தற்போது பனிகாலமாக இருப்பதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம், கோயில் பகுதிகள், கடைவீதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், யாசகம் பெற்று வாழும் ஏழைகள் குளிரில் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேராவூரணியில் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆதரவற்ற 50 பேருக்கு போர்வை, உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி, செயலாளர் செ.ராமநாதன், பொருளாளர் டி.துரையரசன், நிர்வாகிகள் கே.பி.நல்லசாமி, கனகராஜ், குட்டியப்பன், ராஜா, நீலகண்டன், கோவிதரன், மைதீன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: