புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன் வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார். புரோ கபடி தொடரில் முதல் முறையாக களமிறங்கும் சென்னை அணியில் அமித் ஹோடா, அஜய் தாகூர் மற்றும் சி அருண் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் அமித் ஹோடா அதிகபட்சமாக 63 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் சென்னை கபடி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 28ம் தேதி 5வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளராக கே.பாஸ்கரன் செயல்பட்டு வருகிறார்.
0 coment rios: