Tuesday, June 20, 2017

ஆதாருக்கு புகைப்படம் எடுப்பதில் தாமதம் பொதுமக்கள் மறியல் முயற்சி.

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டத்தில் ஊமத்தநாடு, உடையநாடு, சொர்ணக்காடு, ஆதனூர், பெருமகளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. வங்கி கணக்கு துவங்குதல், பாஸ்போர்ட் எடுத்தல், சமையல் எரிவாயு மானியம் பெறுதல், அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதால் ஆதார் அட்டை எடுக்க தாசில்தார் அலுவலகத்துக்கு பலமுறை வந்து காத்திருந்தும் புகைப்படம் எடுப்பதில் தாமதமாவதோடு திரும்ப திரும்ப பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.


இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 பேர், தாசில்தார் அலுவலகம் எதிரே சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுவிட்டதால் அலுவலகத்திலிருந்த துணைநிலை அதிகாரிகள், புகைப்படம் எடுக்க கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நன்றி : தினகரன் 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: