நவம்பர் 30-க்குள் சம்பா நெல் சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்திடுக! விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி.
பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் சாகுபடிக்குகாப்பீடு செய்து கொள்ள நவம்பர் 30 ஆம் தேதி கடைசிநாளாகும். இது குறித்து தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவிஇயக்குநர் ஆர்.மதியரசன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெள்ளம், வறட்சி, புயல், பூச்சி மற்றும் நோய்தாக்குதல் போன்ற இயற்கைசீற்றங்களால் நெல் பயிரின் அனைத்து நிலைகளிலும் ஏற்படும் பயிர் பாதிப்பு மற் றும் மகசூல் இழப்பிற்கு பிரதம மந்திரியின் பயிர்க்காப் பீடு திட்டம் இழப்பீடு வழங்குகிறது. பயிர்க்கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
நெல் பயிரில் பாதிப்பு ஏற்படும் நேர்வில் ஒரு ஏக்கர்நெல் சாகுபடிக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.26,800 காப்பீட்டு தொகை வழங்கப்படும். இக்காப்பீட்டு தொகைக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் 1.5 சதவீதம் ஆகும். அதாவது ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.402 மட்டுமே. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும்.
இதர கடன் பெறாத விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வணிக வங்கிகள் அல்லது தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது அந்தந்த வட்டாரங்களில் இயங்கி வரும் பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ பிரீமியத் தொகையினை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.முன்மொழிவு விண்ணப் பத்துடன், சிட்டா, அடங்கல்,வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அடையாள அட்டை எண் ஆகிய ஆவணங்களை இணைத்து தொடர்புடைய மையங்களில் வழங்கி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பேராவூரணி வட்டாரத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டுவரும் அனைத்து விவசாயிகளும் நவம்பர் மாதத்திற்குள் சாகுபடி செய்து நவம்பர்30 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்
0 coment rios: