Sunday, December 31, 2017

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன்.

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன்.

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன் இணையதளம்.
பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பேராவூரணி டவுன் இணைய தளம். ( www.peravuranitown.in ).
பேராவூரணி பகுதியில் நடக்கும் நிகழ்வுகளும் , புகைப்படங்கள், செய்திகள்,விளம்பரங்கள் வரவேற்கபடுகின்றன.

தகவல் அனுப்ப வேண்டிய முகவரி.

Gmail : peravuranitown@gmail.com





பேராவூரணி டவுன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பேராவூரணி டவுன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் உற்சாகம் மிகுந்த ஆங்கில புத்தாண்டு  ( 2018) நல்வாழ்த்துக்கள். புதிதாய் பிறந்துள்ள இந்த ஆண்டை சிறப்பாகவும், சீர்மிகுந்ததாகவும் அமைத்து கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நல்ல எண்ணங்களை விதைத்து வளமான வாழ்கைக்கு வழி கொள்ளவும், அன்பை வளர்த்து அர்தமுள்ள ஆண்டாகவும் அமைத்திட மனமார வாழ்த்துகிறோம்.



 

Saturday, December 30, 2017

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல்.

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல்.

பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற 50 பேருக்கு வியாழக்கிழமை இரவு போர்வைகள் வழங்கப்பட்டன.
தற்போது பனிகாலமாக இருப்பதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம், கோயில் பகுதிகள், கடைவீதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், யாசகம் பெற்று வாழும் ஏழைகள் குளிரில் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில், பேராவூரணியில் லயன்ஸ் சங்க  தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆதரவற்ற 50 பேருக்கு போர்வை, உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ்  மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி, செயலாளர் செ.ராமநாதன், பொருளாளர் டி.துரையரசன், நிர்வாகிகள் கே.பி.நல்லசாமி, கனகராஜ், குட்டியப்பன், ராஜா, நீலகண்டன், கோவிதரன், மைதீன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் கொட்ல விஜயபாஸ்கர் ரெட்டி உள்விளையாட்டரங்கில் டிசம்பர்22, 23, 24 ஆகிய தேதிகளில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா,துபாய், நார்வே, குவைத் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில் கட்டா குமிட்டே பிரிவு போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் ஜே.அமிர்தத் மணிசங்கர் (உடையநாடு இராஜராஜன் பள்ளி மாணவர்) இரண்டு தங்கப்பதக்கம்,எஸ்.அகிலன் ஒரு தங்கம்,ஒரு வெண்கலம், ஜி.ஈஸ்வரன் ஒரு தங்கம், எஸ்.ஷாலினிஒரு வெண்கலம் ( மூவரும்கொன்றைக்காடு அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள்) ஆகியவற்றை வென்றனர். மேலும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியன் சிறப்பு பயிற்சி பெற்றதற்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலைமைப் பயிற்சியாளர் வேய்ன் மெக் டோன்லா பாராட்டி சான்றளித்து கௌரவித்தார்.போட்டிகளில் பங்கேற்றுவெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியனை கொன்றைக்காடு அரசுஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கொன்றை எஸ்.கே.இராமமூர்த்தி மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



 
வரலாற்றில் இன்று டிசம்பர் 31.

வரலாற்றில் இன்று டிசம்பர் 31.

டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.

நிகழ்வுகள்

1492 – சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1599 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
1879 – வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1881 – இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
1909 – மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
1923 – லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1946 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1847 – ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
1963 – மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
1981 – கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் உணவுசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தினால் 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.
1994 – பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004 – உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006 – ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

பிறப்புகள்

1491 – ஜாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (இ. 1557)
1880 – ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
1929 – ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர்
1937 – அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
1955 – தாவூத் இப்ராகிம், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி

இறப்புகள்

1905 – அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
2001 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)
பேராவூரணியில் புதிய உதயம் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ்.

பேராவூரணியில் புதிய உதயம் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ்.

பேராவூரணியில் புத்தம் புதிய உதயம் 01.01.2018 அன்று திறப்பு விழா காணும் உங்கள் ஆதினியின் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ்.

கணினி ரசீது இல்லாமல் உரங்கள் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.

கணினி ரசீது இல்லாமல் உரங்கள் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.

உர விற்பனையினை வரையறைப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பதற்கு ஏதுவாகக்கூடிய வகையிலும், இனிவரும் காலங்களில் விற்பனை ரசீது இல்லாமல் உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்என்றும் அரசு உத்தரவிட் டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு விற் பனை முனை இயந்திரத்தில் உரங்களின் இருப்பு விற் பனை மறு பதிவேற்றம் செய்வது குறித்த சிறப்பு முகாம் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற் றது.முகாமை பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் துவக்கி வைத்து பேசியதாவது: உரஇருப்பு பதிவேட்டில் உள்ளஉரங்களின் இருப்பு விபரங்களை எவ்வித விடுபாடுகளுமின்றி விற்பனை முனைஇயந்திரத்தில் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். 1.1.2018 முதல் அனைத்துஉரங்கள் வரத்து மற்றும் விற்பனை விபரங்களை விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்கப்பட வேண் டும். விவசாயிகளுக்கு கணினி விற்பனை ரசீது இல்லாமல் உரங்கள் விற்பனை செய்வதை அறவே தவிர்க்கவேண்டும். மீறி செயல்படுவோர் மீது உரக்கட்டுப்பாடு சட்டம்.1985-ன்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.தஞ்சாவூர் தரக்கட்டுப் பாடு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.வித்யா விற்பனை முனை கையடக்க கருவியினை பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக் கம் செய்து காட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், நன்மை செய்யக் கூடிய இயற்கை எதிரி பூச்சிகளை எளிதில் கொல்லும் தன்மையுடைய அதிக விஷமுடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

மானிய விலை விவசாய கருவிகளை மா.கோவிந்தராசு எம்எல்ஏ வழங்கினார்.

மானிய விலை விவசாய கருவிகளை மா.கோவிந்தராசு எம்எல்ஏ வழங்கினார்.

பேராவூரணி வட்டாரத்தில் 2017-18 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் கருவிகள் மற்றும் உளுந்து பயிரில் செயல்விளக்கங்கள் அமைப்பதற்குண்டான இடுபொருட்கள் விநியோகித்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. பேராவூரணி வேளா ண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற முகாமிற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வரவேற்றார். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மானிய மதிப்பிலான 7 பவர் டில்லர்களும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மானிய மதிப்பிலான 4 ரோட்டவேட்டர் கருவிகளும், ரூ.75 ஆயிரம் மானிய மதிப்பிலான உளுந்து தனிப்பயிர் சாகுபடி செயல்விளக்கங்களுக்கான உளுந்து விதை, திரவ உயிர் உரங்கள் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய இடுபொருட்களையும் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு விவசாயிகளுக்கு வழங்கினார்.



நன்றி:தீக்கதிர்
திருச்சிற்றம்பலத்தில் இளைஞர்கள் முயற்சியால் தூய்மையான குளம்

திருச்சிற்றம்பலத்தில் இளைஞர்கள் முயற்சியால் தூய்மையான குளம்

பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதி இளைஞர்கள் சிறுகுழு சேர்ந்து திருச்சிற்றம்பலம் கோயில் குளத்தினை சுத்தம் செய்தனர்.குளத்தை இருபுறமும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர். இது திருச்சிற்றம்பலம் பகுதி மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது.



வரலாற்றில் இன்று டிசம்பர் 30.

வரலாற்றில் இன்று டிசம்பர் 30.

டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது.

நிகழ்வுகள்

1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
1862 – வட கரொலைனாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
1870 – ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1880 – டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
1906 – அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
1924 – யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
1924 – பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
1941 – மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
1947 – ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
1953 – உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
1993 – இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
1996 – அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2004 – ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

பிறப்புகள்

1865 – றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
1879 – இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
1975 – டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
1984 – லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1691 – ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)
1789 – இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)
1944 – ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
1947 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)
1968 – ட்றிகுவே லீ, நோர்வேயின் அரசியல்வாதி (பி. 1896)
1988 – இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
2006 – சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937
2013 – கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)

சிறப்பு நாள்

பிலிப்பீன்ஸ் – ரிசால் நாள் (1896)

Thursday, December 28, 2017

பேராவூரணி சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை மேய்க்கும் அவலம்:
கடைமடை விவசாயிகள் கவலை.

பேராவூரணி சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை மேய்க்கும் அவலம்: கடைமடை விவசாயிகள் கவலை.

பேராவூரணி கடைமடை பகுதியில் சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை விட்டு விவசாயிகள் மேய்த்து வருகின்றனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வாத்தலைக்காடு, வீரியங்கோட்டை, மரக்காவலசை, முடச்சிக்காடு, கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு, முதுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி நடக்கவில்லை. இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கோடை சாகுபடியும் செய்ய முடியவில்லை. தற்போது கடைமடையில் போதுமான மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. அதேநேரம் மேட்டூர் அணையும் ஓரளவு நிரம்பி காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது ஒரு போகம் சம்பா சாகுபடி செய்து விடலாம் என எண்ணியிருந்த கடைமடை விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணை திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை.

கடந்த ஐப்பசி மாதம் கடைமடையில் பெய்த மிதமான மழையை பயன்படுத்தியும், மேட்டூர் அணையிலிருந்து கிடைத்த சிறிதளவு தண்ணீரை கொண்டு குறுகிய கால ரகத்தை ஒருபோகம் சம்பா சாகுபடி செய்துவிடலாம் என்று கடைமடை விவசாயிகள் பரவலாக நாற்று விடும் பணியை மேற்கொண்டனர். ஆனால் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. குறுகிய கால பயிர் 20 முதல் 25 நாட்களில் நடவுப்பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால் பல்வேறு இடங்களில் விடப்பட்ட நாற்று பருவம் தவறி 45 மேலாகிவிட்டது. தற்போது பருவம் தவறி பட்டுப்போய் வயலிலேயே உள்ள நாற்றுகளில் விவசாயிகள் மாடுகளை விட்டு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


நன்றி : தினகரன்
தேங்காய் தண்ணீரின் அற்புதம் தினம் காலையில் குடியுங்கள்.

தேங்காய் தண்ணீரின் அற்புதம் தினம் காலையில் குடியுங்கள்.

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் பல ஆரோக்கியமான சத்துக்களும் நிறைந்துள்ளது.

எனவே காலையில் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமலை உண்டாக்கும் வைரஸ்களை அழித்தும் வெளியேற்றும்.

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாது.

தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும் எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்க தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் வராது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று 29.12.2017.

கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..

1690 – இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1845 – டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.

1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

1891 – தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 – மங்கோலியா சிங் அரசிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.

1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி செருமனியர் லூப்டுவாபே தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

1997 – ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்

*💧பிறப்புகள்*

1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)

1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)

1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)

1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)

1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)

1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை

இறப்புகள்

2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்

2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (மங்கோலியா)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 284 கனஅடியிலிருந்து 273 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.92 கனஅடியாகவும், நீர் இருப்பு 30.11 டி.எம்.சி.யாகவும், வெளியேற்றம் 8,000 கனஅடியாகவும் உள்ளது.
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு.

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு.

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஜன.14ம் தேதி பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின.

41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. 3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம், பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம், பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம்,பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு.
பேராவூரணி அடுத்த விளங்குளம் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க
கோரிக்கை.

பேராவூரணி அடுத்த விளங்குளம் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க கோரிக்கை.

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விளங்குளம் மக்கள் நேர்காணல் முகாமில் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் விளங்குளம் ஊராட்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் புதன்கிழமையன்று மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முகாமில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீ.கே.முத்தையா பேசுகையில், விளங்குளம் கிராமத்திற்கு என தனியாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும்.

பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.உயர்நிலைப்பள்ளிக்கு மீதமுள்ள சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும். திருக்குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்ட, வருவாய் கோட்டாட்சியர் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை மற்றும் 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தகுதியுள்ளவிவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு இழப்பு தொகை உடனடியாக பெற்றுத்தரப்படும்.

பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டித்தரப் படும். விளங்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேய்ச்சல் தரிசு, புஞ்சை நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆய்வு செய்யப்படும். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கோரிக்கைகள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு விபரம் அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நேர்காணல் முகாமையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி
பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18.

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18.

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18 (18.01.2018) முதல் பட்டுக்கோட்டையில் புதிய உதயம்.

77 F2 / H கீழப்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில், தஞ்சாவூர் ரோடு பட்டுக்கோட்டை.

தொடர்புக்கு : 04373 222834 , 94432 61654, 96556 54024



Wednesday, December 27, 2017

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த மும்மடங்கு கேஷ்பேக் சலுகை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு புதிய கேஷ்பேகே சலுகையை அறிவித்துள்ளது.

புதிய கேஷ்பேக் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

இம்முறை பல்வேறு இணைய வர்த்தகர்களுடன் இணைந்து ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.2,600 மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
ஜியோ கேஷ்பேக் விவரங்கள்:

- ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ 100% கேஷ்பேக் வவுச்சர்கள் ரூ.400 (ரூ.50x8) வழங்கப்படுகிறது.

- அமேசான் பே, பேடிஎம், மொபிகுவிக், போன்பெ, ஆக்சிஸ் பே மற்றும் ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளில் ரீசார்ஜ் செய்யும் போசு உடனடி கேஷ்பேக் ரூ.300 பெற முடியும்.

- ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் இணைய வர்த்தக சேவையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ.2600 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்களை பெற முடியும்.

ஜியோ சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஜியோ வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களை ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தூண்டும் விதமாகவும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை கடந்த வாரம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகைகள் டிசம்பர் 26-ம் தேதி துவங்கி ஜனவரி 15, 2018 வரை வழங்கப்பட இருக்கிறது. எனினும் இந்த சலுகை காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த கட்டிடம் விரைந்து
அகற்றப்படுமா.

பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த கட்டிடம் விரைந்து அகற்றப்படுமா.

பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டிடம் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மைய கட்டிடம் பயன்பாடற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அருகிலேயே பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் ஓடுகள் உடைந்து வகுப்பறையில் உள்ளே விழுகிறது.

இதனால் வேறொரு புதிய கட்டிடத்தில் இடநெருக்கடியோடு வகுப்புகள் நடக்கிறது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராஜ் கூறியதாவது: 2 மாதங்களுக்கு முன் சொர்ணக்காடு ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு உடனடியாக அகற்ற கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். ஆனாலும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் இதுவரை சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றியும், மற்றொரு கட்டிடத்தின் ஓடுகளையும் மாற்றித்தர வேண்டும் என்றார்.



நன்றி:தினகரன்
பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காட்டில் பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்.

பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காட்டில் பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்.

பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பள்ளிக்கு போதுமான கட்டிடங்கள் கட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால்
தற்கொலை செய்து கொள்வேன்.

பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்.

பேராவூரணி அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் செல்போன் டவர்மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என கோயில் பூசாரி எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் மற்றும் சேதுபாவாசத்திரம் காவல்நிலையம் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பேராவூரணி அருகேயுள்ள இரண்டாம்புளிக்காட்டில் பாரம்பரியமாக வழிபட்டு வரும் முனீஸ்வரர் கோயில் உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் இரண்டாம்புளிக்காடு, மல்லிப்பட்டினம் சாலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அப்பகுதி பொதுமக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு மாற்றி முனீஸ்வரர் கோயில் அருகே கடந்த மாதம் திறந்துள்ளனர். கோயில் அருகே கடை திறக்கக்கூடாது என தடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் கடையை அப்புறப்படுத்த கோரி மறியல் போராட்டம் நடத்தியும் இதுநாள் வரை எவ்வித பயனும் கிடையாது. பூஜை பரிவாரங்கள் செய்து வரும் எங்கள் கோவில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை இன்னும் 10 தினங்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் வரும் 6ம்தேதி இரண்டாம்புளிக்காட்டில் உள்ள செல்போன் டவர்மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்மனுவில் கூறியுள்ளார்.

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்.

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்.

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்காக உலக வங்கியிடம் இருந்து 318 மில்லியன் டாலர் அதாவது 2,037 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையேயான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை இணை செயலாளர் சமீர் குமார் கரே, தமிழ பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், உலக வங்கியின் திட்ட தலைவர் ஜான் பிலாம்கிஸ்ட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நீர் மேலாண்மை திட்டங்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை பெறுதல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் விவசாயம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்த இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 5,00,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள். 4800 பாசன குளங்கள் மற்றும் 477 தடுப்பணைகளை புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் இந்த கடனுதவி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

வரலாற்றில் இன்று டிசம்பர் 28.

வரலாற்றில் இன்று டிசம்பர் 28.

டிசம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.
1612 – கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836 – மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
1846 – அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.
1879 – ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
1895 – பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
1908 – இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
1929 – நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1958 – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1981 – அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.
1989 – அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2005 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
2007 – நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பிறப்புகள்

1932 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
1936 – எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (இ. 2014)
1937 – ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்
1940 – அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
1944 – கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
1945 – பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)
1947 – நாஞ்சில் நாடன், எழுத்தாளர்
1954 – டென்செல் வாஷிங்டன், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1994 – கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்