ஆனால் கடந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி நடக்கவில்லை. இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கோடை சாகுபடியும் செய்ய முடியவில்லை. தற்போது கடைமடையில் போதுமான மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. அதேநேரம் மேட்டூர் அணையும் ஓரளவு நிரம்பி காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது ஒரு போகம் சம்பா சாகுபடி செய்து விடலாம் என எண்ணியிருந்த கடைமடை விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணை திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை.
கடந்த ஐப்பசி மாதம் கடைமடையில் பெய்த மிதமான மழையை பயன்படுத்தியும், மேட்டூர் அணையிலிருந்து கிடைத்த சிறிதளவு தண்ணீரை கொண்டு குறுகிய கால ரகத்தை ஒருபோகம் சம்பா சாகுபடி செய்துவிடலாம் என்று கடைமடை விவசாயிகள் பரவலாக நாற்று விடும் பணியை மேற்கொண்டனர். ஆனால் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. குறுகிய கால பயிர் 20 முதல் 25 நாட்களில் நடவுப்பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால் பல்வேறு இடங்களில் விடப்பட்ட நாற்று பருவம் தவறி 45 மேலாகிவிட்டது. தற்போது பருவம் தவறி பட்டுப்போய் வயலிலேயே உள்ள நாற்றுகளில் விவசாயிகள் மாடுகளை விட்டு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நன்றி : தினகரன்
0 coment rios: