாட்சியர் கோபி ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாள் வரை கடையை திறப்பதில்லை. அதற்குள் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் செய்யலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நன்றி :தீக்கதிர்
பேராவூரணி அடுத்த விளங்குளத்தில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பு.

பேராவூரணி அடுத்த விளங்குளத்தில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பு.

பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதி1,153 குடியிருப்புகளுக்கு, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், கூட்டுக்குடிநீர் திட்ட வழிகளை கண்காணிக்க வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அய்யனான் (ஒருங்கிணைப்பாளர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி குமரவடிவேல், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பொன்னுசாமி, பெருமகளூர் யசோதா, காவல்துறை உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையால் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே பேராவூரணி விளங்குளம் பகுதியில் மர்மநபர்கள் சிலர், கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து, ஏரிக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினருடன் சென்ற வட்டாட்சியர் ஆய்வு செய்து கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பை சரி செய்தார். குடிநீர் வடிகால் வாரிய இளநிலைப் பொறியாளர் தங்கவேலு, வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் ஆய்விற்கு சென்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீரை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.



நன்றி:தீக்கதீர்
பேராவூரணி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கல்.

பேராவூரணி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கல்.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நல தின விழா நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலர் எஸ்.ராணி வரவேற்றார். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்து பேசினார். முன்னாள் ஒன்றியத் தலைவர் சாந்தி அசோக்குமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உட்பட பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த தொழில்நுட்பம், மானிய திட்டம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். இதில் தேசிய மண் வள அட்டை 50 விவசாயிகளுக்கும், 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற உளுந்து விதைகள் 25 பேருக்கும், 50 சதவீத மானியத்தில் இன கவர்ச்சி பொறி 10 பேருக்கும், திரவ உயிர் உரங்கள் 10 பேருக்கும், தெளிப்பு நீர் கருவி 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் உழவன் செயலி, மண் மாதிரி சேகரிப்பு உள்ளிட்டவை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மதியரசன், உதவி அலுவலர்கள் ஜி.சசிக்குமார், கே.கார்த்திகேயன் உள்பட பலர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Tuesday, May 1, 2018

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி
பெருந்திருவிழா தெப்பத்திருவிழா.

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா தெப்பத்திருவிழா.

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா தெப்பத்திருவிழா.













பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி
பெருந்திருவிழா திருக்கல்யாணம்.

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா திருக்கல்யாணம்.

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா திருக்கல்யாணம்.