பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி படகு போட்டி நடைபெறும் இடம் தேர்வு
எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சேதுபாவாசத்திரம் பகுதியில் படகு போட்டி நடைபெறும் பகுதியை கலெக்டர் அண்ணாதுரை தேர்வு செய்தார்.
தஞ்சையில் அடுத்த மாதம் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் 25ம் தேதி சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் படகு போட்டி நடத்ததிட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான இடங்களை கலெக்டர் அண்ணாத்துரை நேற்று ஆய்வு செய்தார். அப்போது படகு போட்டி நடத்த சேதுபாவாசத்திரம் மீன் பிடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் கடலோர பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் துறைமுகபகுதியில் சுகாதாரத்துறைசார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை ஆர்டிஓ கோவிந்தராசு, பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ) கிருஷ்ணமூர்த்தி, (கி.ஊ) பிரபாகரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 coment rios: