Thursday, August 31, 2017

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்



ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி சி -39 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்டவுன் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியுள்ளது.
பேராவூரணி வீடுவீடாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.

பேராவூரணி வீடுவீடாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.



பேராவூரணி பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் குடிக்க பயன்படுத்ததும் குடிநீரை மூடி வைக்கவும், நீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டன. மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க அரசு சித்த வைத்திய பிரிவில் தினமும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

Wednesday, August 30, 2017

பேராவூரணி அருகே உள்ளது செருவாவிடுதி இடிந்து விழும் நிலையில் மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டி.

பேராவூரணி அருகே உள்ளது செருவாவிடுதி இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்,திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி தெற்குஊராட்சி. செருவாவிடுதி கடைவீதியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் மெயின் சாலையின் தெற்கு பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதன் அருகாமையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒருமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து, செருவாவிடுதி தெற்கு ஊராட்சியின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, உள்பகுதியின் சுற்றுச்சுவர் மற்றும்தரையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியின் அருகாமையில் அமைந்துள்ள இந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த நேரத்திலும்இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கஉத்தரவிட வேண்டுமென செருவாவிடுதி பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:தீக்கதிர்
பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பையில் தடகளப் போட்டிகள்.

பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பையில் தடகளப் போட்டிகள்.



பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான,50 ஆவது குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள் கி.வைரவன், கு.சின்னப்பா, சு.முத்துவேல் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.ராஜேந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர் சிவநேசன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சௌந் தர்யா நன்றி கூறினார்.விழாவில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோருக்கு கணையாழி அணிவித்து பாராட்டப்பட்டனர்.
இன்றைய(ஆகஸ்டு 31) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 31) பெட்ரோல் டீசல் விலை.



பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.66 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 31) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 31.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 31.

ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1942 – மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.
1962 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.
1968 – கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
1978 – இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் பயணிகள் கப்பல் “அட்மிரல் நகீமொவ்” கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 – வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.

பிறப்புக்கள்

1569 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627)
1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர் (இ. 1952)
1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
1944 – கிளைவ் லொயிட், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
1979 – யுவன் சங்கர் ராஜா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

இறப்புகள்

1814 – ஆர்தர் பிலிப், பிரித்தானிய கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. 1738)

1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (பி. 1882)
1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)
2001 – ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (பி. 1931)

சிறப்பு நாள்

மலேசியா – விடுதலை நாள் (1957)
திரினிடாட் டொபாகோ – விடுதலை நாள் (1962)
கிர்கிஸ்தான் – விடுதலை நாள் (1991)
நெடுவாசலில் 141–வது நாளாக தொடரும் போராட்டம்.

நெடுவாசலில் 141–வது நாளாக தொடரும் போராட்டம்.



பேராவூரணி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல் பொதுமக்கள் 2–வது கட்டமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்றும் 141–வது நாளாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆதார் - பான் இணைக்க நாளை(ஆகஸ்டு 31) கடைசி நாள்.

ஆதார் - பான் இணைக்க நாளை(ஆகஸ்டு 31) கடைசி நாள்.


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இத்துடன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிட்டது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் நீக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் கடைசி நாளாக இருந்தது. ஏராளமானோர் வருமான வரித்துறை இணைய தளத்தில் முட்டி மோதியதால், அந்த இணைய தளம் முடங்கியது. இதைதொடர்ந்து பான் கார்டுடன் ஆதார் இணைக்க, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதோர், income taxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இருஎண்களை இணைக்க முடியும். மொபைல் போனில், UIDPAN என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு பான் எண் ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.
கராத்தே போட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.

கராத்தே போட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.



தென்னிந்திய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.இப்போட்டியில் கட்டா பிரிவில் பேராவூரணி பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் எஸ்.அகிலன், கே.பிரகதீஸ்வரன், அமிர்தத் மணிசங்கர், எம்.சந்தியா, கே.பிரவீன், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள் ஜி.ஆனந்த சித்தன், சி.அருண்குமார், என்.யுவன் ராஜ், எஸ்.மணிகண்டன், பி.மணிமேகலை, எஸ்.சாலினி ஆகியோருக்கு தாய் புடோகான் பயிற்சி பள்ளியில், ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியன் வரவேற்றார். கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லயன்ஸ் எஸ்.கே.இராமமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பெற்றோர்கள், கிராமத்தினர், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய(ஆகஸ்டு 30) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 30) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 30) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tuesday, August 29, 2017

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 30.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 30.



ஆகஸ்டு 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1897 – மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1918 – விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.
1945 – பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.
1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 – தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1999 – கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிறப்புக்கள்

1748 – ஜாக் லூயிஸ் டேவிட், பிரெஞ்சு ஓவியர் (இ. 1825)
1871 – எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு, நியூசிலாந்து அணு இயற்பியல் அறிஞர் (இ. 1937)
1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர், (இ. 1999)
1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
1980 – சுப்ரமணியம் பத்ரிநாத், இந்தியக் கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

1928 – வில்ஹெம் வியென், ஜேர்மனியின் இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1864)
1940 – ஜெ. ஜெ. தாம்சன், ஆங்கிலேய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1856)
1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் புதின எழுத்தாளர் (பி. 1911)
2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])

சிறப்பு நாள்

அனைத்துலக காணாமற்போனோர் நாள்
பேராவூரணி அருகே 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம்
பெண்கள் கோரிக்கை.

பேராவூரணி அருகே 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை.



பேராவூரணி அருகே 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். தஞ்சையை அடுத்த நவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 113 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இதற்குரிய பயிர்க் காப்பீட்டிற்காக பிரிமியத்தொகையும் செலுத்தியிருந்தோம். விவசாயம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,400–ம், தரிசு நிலத்திற்கு பிரிமியத்தொகை செலுத்தியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,400–ம் வழங்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்தவர்களுக்கு வழங்கிய தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே பயிர்க் காப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை சுற்றி 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேராவூரணி அரசு கல்லூரி மாணவிகள் விடுதியும் உள்ளது. இந்த கடைகள் வந்த நாளில் இருந்து எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டை மறந்து டாஸ்மாக் கடைகளே கதி என்று கிடக்கின்றனர். வெளியூர்களில் இருந்து மது குடிக்க வருபவர்கள் போதை அதிகமாகி உடம்பில் துணிகள் எதுவும் இன்றி வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்து நின்றால் எங்களை ஆபாசமாக பேசுவதுடன், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதுடன், மோட்டார் சைக்கிளில் சென்று இடித்து தள்ளுகின்றனர். இப்படி பல்வேறு இடையூறுகளை நாள்தோறும் சந்தித்து வருகிறோம். வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். கடைகளை மூட வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் சுதந்திரமாக நடமாடவும், இடையூறு இன்றி மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரவும், நிம்மதியாக நாங்கள் வாழவும் 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.

 
பேராவூரணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்.

பேராவூரணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்.


பேராவூரணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வட்டார சுகாதாரத் துறை சார்பில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரைபகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு குடிநீர்வழங்கல் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றன.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர். கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மருத்துவக் குழுவினர் மருத்துவர் ரஞ்சித், செவிலியர்கள் நிலவழகி, பாக்கியலெட்சுமி, மருந்தாளுநர் தனலட்சுமி, சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிக மேலாண்மை (பிபிஏ)
பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளநிலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி கூறுகையில், “அரசின் அறிவிப்பின்படி உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியுடன் நடப்புஆண்டு, பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த ஆக.23 ஆம் தேதிதொடங்கியது. இது ஆக.30 ஆம் தேதி வரை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும்.அரசு விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். இப்பகுதியைச் சேர்ந்தஇருபால் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் கிடக்கும் மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு.

பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் கிடக்கும் மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு.



பேராவூரணியில் சாலையில்விழுந்து கிடக்கும் மரங்களைமுழுமையாக அப்புறப்படுத்தாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சற்று எதிரே, விளையாட்டு மைதானத்தையொட்டி தேநீர் கடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.சில தினங்களுக்கு முன்பு பெய்தமழையின் காரணமாக, சாலையோரம் இருந்த மரம் முறிந்து, அங்கிருந்த மின்கம்பியில் விழுந்துள் ளது. இதில் பாரம் தாங்காமல் மின்கம்பம் முறிந்து கீழே சாய்ந்துள் ளது. இதையடுத்து மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய பணியாளர்கள் மரத்தை வெட்டி சாலைஓரமாக போட்டதாக கூறப்படுகிறது.மரக்கிளை முழுவதுமாக வெட்டி அகற்றப்படாத நிலையில் சாலையோரம் பெரிய, பெரிய துண்டுகளாக கிடக்கின்றன.

இதனால் சாலையில் வருவோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இவற்றை அகற்றிசாலையை சீர்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து சிபிஎம் நகர்ச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமிகூறுகையில், “மின்கம்பம் சாய்ந்தநிலையில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. மின் கம்பிகளும் பாதுகாப்பற்ற நிலையில் கீழே கிடப்பதால், இவ்வழியாக செல்வோர் இடறி கீழே விழுந்து அடிபடுவதுதொடர்கதையாக உள்ளது. முழுமையாக அப்புறப்படுத்தப்படாத மரங்கள் சாலையில் கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள் ளது. பேருந்துகள் செல்லும் போது,இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கமுடியாத சூழலில் விபத்து ஏற்படும்அபாயம் உள்ளது.

மேலும் அருகிலேயே பட்டுப்போன, இற்றுக் கூடுபாய்ந்த பனைமரங்களும் உள்ளன. எனவே மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரங்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கவும் வேண்டும்” என்றார்.

நன்றி:தீக்கதிர்
இன்றைய(ஆகஸ்டு 29) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 29) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 29.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 29.

ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.
1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.
1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1756 – ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
1825 – பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.
1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.
1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

1632 – ஜான் லாக், ஆங்கிலேயத் தத்துவவியலாளர் (இ. 1704)
1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)
1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்
1958 – மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)
1959 – அகினேனி நாகார்ஜூனா, இந்திய நடிகர்
1977 – விஷால், திரைப்பட நடிகர்

இறப்புகள்

1976 – காசி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899)
2008 – ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்

சிறப்பு நாள்

இந்தியா – தேசிய விளையாட்டு நாள்

Monday, August 28, 2017

பேராவூரணி அடுத்த அம்மையாண்டியில்1934ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஆற்றுபாலம்.

பேராவூரணி அடுத்த அம்மையாண்டியில்1934ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஆற்றுபாலம்.





கல்லனை கால்வாயின் அம்புலி  கிளை ஆறு ஆவணம் வழி அம்மையாண்டியில் உள்ள ஆற்றுபாலம்.
பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையுள்ள மதுபான கடை அகற்றகோரிக்கை மனு.

பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையுள்ள மதுபான கடை அகற்றகோரிக்கை மனு.



பேராவூரணி அருகே உள்ள மதுபான கடையினை மூடுவதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:tamilselvan
தமிழகத்தில் இன்று முதல் 200 ரூபாய் நோட்டுகள் வினியோகம்.

தமிழகத்தில் இன்று முதல் 200 ரூபாய் நோட்டுகள் வினியோகம்.


தமிழகத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளது. புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இந் நிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது.
தினசரி மாற்றம் எதிரொலி பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்துள்ளது டீசல் விலையும் ரூ.3.67
அதிகரிப்பு.

தினசரி மாற்றம் எதிரொலி பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்துள்ளது டீசல் விலையும் ரூ.3.67 அதிகரிப்பு.



பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. டீசல் விலையும் ரூ.3.67 அதிகரித்து உள்ளது.

 
பேராவூரணி கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணிபேராவூரணி
கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணி.

பேராவூரணி கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணிபேராவூரணி கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணி.

பேராவூரணி கடைமடை பகுதியில் அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தரிசாக கிடந்த வயல்களில் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பேராவூரணி கடைமடை பகுதியான குருவிக்கரம்பை, வீரியங்கோட்டை, வாத்தலைக்காடு, பள்ளத்தூர், இரண்டாம்புளிக்காடு, நாடியம், கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வந்தது.கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து முறை வைத்து மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து முறை வைத்தும் தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. விவசாயிகள் பரவலாக கோடை சாகுபடி செய்வது வழக்கம். தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் நிகழாண்டு கோடை சாகுபடியும் நடைபெறவில்லை. தற்போது கடைமடையில் பரவலாக தொடர் மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் தரிசு நிலங்களில் நடவுப் பணி செய்து வருகின்றனர்.
பேராவூரணி வட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி.

பேராவூரணி வட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி.

பேராவூரணி வட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணை ந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் செங்கமங்கலம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
முகாமிற்கு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசியர் செல்வராணி, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், நெற்பயிரில் ரகங்கள் தேர்வு, உழவியல் முறைகள், உயிர் உரங்கள் உபயோகம், களைகட்டுப்பாடு, விதை நேர்த்தியின் அவசியம், திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் ராணி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய விதைகள் மற்றும் இடுபொருள்களின் மானிய விபரங்கள் பற்றி பேசினார். விதை நேர்த்தி குறித்த செயல்விளக்கத்தினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி மேலாளர் தமிழழகன் ஆகியோர் செய்து காண்பித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா நன்றி கூறினார்.
இன்றைய(ஆகஸ்டு 28) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 28) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.60 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,28) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 28.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 28.


ஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1349 – கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1511 – போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.
1521 – ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.
1619 – ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1789 – வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
1879 – சூளுக்களின் கடைசி மன்னன் செட்ஸ்வாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 – நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1916 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.
1922 – ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
1924 – சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1931 – பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1943 – நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1963 – மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்…’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 – பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.
1979 – ஐ.ஆர்.ஏயின் குண்டு ஒன்று பிரசல்சில் வெடித்தது.
1988 – ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1991 – சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.
1991 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
1996 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

பிறப்புக்கள்

1749 – ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, ஜெர்மனிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1832)
1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)
1855 – ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 – அய்யன்காளி, தலித் தலைவர் (இ. 1914)
1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியா அரசியல்வாதி
1965 – ஷானியா ட்வைன், கனடிய நாட்டுப்புற பாப் பாடகர்
1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்

இறப்புகள்

430 – புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)
1891 – ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)
1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)

சிறப்பு நாள்

புனித அகஸ்டீன் கிருத்தவத் திருவிழா

Sunday, August 27, 2017

பேராவூரணி சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளத்தில்
கரைப்பு.

பேராவூரணி சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் கரைப்பு.


பேராவூரணியில் விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் பேராவூரணிவாசிகளால் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் பேராவூரணியின் முக்கிய வீதிகள் வழியாக பயணித்து பல விநாயகர் சிலைகளுடன் ஆரவாரத்துடன் ஊர்வலமாக சென்று பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது.
பேராவூரணியில் தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள்.

பேராவூரணியில் தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள்.

பேராவூரணியில் தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள் உள்ளனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி உள்ளது. இது பேராவூரணி நகரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், தென்னங்குடி பிரிவு சாலை அருகில், மாவடுகுறிச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ளது.இந்த விடுதியில் பேராவூரணி அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதி பாதுகாப்பான சுற்றுச்சுவர் வசதியும், இரவுக் காவலர் வசதியும் இல்லாமல் உள்ளது. கல்லூரி விடுதி அருகிலேயே சிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவிகள் கொசுக்கடியால், நிம்மதியாக உறங்க முடியாமலும், பல்வேறு தொற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்டவைகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் கல்லூரி எதிரிலேயே பட்டுக்கோட்டை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, பலகாலமாக அகற்றப்படாததால், துர்நாற்றம் சகிக்க இயலாத வகையில் உள்ளது. அவற்றில் படுத்துப் புரளும் ஏராளமான பன்றிகள் அடிக்கடி கல்லூரி விடுதிக்குள்ளும் புகுந்து விடுவதோடு, கல்லூரியை சுற்றி படுத்து கிடப்பதால், மாணவிகள் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் நிலை உள்ளது.மேலும் சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே 4 மதுக்கடைகள் அமைந்துள்ளதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் உள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றுப்புறச்சூழல் சீர்கெட்டுள்ள நிலையில், பன்றிகள், கொசுக்களால் பல வகையிலும் அவதிப்படும் நிலையே உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள், அவற்றில் புரண்டு திரியும் பன்றிகள் மற்றும் கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், விடுதி மாணவியர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு, சிக்குன்குன்யா, மர்ம காய்ச்சல் என பல வகையான நோய்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதோடு, பன்றிகளை அப்புறப்படுத்தவும், மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேண வேண்டும்" என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 நன்றி;தீக்கதிர்
இன்றைய(ஆகஸ்டு 27) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 27) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.56 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 27.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 27.

ஆகஸ்டு 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1689 – இரசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
1776 – பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1813 – ஆஸ்திரியா, ரஷ்யா, மற்றும் புரூசியா படைகளை நெப்போலியன் “டிறெஸ்டென்” என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1816 – அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1828 – ரஷ்யப் படை “அக்கால்சிக்” என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
1828 – பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
1859 – பென்சில்வேனியாவின் “டிட்டுஸ்வில்” என்ற இடத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
1881 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1896 – ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1921 – 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை பிரித்தானியர் ஈராக்கின் மன்னனாக ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் அறிவித்தனர்.
1928 – போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.
1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.
1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1982 – துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.
2000 – மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறப்புக்கள்

1770 – ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)
1876 – தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954)
1908 – தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர்
1908 – டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)
1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர்

இறப்புகள்

1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
1963 – டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. 1868)
1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து கட்டிடக் கலைஞர் (பி. 1887)
1975 – முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (பி. 1892)
1976 – முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)
1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய அட்மிரல் (பி. 1900)

சிறப்பு நாள்

மால்டோவா – விடுதலை நாள் (1991)

Saturday, August 26, 2017

பேராவூரணியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.

பேராவூரணியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.


பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா. பேராவூரணியில் விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் பேராவூரணிவாசிகளால் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.

பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் பொருட்கள் திருட்டு.

பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் பொருட்கள் திருட்டு.

பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (58).விசைப்படகு மீனவர். தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.இவர் கடந்த 19 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலைவீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது, மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 33 பவுன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.42 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதுதெரியவந்தது.

கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய காவலர்கள் இல்லைபேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடந்து வரும் நிலையில் காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் திருட்டுக்களை கண்டுபிடிப்பதிலும், பொருட்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.



கடலூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில், கட்டாபிரிவில் தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணியை அடுத்தவீரியங்கோட்டை- உடையநாடு இராஜராஜன் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர் கி.பிரவீன் மற்றும் 6 ஆம் வகுப்புமாணவர் ஜே.அமிர்தத் மணிசங்கர் தத்தமது வயதிற்கானோர் பிரிவில் தென்னிந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர் சென்சாய் கே.பாண்டியனையும் பள்ளிதாளாளர் ஆர்.மனோன்மணிஜெய்சங்கர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இன்றைய(ஆகஸ்டு 26) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 26) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.52 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 26) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 26.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 26.



ஆகஸ்டு 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1768 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.
1795 – திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.
1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.
1957 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
1978 – முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.
1978 – முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
1997 – அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

பிறப்புக்கள்

1880 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)
1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)
1910 – அன்னை தெரேசா, அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
1927 – அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)
1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
1934 – ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
1952 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)
1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)

Friday, August 25, 2017

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய விநாயகர்
சதுர்த்தி விழா.

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.



பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் அருகே வெள்ளநீரால் போக்குவரத்து பாதிப்பு.

பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் அருகே வெள்ளநீரால் போக்குவரத்து பாதிப்பு.



பேராவூரணி பேரூராட்சி புதுரோடு திருப்பத்தில் வடிகால் வெட்டி விட வீட்டுகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வெள்ள நீர் சாலை முழுவதும் ஆக்கிரமித்து குட்டி குளமாக காட்சியளிக்கிறது. இரண்டு, நான்கு சக்கரவாகனங்கள் செல்ல முடியவில்லை. நடந்து செல்வோர் நீந்தி செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. இது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு அந்த வார்டு பொதுமக்கள் சார்பில் லோகேஷ்வரன் தஞ்சை கலெக்டருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இன்றைய(ஆகஸ்டு 25) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 25) பெட்ரோல் டீசல் விலை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.51 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு  25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 25.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 25.

ஆகஸ்டு 25 (August 25) கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1580 – ஸ்பெயின் அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் போர்த்துக்கலை வென்றது.
1609 – இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
1732 – யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான்.
1758 – பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
1803 – யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1830 – பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
1912 – சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1920 – போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
1933 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
2003 – மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2007 – கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1906 – திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993)
1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
1952 – விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1973 – நித்யஸ்ரீ மகாதேவன், பாடகி

இறப்புகள்

1822 – வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)
1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
1908 – ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
1976 – எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
2007 – தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
2012 – நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)

சிறப்பு நாள்

உருகுவே – விடுதலை நாள் (1825)
பிலிப்பீன்ஸ் – தேசிய வீரர்கள் நாள்

Thursday, August 24, 2017

பேராவூரணியில் நெல், காய்கறி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க மண்புழு அவசியம்.

பேராவூரணியில் நெல், காய்கறி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க மண்புழு அவசியம்.

நெல், காய்கறிசாகுபடியில் மகசூலை அதிகரிக்க மண்புழு அவசியம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள் ளது.
நெற்பயிர் சாகுபடியில் மேலாண்மை பயிற்சி முகாம்.

நெற்பயிர் சாகுபடியில் மேலாண்மை பயிற்சி முகாம்.



பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம் கீழக்குறிச்சியில் அட்மாதிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெற்பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது.

கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர்நாராயணசாமி வரவேற்றார். மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) நவீன் சேவியர்; பருவத்திற்கேற்ற நெல்ரகங்கள், விதை நேர்த்தி முறை, மண் மற்றும் பாசன நீர் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.

ஒருங்கிணைந்தகளை  நிர்வாகம், ஒருங்கிணைந்த உரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணூட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி முறை, பயிரைதாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்முறை, நெற்பயிரைதாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறை, நெல்சாகுபடியில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறை குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையஉதவி பேராசிரியர் செல்வராணி விளக்கம் அளித்தார்.

ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன். உதவிவிதை அலுவலர் ராஜேந்திரன், அட்மாதிட்ட அலுவலர்கள் சரவணி. பெனிக்சன் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். அட்மாதிட்ட தொழில் நுட்பவல்லுநர் லீலா நன்றி கூறினார்.

 
பேராவூரணி பகுதியில் திருமண மண்டபங்களுக்கு உரிமம் பெற வேண்டும் தாசில்தார்
அறிவிப்பு.

பேராவூரணி பகுதியில் திருமண மண்டபங்களுக்கு உரிமம் பெற வேண்டும் தாசில்தார் அறிவிப்பு.



பேராவூரணி பகுதியில் இயங்கி வரும் திருமண மண்டபங்கள், விழா அரங்கங்கள் இயங்குவதற்கு உரிமம் பெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பேராவூரணி தாசில்தார் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு: பேராவூரணி வட்டாரத்தில் இயங்கி வரும் திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களின் உரிமையாளர்கள், தமிழ்நாடு கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965ன் படி கீழ் காணும் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு உரிம கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை வங்கியில் செலுத்தி ரசீதை விண்ணப் பத்துடன் இணைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களிடம் கட்டிட உறுதிச்சான்று, அங்கீகரிக்கப் பட்டகட்டிட வரை படம் தீயணைப்புதுறையிடமிருந்து பெறப்பட்ட மறுப் பின்மை சான்றிதழ், பொதுசுகாதாரத்துறையிடமிருந்து சுற்றுப்புறதூய்மைக்கான சான்று ஆகியவற்றையும், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சிட்டா அடங்கல் ஆகியவற்றையும் சமர்ப் பிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும் விழா காலங்களில் வெடிகள் வெடிக்க அனுமதி கிடையாது. மண்டபங்களில் பார்க்கிங் வசதி கண்டிப்பாக செய்யவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை வழியில் நிறுத்தக்கூடாது. கீற்று கொட்டகை மண்டபங் கள் இருக்கக் கூடாது. ஒலி பெருக்கிகளில் அனுமதி பெற்ற நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய(ஆகஸ்டு 24) பெட்ரோல் டீசல் விலை.

இன்றைய(ஆகஸ்டு 24) பெட்ரோல் டீசல் விலை.



பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.37 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆகஸ்டு 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வரலாற்றில் இன்று ஆகஸ்டு 24.

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 24.



ஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1349 – ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1511 – மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
1572 – புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.
1690 – கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
1814 – பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
1821 – மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1875 – கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.
1912 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1929 – பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1931 – பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1936 – ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1939 – நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1949 – நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
1954 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1954 – பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1968 – பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.
1989 – வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.
1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.
1992 – மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
1995 – விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
2004 – மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.
2006 – புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.
2006 – ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி
2008 – சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.

பிறப்புக்கள்

1817 – டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
1906 – நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
1929 – யாசர் அரபாத், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2004)
1941 – இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
1947 – பௌலோ கோலோ, பிரேசில் நாட்டு எழுத்தாளர்
1963 – தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
1965 – ரெஜி மிலர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1979 – மைக்கல் ரெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1832 – சாடி கார்னோ, பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1796)
1972 – வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
2014 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)

சிறப்பு நாள்

புனித பார்த்தெலோமேயு நாள்
உக்ரேன் – விடுதலை நாள் (1991)