பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.உயர்நிலைப்பள்ளிக்கு மீதமுள்ள சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும். திருக்குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்ட, வருவாய் கோட்டாட்சியர் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை மற்றும் 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தகுதியுள்ளவிவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு இழப்பு தொகை உடனடியாக பெற்றுத்தரப்படும்.
பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டித்தரப் படும். விளங்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேய்ச்சல் தரிசு, புஞ்சை நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆய்வு செய்யப்படும். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கோரிக்கைகள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு விபரம் அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நேர்காணல் முகாமையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

0 coment rios: