பேராவூரணி வட்டாரத்தில் தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. திருச்சிற்றம்பலம், ஆவணம், செருவாவிடுதி, படப்பனார்வயல், பைங்கால், சாணாகரை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன் தலைமையில் பிடிஓவினர் குமரவடிவேல், சித்ரா முன்னிலையில் மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கல், புகை மருந்து அடித்தல், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது.
காய்ச்சல் தடுப்பு பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், டாக்டர்கள் அறிவானந்தம், சிவரஞ்சனி, தீபா, கீர்த்திகா, கோபிகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள், புண்ணியநாதன், ராஜேந்திரன், கருப்பசாமி, பிரதாப்சிங், அமுதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 coment rios: