பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் கிடக்கும் மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு.
பேராவூரணியில் சாலையில்விழுந்து கிடக்கும் மரங்களைமுழுமையாக அப்புறப்படுத்தாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சற்று எதிரே, விளையாட்டு மைதானத்தையொட்டி தேநீர் கடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.சில தினங்களுக்கு முன்பு பெய்தமழையின் காரணமாக, சாலையோரம் இருந்த மரம் முறிந்து, அங்கிருந்த மின்கம்பியில் விழுந்துள் ளது. இதில் பாரம் தாங்காமல் மின்கம்பம் முறிந்து கீழே சாய்ந்துள் ளது. இதையடுத்து மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய பணியாளர்கள் மரத்தை வெட்டி சாலைஓரமாக போட்டதாக கூறப்படுகிறது.மரக்கிளை முழுவதுமாக வெட்டி அகற்றப்படாத நிலையில் சாலையோரம் பெரிய, பெரிய துண்டுகளாக கிடக்கின்றன.
இதனால் சாலையில் வருவோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இவற்றை அகற்றிசாலையை சீர்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து சிபிஎம் நகர்ச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமிகூறுகையில், “மின்கம்பம் சாய்ந்தநிலையில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. மின் கம்பிகளும் பாதுகாப்பற்ற நிலையில் கீழே கிடப்பதால், இவ்வழியாக செல்வோர் இடறி கீழே விழுந்து அடிபடுவதுதொடர்கதையாக உள்ளது. முழுமையாக அப்புறப்படுத்தப்படாத மரங்கள் சாலையில் கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள் ளது. பேருந்துகள் செல்லும் போது,இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கமுடியாத சூழலில் விபத்து ஏற்படும்அபாயம் உள்ளது.
மேலும் அருகிலேயே பட்டுப்போன, இற்றுக் கூடுபாய்ந்த பனைமரங்களும் உள்ளன. எனவே மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரங்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கவும் வேண்டும்” என்றார்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: