Friday, March 30, 2018

பேராவூரணி பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்காவிட்டால் சாலை மறியல்.

பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோயில் வரை 2016ம் ஆண்டு பி.96 என்ற வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது. நாளொன்றுக்கு 4 முறை இயக்கப்பட்ட இந்த பேருந்து வருமானத்துடன் 7 மாதம் முறையாக இயக்கப்பட்டது. இதனால் 33 கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர், மருத்துவமனை செல்வோர் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த வழித்தடத்தில் தினசரி 2 முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் இயக்கப்படுவதில்லை. எனவே பி96 வழித்தடத்தை நிரந்தரப்படுத்தி மீண்டும் பழையவாறு 4 முறை இயக்கவும், மேலும் பேராவூரணியில் இருந்து கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவாப்பாடி வழியாக கட்டுமாவடி வரை இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள பேருந்து வழித்தடம் எண்.15 ஐயும் மீண்டும் இயக்க வேண்டும். இந்த 2 பேருந்துகளையும் மீண்டும் ஒரு வாரத்துக்குள் இயக்காவிட்டால் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: