முகாமிற்கு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசியர் செல்வராணி, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், நெற்பயிரில் ரகங்கள் தேர்வு, உழவியல் முறைகள், உயிர் உரங்கள் உபயோகம், களைகட்டுப்பாடு, விதை நேர்த்தியின் அவசியம், திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் ராணி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய விதைகள் மற்றும் இடுபொருள்களின் மானிய விபரங்கள் பற்றி பேசினார். விதை நேர்த்தி குறித்த செயல்விளக்கத்தினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி மேலாளர் தமிழழகன் ஆகியோர் செய்து காண்பித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா நன்றி கூறினார்.
0 coment rios: