நெற்பயிர் சாகுபடியில் மேலாண்மை பயிற்சி முகாம்.
பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம் கீழக்குறிச்சியில் அட்மாதிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெற்பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது.
கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர்நாராயணசாமி வரவேற்றார். மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) நவீன் சேவியர்; பருவத்திற்கேற்ற நெல்ரகங்கள், விதை நேர்த்தி முறை, மண் மற்றும் பாசன நீர் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.
ஒருங்கிணைந்தகளை நிர்வாகம், ஒருங்கிணைந்த உரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணூட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி முறை, பயிரைதாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்முறை, நெற்பயிரைதாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறை, நெல்சாகுபடியில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறை குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையஉதவி பேராசிரியர் செல்வராணி விளக்கம் அளித்தார்.
ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன். உதவிவிதை அலுவலர் ராஜேந்திரன், அட்மாதிட்ட அலுவலர்கள் சரவணி. பெனிக்சன் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். அட்மாதிட்ட தொழில் நுட்பவல்லுநர் லீலா நன்றி கூறினார்.
0 coment rios: