பேராவூரணி தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை
பேராவூரணியில் உள்ள தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைக்கோடி தாலுகாவாகும். இது சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. பேராவூரணி பேரூராட்சி பகுதியில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், பல்வேறு அரசுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பி க்கவும், தபால் நிலைய வங்கி சேவைகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதால், பெரும்பா லோர், நம்பிக்கையான அரசின் தபால்துறை யையே நாடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை சாலை யில், பேரா வூரணி தபால்நிலையம் வாடகை கட்டிடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. மேலும் தபால்நிலையம் இருக்கும் இடம் வெளியில் தெரியும் வகையில் பார்வையாக இல்லாமல் உள்ளது. மேலும் வயதானோர், நோய் வாய்ப்பட்டோர் மாடிக்கு ஏறிச் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. தபால் நிலையம் கட்டுவதற்கு என சேது சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் சொந்த கட்டிடத்தில் தபால்நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் கவு ன்சிலர் டாக்டர் மு.சீனிவாசன் கூறுகையில், " பல வருடங்களுக்கு முன்பு தபால் நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடம், கருவேல மரக்கா டாக மாறிக் கிடக்கிறது. இந்த இடத்தில் புதிதாக தபால்நிலையம் அமை க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண்டும். தபால்துறை அதிகா ரிகளை பலமுறை நேரில் அணுகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த இடத்திற்கான ஆவ ணங்கள், உரிய விபரங்கள் கிடைத்தால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாகவோ, வேறு வகையிலோ கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யலாம். ஆனால் தபால்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்" என்றார்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: