இந்த கல்லூரியில் 935 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராவூரணி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு செல்ல வேண்டும். பேராவூரணியிலிருந்து காலை நேரத்தில் ஒரு அரசு பேருந்து, மதியம், மாலை நேரத்தில் ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போதிய பேருந்து வசதியின்றி பெரும்பாலான மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தினகரன்
0 coment rios: