பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஏற்பாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு சம்பந்தமான வாடிக்கையாளர்- வர்த்தகர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் வர்த்தகச் சங்க விழா அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஐசிஐசிஐ வங்கி கிளை மேலாளர் வீரபாரதி தலைமை வகித்தார். மியூச்சுவல் பண்ட் துறை நிர்வாகி சுரேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை ஆடிட்டர் லயன்ஸ் சி.ராஜகோபால், புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்தும், மியூச்சுவல் பண்ட்முதலீடு குறித்தும் விளக்கிப் பேசினார். வாடிக்கையாளர், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வங்கிப் பணியாளர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: