படப்பனார்வயலில் பழுதடைந்த ஆழ்துளை கிணறை சரிசெய்து, குடிநீர் தொட்டிகளை சீரமைக்கவேண்டும்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சொர்ணக்காடு ஊராட்சியை சேர்ந்த படப்பனார்வயல் கிராமத்தில் கடைவீதி மற்றும் ஊர்ப்பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சரிசெய்து, குடிநீர் தொட்டிகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படப்பனார்வயல் மேற்கு கிராமத்தில் சிறு மின்விசை இறைப்பான் வறட்சி நிவாரண திட்டத்தில், கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரூ.2 லட் சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குடிநீர் தொட்டி பழுதடைந்து பலமாதங்கள் ஆகிவிட்டன.இதுவரை சரிசெய்யப்படாததால் கிராம மக்கள் தனிநபர் களுக்கு சொந்தமான இடங்களில் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள் ளது. பலமுறை உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையிட்டும்சரி செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறை உடனடியாக சரிசெய்யவும், பழுதடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைத்து, குடிநீர் கிடைக்க ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
0 coment rios: