தென்னக ரயில்வே திருச்சிரா ப்பள்ளி டிவிசன் சார்பில் காரை க்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் பேராவூ ரணி நகரில் பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ள ரயில்வே கேட்டை மூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் பொதுமக்கள் பாதி க்கப்படுவதால் இத்திட்டத்தை கைவிட்டு, ரயில்வே கேட்டை தொடர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி பேருந்து நிலை யத்தில் இருந்து நீலகண்டபுரம் செல்லும் சாலையில், பேராவூரணி- காரைக்குடி ரயில் பாதையில் இரயில்வே கேட் எண் 121 பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. நூறாண்டு புழக்கத்தில் உள்ள இந்த ரயில்பாதை தற்போது நிரந்தரமாக மூடப் போவதாக ரயில்வே துறை அலுவலர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த பாதையை மூடக்கூடாது எனவும், தொடர்ந்து எப்பொழுதும் போல் பாதையை பயன்பாட்டிற்கு அமைத்து தரவேண்டும் என குழு அமைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து உபயோகிப்பாளர் குழு சார்பில் தலைவர் வழக்க றிஞர் எஸ்.மோகன் கூறுகையில், கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த ரயில்வே கேட் பாதை தென்பகுதியில் உள்ள கழனிவாசல், கொரட்டூர், ரெட்டைவயல், பெருமகளூர் போன்ற கிராமப் பகுதிகளையும், காலகம்-ஆவுடையார்கோயில் இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதையடுத்த பகுதியில் மருத்துவமனை, பள்ளி, அடுக்கு மாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அங்கன்வாடி, சுடுகாடு, விரிவாக்க பகுதிகள், விவ சாய நிலங்கள் உள்ளன. இவ்வழியே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் பாதையாக உள்ளது. இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், பள்ளி வாகனங்கள் என தினசரி 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இரயில்வே கேட்டை மூடி விட்டால் இப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேரிழப்பும், சிரமமும், அச்சமும் ஏற்படும். மிதிவண்டிகளை பயன்படுத்தி பள்ளி செல்லும் மாணவ, மாண வியர் பெரும் இன்னலுக்கு ஆளா வர். எனவே இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக, தொடர்ந்து அமைத்து தர அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ரயில்வே துறை உயர் அலு வலர்களுக்கு கோரிக்கை மனு அனு ப்பப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: