Friday, June 30, 2017

பெருமகளூரில் மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்.

பெருமகளூரில் மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்.

பேராவூரணியை அடுத்த பெருமகளூர் கடைவீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி பல்வேறு இடங்களில் ஒருசில கடைகளை அப்புறப்படுத்தினாலும் இன்னும் பல்வேறு இடங்களில் கடையை மாற்றுவதற்கு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பெருமகளூர் கடைவீதியில், குடியிருப்பு பகுதியில், மாநில நெடுஞ்சாலை பிரிவில் உள்ள அரசு மதுபானக்கடையால் பொதுமக்கள், பேருந்து பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், கடையை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவர் ஆர்.கலை ச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி.அமுதா, கிளைத் தலைவர் ராமாமிர்தம், செயலாளர் தவமணி, பொருளாளர் செல்வி, துணைத்தலைவர் குப்ப ம்மாள், துணைச் செயலாளர் பானுமதி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கிளைச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், திமுக நிர்வாகிகள் வி.பி.ஜெயச்சந்திரன், மா.சிதம்பரம் கே.சீனிவாசன், வி.ஆர்.ஏ.ஆனந்த், ஜெயப்பிரகாஷ், கோ.சிதம்பரம், ஏ.கே.ராஜேந்திரன், கே.சாமிநாதன் மற்றும் 600 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன், பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன், பட்டுக்கோட்டை கலால் டிஎஸ்பி சேகர், டாஸ்மாக் உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி, காவல்துறை ஆய்வாளர்கள் ஜெனார்த்தன், செந்தில்குமார், தியாகராஜன், ஜெயா மற்றும் வருவாய்த்துறை, கலால்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பெருமகளூர் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை 20 நாள் அவகாசத்தில் மதுக்கடையை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்க ப்பட்டது.முன்னதாக பொதுமக்கள் அமர்வதற்கு சாலையையொட்டி பந்தல் அமைக்க முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மதுபானக்கடையை நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்ற மாதர் சங்கத்தினரை அரண் அமைத்து தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாதர் சங்கத்தினர், பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர்.
நன்றி : தீக்கதிர் 

Thursday, June 29, 2017

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவு மணிமண்டப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவு மணிமண்டப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.



ராமேசுவரத்தில் ரூ. 15 கோடி செலவில் அப்துல்கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறித்த நேரங்களில் பேருந்து வசதி
செய்து தர வேண்டும் மாணவர்கள் வேண்டுகொள்.

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறித்த நேரங்களில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் மாணவர்கள் வேண்டுகொள்.



பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மினி பேருந்தில் அதிக மாணவிகள்,மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றன.
நன்றி: Pradeep JP
பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும்
இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை,கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, மரக்காவலசை வழியாகக் காரங் குடாவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று இணையும் 9 கி.மீ தூரமுள்ள இணைப்பு சாலை உள்ளது.இச்சாலை, பூக்கொல்லை தொடங்கிக் கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, மரக்காவலசை எனப் பல இடங்களில் சுமார்6 கி.மீ தூரம் வரை சாலைகள்பெயர்ந்தும், குண்டுங்குழியுமாகவும் காணப்படுகிறது. குறிப்பாகக் கழனிக்கோட்டை செல்லும் வழியில் சாலையோரம் கொட் டப்பட்ட மண், மழையினால் அரித்துச் செல்லப்பட்ட நிலையில், தார்ச்சாலை பெயர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இவ்வழியே செல்லும் பேருந்துகள் இந்த இடத்தைக் கவனமுடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வழியே புதிதாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையோர மரணக்குழியைக் கவனிக் காமல் போனால், பெரும் அசம்பாவிதம் நடந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரர்களுடன் கமிசனுக்காக கைகோர்த்துச் செயல்படுவதால், ஒன்றியம் முழுவதுமே சாலைகள் தரமற்றதாகவும், ஒழுங்கற்றதாகவும் அமைக்கப்படுகிறது. தர விதிகள் கடைப் பிடிக்கப்படாமல் தரமற்றதாக அமைக்கப்படும் தார்ச்சாலைகள் சில தினங்களிலேயே சேதமடைந்து விடுகின்றன. பெய்யும் மழையில் முற்றிலுமாகச் சாலைசேதமடைந்து, தார்ச்சாலையானது கப்பிச் சாலையாக மாறி விடுகிறது.இப்பகுதியில் விவசாய நிலங்கள் இருப்பதால், விளைபொருட்களை விவசாயிகள் இவ் வழியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதும், கடற்கரை பகுதி துறைமுகங்களில் இருந்து மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களைப் புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி எனப்பல பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் முக்கிய சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது கண்டிக் கத்தக்கது எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிபிஎம் எச்சரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையன் ஆகியோர் கூறுகையில், “ பேராவூரணிநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறோம். பலமுறை தொகுதியில் உள்ள சாலை பிரச்சனைகுறித்து நேரில் முறையிட்டும் கண்டுகொள்ளாத, பிரச்சனையைத் தீர்க்க முன்வராத அலட்சியப் போக்கு ஏற்கத்தக்கதல்ல. பூக்கொல்லை-காரங்குடா சாலையை உடனடியாகச் சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தீக்கதிர் 
குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் நேர்காணலில் உறுதி.

குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் நேர்காணலில் உறுதி.

குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நேர்காணல் முகாமில் ஆர்டிஓ தெரிவித்தார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி பெருமகளூர் தென்பாதி ஆதியாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை ஆர்டிஓ கோவிந்தராசு தலைமை வகித்தார். பேராவூரணி தாசில்தார் ரகுராமன் முன்னிலை வகித்தார். 

முகாமில் நலிந்தவர் நலத்திட்ட உதவி 20நபர்களுக்கும், மின்னணு குடும்ப அட்டை 30பேருக்கும், இலவச வீட்டுமனை 7பேருக்கும், பட்டா மாறுதல் 11பேருக்கும் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி ஆர்டிஓ கோவிந்தராசு பேசியதாவது: 
அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

எனவே திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து, அதன் பலன்களைபெற வேண்டும். வரலாறு காணாத வறட்சியால் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்தால், அதனை போக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர், சாலை, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும். உங்கள் குறைகளை பொதுமக்கள் எந்நேரமும் தயக்கமின்றி முறையிடலாம் என்றார்.முன்னதாக பெருமகளூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமமூர்த்தி, திமுக நகர பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகானந்தம் மற்றும் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.முகாமில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரீட்டா ஜெர்லின், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார், ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் (பட்டுக்கோட்டை) பாஸ்கரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன் 
மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிக்கு பூமிபூஜை.

மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிக்கு பூமிபூஜை.

பேராவூரணி  அருகேயுள்ள மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் விசைபடகு மீனவர்களின் சுமார் 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் மல்லிபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்திட கடந்த 2015ம் ஆண்டு துறைமுகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. துறைமுகம் விரிவுப்படுத்திட அரசு தற்போது 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப் பணிகளை தொடங்க நேற்று காலை மல்லிபட்டிணம் விசைபடகு மீன்பிடி துறைமுகத்தில் நாகப்பட்டினம் மீன்துறை இணை இயக்குனர் அமல்சேகர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் மல்லிபட்டிணம் மீன்துறை ஆய்வாளர் மோகன்தாஸ், ஒப்பந்தகாரர்கள் முருகேசன், பிரவிஸ்கிருஷ்ணா, விஜயராசன், தமிழ்நாடு விசைபடகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன், மீனவசங்க பிரதிநிதி வெங்கடாசலம் உட்பட ஏராளமான மீனவசங்க பிரதிநிதிகளும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன் 

Wednesday, June 28, 2017

ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் மத்திய அரசு.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் மத்திய அரசு.



ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 27, 2017

பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானியம்.

பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானியம்.

நடப்பாண்டில் மேட்டூர் அணையி லிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை இருந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் மற்றும் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நெல்பயிருக்கு மாற்றாக பயறுவகை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் 2017-னை அறிவித்துள்ளது.இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சு.இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறி ப்பில் கூறியிருப்பதாவது:
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் தற்போதுள்ள நீர் ஆதாரங்களை பயன்படுத்தி நெல் மற்றும் பயறுவகை சாகுபடி மேற்கொள்ளல், உழவு மேற்கொள்வதற்கான உதவி த்தொகை, நீர்ப்பாசன குழாய்கள் மானிய த்துடன் வழங்குவது, இயந்திர நடவு முறையை ஊக்குவித்தும், நெல் மற்றும் பயறுவகை உற்பத்தியை அதிகரிக்கும் இடுபொ ருட்களுக்கான உதவித்தொகை வழங்குவது மற்றும் வெண்ணாறு பகுதிக்கான பசுந்தாள் உரப்பயிர் விதை விநியோகம் போன்ற வற்றிக்கான மானிய விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் ஆணைக்கிணங்க இயந்திர நெல் நடவிற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் , சிங்க்சல்பேட் உபயோகத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.400, திரவ உயிர் உரங்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.120-, நெல் நுண்ணூட்டத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.200 மானியமாக வழங்கப்படவுள்ளது. தரிசு உழவு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றிற்கு ரூ.500 மானியம் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கிட பரிந்துரை செய்யப்படுகிறது. பயறுவகை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 8 கிலோ சான்று பெற்ற உளுந்து விதை ரூ.960 மானியத்தில் வழங்கப்படும்.
திரவ உயிர் உரத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.120-ம், டிஏபி இலைவழித் தெளிப்பிற்கு ரூ.520-ம் வழங்கப்படவுள்ளது.நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்வதற்கு 75 சதவீத மானியத்தில் வெள்ளை பிவிசி பைப்புகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.எனவே நெல் மற்றும் பயறுவகை சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெறுவதற்கு தங்களது பெயர்களை அந்தந்த தொகுதி வேளா ண்மை விரிவாக்க அலுவலர்களிடம் தெரிவித்து முன்பதிவு செய்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி : தீக்கதிர் 
காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை.

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை.



பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைப்பின் தலை வராக ப.சத்தியமூர்த்தி, செயலா ளராக ஏ.சோமசுந்தரம், பொருளாளராக குமார் என்ற பழனிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீலகண்டபுரம் 2-வது தெரு ரயில்வே கேட் எண் 121-ஐ நிரந்தரமாக மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியும், செங்கொல்லை ரயில்வே கிழக்கு தெரு சாலையை பொதுமக்கள் தேவையை கருத்திற்கொண்டு நிரந்தர தார்ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
நன்றிபேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைப்பின் தலை வராக ப.சத்தியமூர்த்தி, செயலா ளராக ஏ.சோமசுந்தரம், பொருளாளராக குமார் என்ற பழனிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீலகண்டபுரம் 2-வது தெரு ரயில்வே கேட் எண் 121-ஐ நிரந்தரமாக மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியும், செங்கொல்லை ரயில்வே கிழக்கு தெரு சாலையை பொதுமக்கள் தேவையை கருத்திற்கொண்டு நிரந்தர தார்ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
 நன்றி  : தீக்கதிர் 

Monday, June 26, 2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 04.07.2017 முதல் 14.07.2017 வரை.
பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஜி.எஸ்.டி விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஜி.எஸ்.டி விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஏற்பாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு சம்பந்தமான வாடிக்கையாளர்- வர்த்தகர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் வர்த்தகச் சங்க விழா அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஐசிஐசிஐ வங்கி கிளை மேலாளர் வீரபாரதி தலைமை வகித்தார். மியூச்சுவல் பண்ட் துறை நிர்வாகி சுரேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை ஆடிட்டர் லயன்ஸ் சி.ராஜகோபால், புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்தும், மியூச்சுவல் பண்ட்முதலீடு குறித்தும் விளக்கிப் பேசினார். வாடிக்கையாளர், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வங்கிப் பணியாளர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர் 

Sunday, June 25, 2017

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க
அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு.

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு.

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலாளர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். விசைப்படகு மீனவர் சங்க மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் வடுகநாதன், பண்ணைவயல் ஊராட்சி மன்றத்தலைவர் சு.ராஜாத்தம்பி, புதுக்கோட்டை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மாவட்டத் தலைவர் என்.எஸ். எம்.நஜ்முதீன், மதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளர் மு.கி.லெனின், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அப்துல் வகாப், எஸ்.சேக்தாவூத், பிரண்ட்ஸ் கிளப் மாலிக், சமுதாய நலமன்றம் ஹலீம், விசைப்படகு மீனவர் சங்கச் செயலா ளர் சாபிக், ஜமாத் நிர்வாகி பி.எம்.மரை க்காயர் மற்றும் அனைத்து மத நண்பர்கள், மீனவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர் 

Saturday, June 24, 2017

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட்
குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கங்காதரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசுகையில், " இதுவரை புதிய மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மொபைல் எண்ணுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கள ஆய்வு செய்து உடனடியாகப் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 லட்சம் குடும்ப அட்டைகளில், இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
நன்றி : தீக்கதிர் 

Friday, June 23, 2017

பேராவூரணியில் சாலை மறியலில் போராட்டம்.

பேராவூரணியில் சாலை மறியலில் போராட்டம்.

பேராவூரணியில்  ஆக்கிரமிப்புகளை நேற்றைய  தினம்  அகற்றினர். இன்று மீண்டும்  அகற்றிய  இடத்திலேயே  மீண்டும்  அத்துமீறியதாக  நெடுஞ்சாலை துறையை  கண்டித்து  கடைகள்  மூடப்பட்டது. பேரை  நகரில்  கடை வைத்திருக்கும்  கடை உரிமையாளர்கள்  மற்றும்  சமூக  ஆர்வலர்கள்  அனைவரும்  போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும்  இந்த  போராட்டத்தை கட்டுப்படுத்த  காவல்  துறையினரும்  களத்தில்  இறங்கியுள்ளனர்.
பேராவூரணியில் நாளை மின்தடை.

பேராவூரணியில் நாளை மின்தடை.

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 24 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேராவூரணி, சேதுபாவாசத்திரம், நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், மல்லிப் பட்டினம், பெருமகளூர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திகொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 22, 2017

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு
காய்ச்சல் தடுப்பு முகாம்.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முகாமையொட்டிப் புனல்வாசல் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்புபணி, புகை மருந்து அடித்தல், மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கல், குளோரினேசன் செய்யப்பட்டகுடிநீர் வழங்கல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணி நடைபெற்றது.முன்னதாகப் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
நன்றி : தீக்கதிர் 
பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 23.06.2017 மின் தடை.

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 23.06.2017 மின் தடை.

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை ( 23.06.2017) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்



இதுவரை ரேஷன் கார்டு பெறாதவர்கள் ஸ்மார்ட் வடிவிலான ரேசன்கார்டு பெறுவதற்கு இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் இருந்த ரேசன்கார்டுக்கு பதிலாக புதிதாக ஸ்மார்ட் வடிவிலான கார்டு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 317 ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதுவரை ரேசன்கார்டு பெறாதவர்கள் புதிய ஸ்மார்ட் வடிவிலான கார்டு பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் வட்ட வழங்கல் அலுவலர்களால் விசாரணை செய்யப்பட்டு ஸ்மார்ட் வடிவிலான ரேசன்கார்டிற்கான ஒப்புதலை இணையதளத்தில் அளித்தவுடன் விண்ணப்பதாரரின் செல்எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும். பின்னர் தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட செல் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். செல் எண்ணை உள்ளீடு செய்த பின்னர் அதே செல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 4 இலக்க எஸ்எம்எஸ் வரும். அந்த எண்ணை கம்ப்யூட்டர் இயக்குபவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பதாரரின் ஸ்மார்ட் அட்டை அச்சிட்டு வழங்கப்படும்.

ஏற்கனவே இணையதளத்தில் புதிய ஸ்மார்ட் வடிவிலான கார்டு வேண்டி விண்ணப்பம் செய்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் வந்தவுடன் மேற்குறிப்பிட்டபடி இ சேவை மையத்தினை தொடர்பு கொண்டு ஸ்மார்ட் வடிவிலான கார்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்

Wednesday, June 21, 2017

புரோ கபடி சென்னை அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார்.

புரோ கபடி சென்னை அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார்.



புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன் வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார். புரோ கபடி தொடரில் முதல் முறையாக களமிறங்கும் சென்னை அணியில் அமித் ஹோடா, அஜய் தாகூர் மற்றும் சி அருண் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் அமித் ஹோடா அதிகபட்சமாக 63 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் சென்னை கபடி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 28ம் தேதி 5வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளராக கே.பாஸ்கரன் செயல்பட்டு வருகிறார்.
நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம் நடத்தும் மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.

நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம் நடத்தும் மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.



நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம்  நடத்தும்  61 ஆம் ஆண்டு  ஒரு ஊர் ஆட்டக்காரர்கள் பங்கேற்கும்  மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.
மொய் டெக் மொய் செய்பவரின் விவரங்களை சேகரிக்க செயலி.

மொய் டெக் மொய் செய்பவரின் விவரங்களை சேகரிக்க செயலி.






கடினமான வேலைகளைக்கூட கணினியின் உதவியோடு எளிதாகச் செய்யும் காலம் இது. இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி உசிலம்பட்டி சேர்ந்த பெண்கள் வித்யாசமான ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
கிராமங்களில் சொந்தபந்தங்களில் வீட்டு விசேஷத்தில் பங்கெடுக்கும் போது மொய் கொடுப்பது வழக்கம். ஒருவர் பணத்தை வாங்க மற்றொருவர் பெயர், ஊர் ஆகியவற்றை எழுதிக் கொள்வார். நகரத்தில் மொய் கவரில் ஊர் பெயர் விலாசத்தை எழுதி மணமக்களின் கைகளில் கொடுப்பார்கள். தற்போது இதன் அடுத்த வடிவமாக செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.
கடந்த காலங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்வதாக அடையாளம் காணப்பட்ட உசிலம்பட்டி பகுதியில் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த மொய் டெக் எனும் செயலி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர். இதன் மூலம் ஊரிலுள்ள மற்ற இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். பல கிராமப்புறங்களுக்கு தேவையான செயலியை வடிவமைக்கவும் இவர்களையே மக்கள் அணுகுகின்றனர். இவர்களின் முயற்சி உசிலம்பட்டியை ஒட்டிய கிராமப் பகுதியின் முகத்தை மாற்றும் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

Tuesday, June 20, 2017

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன
ஆர்ப்பாட்டம்.

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.



கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆதாருக்கு புகைப்படம் எடுப்பதில் தாமதம் பொதுமக்கள் மறியல் முயற்சி.

ஆதாருக்கு புகைப்படம் எடுப்பதில் தாமதம் பொதுமக்கள் மறியல் முயற்சி.

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டத்தில் ஊமத்தநாடு, உடையநாடு, சொர்ணக்காடு, ஆதனூர், பெருமகளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. வங்கி கணக்கு துவங்குதல், பாஸ்போர்ட் எடுத்தல், சமையல் எரிவாயு மானியம் பெறுதல், அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதால் ஆதார் அட்டை எடுக்க தாசில்தார் அலுவலகத்துக்கு பலமுறை வந்து காத்திருந்தும் புகைப்படம் எடுப்பதில் தாமதமாவதோடு திரும்ப திரும்ப பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.


இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 பேர், தாசில்தார் அலுவலகம் எதிரே சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுவிட்டதால் அலுவலகத்திலிருந்த துணைநிலை அதிகாரிகள், புகைப்படம் எடுக்க கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நன்றி : தினகரன் 
வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன்
திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ்.

வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ்.

பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ்.

பேராவூரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. செளந்தர்ராஜன் தலைமை வகித்துப் பேசியது:
பிறந்த குழந்தை முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தாய்ப்பாலுடன் உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்கலாம். 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மாத்திரை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். 
கை, கால்களை சோப்பின் மூலம் கழுவுவதால் நோய்த்தொற்று வராமல் தடுக்கலாம். அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாத்திரை, உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. இதனால், நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள் மூலம் குழந்தைகளுக்கு கை கழுவுவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இதனால், டெங்கு, சிக்குன்குனியா, வயிற்றுப்போக்கு, பன்றிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும், பொதுவெளியில் மலம்கழிக்காமல் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மருத்துவர் அறிவானந்தம், இலக்கியா, கீர்த்திகா, சிவரஞ்சனி, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப் சிங்க், அமுதவாணன், தவமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.

பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.

பேராவூரணி கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, செவ்வாய்க்கிழமை பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் தலைமையில் கடைவீதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சா லைத் துறை, பொதுப்பணித் துறை, பேரூராட்சி துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேலும் 2 தினங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் பரபரப்பு நிலவுவதால் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆய்வாளர் ஜனார்த்தனன், பயிற்சி உதவி ஆய்வாளர் த.பிரகாஷ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளைத் தாங்க ளாகவே மு ன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என வர்த்தகச் சங்க வேண்டு கோளை ஏற்றுப் பலரும் முன்னதாகவே ஆக்கிர மிப்புகளை அகற்றிக் கொ ண்டது குறிப்பிட த்தக்கது.

Monday, June 19, 2017

டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

பேராவூரணி அடுத்த ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு
சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா.
பேராவூரணி அடுத்த திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ
பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா.

பேராவூரணி அடுத்த திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

Sunday, June 18, 2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா
04.07.2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 04.07.2017


பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா அழைப்பிதழ்.
தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி.

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி.



ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Saturday, June 17, 2017

நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு.

நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு.



நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு.
பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும்,
சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம்.

பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம்.

பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வாய்க்காலில் அடைபட்டுக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி பேரூராட்சியைச் சேர்ந்த 1 ஆவது வார்டுக்குட்பட்ட ஆஸ்பத்திரி ரோடு, தேவதாஸ் ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பல நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மாதம் ஒருமுறையோ, இருமுறையோ மட்டுமே அகற்றப்படுவதாகத் தெருவாசிகள் புகார் கூறுகின்றனர். சில நேரங்களில் குப்பைகளை ஓரளவிற்கு மட்டுமே அகற்றும் பேரூராட்சி பணியாளர்கள், குப்பைகளை ஒன்றாகக் குவித்துத் தீ வைத்துச் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் சிதறிக் கிடக்கும் பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட கழிவு குப்பைகளால் சாலையில் செல்வோர் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. தற்போது லேசான மழை பெய்துள்ள நிலையில் குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதால், குடியிருப்பு பகுதிகளில் புகை மண்டலம் உருவாகிச் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தெருக்களில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும் எனவும், தினசரிக் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்கடையால் அவதி

குறிப்பாகச் சிதம்பரம் ரோடு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் மண் கலந்து வாய்க்கால் அடைபட்டுக் கிடக்கிறது. சில வீடுகளின் கழிவுநீர் சட்டவிரோதமாக இவ்வாய்க்காலில் விடப்படுவதாலும், தண்ணீர் செல்ல வழியின்றி அடைபட்டுத் தேங்கி, சாக்கடையாக மாறிவிட்டது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகிப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் உறங்க முடியாத நிலை உள்ளது. அருகிலேயே பொதுக் குடிநீர் குழாய் இருப்பதும், சாக்கடை கழிவு வாய்க்கால் மீது சிமெண்ட் பலகை அமைத்து, குடிநீர் குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துச் செல்லும் அவலமும் உள்ளது.

சாக்கடைக் கழிவு நீர் வாய்க்கால் அருகிலேயே குடிநீர் குழாய் இணைப்புகளும் செல்கிறது. எனவே குடிநீரில் சாக்கடை கலந்து மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள சாக்கடையாக மாறி விட்ட மழைநீர் வடிகால் வாய்க்காலைச் சுத்தம் செய்து தரவும், அடைபட்டுக் கிடக்கும் குப்பைகளை அகற்றித் தரவும், பொதுமக்கள் கழிவுநீரை வாய்க்காலில் விடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி
ஆலோசனைக் கூட்டம்.

பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம்.

பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இக்கோயிலில் 25 ஆண்டுகள் கழித்து, வரும் ஜூலை 4 - 14 ஆம் தேதி வரை திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவிழாவையொட்டிக் குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், கிராமத்தினர் ஒத்துழைப்பு குறித்துக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.