பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு குடிதண்ணீர் வசதி செய்துதரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் சார்பாகமுன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பின்னவாசல் பெரியய்யாதஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: பின்னவாசல்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.பிரசவங்களும் நடக்கிறது. இச்சூழ் நிலையில் சுகாதார நிலையத்திற்கு தண்ணீர்வசதி இல்லாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டுள்ளார்.ஊழல் அதிகாரிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு பின்னவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்துளைக்கிணறு, நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அண்மையில் அமைக்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர் ஆழ்துளைக்கிணறை முறையாக அமைக்காமல், ஆழம்குறைவாக அமைத்ததால் தண்ணீர் வரவில்லை என்றும், தரம் குறைந்த நீர்மூழ்கிமோட்டாரை பயன்படுத்தியதால் பழுதடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடிக்கு கீழே உள்ள நிலையில், வரும் கோடை காலத்தில் 200 அடிக்கும் கீழே செல்லும் சூழல் உள்ளது. சாதாரணமாக இப்பகுதியில் வீடுகளுக்கு 250 அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப் படும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் நூறு அடிஆழத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைப்பதும், தரம் குறைந்த நீர்மூழ்கி மோட்டார், பைப், நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதால் ஓரிரு மாதங்களிலேயே பழுதடைந்து பயன்படாமல் போவதும், அரசுப் பணம் வீணாவதும் தொடர்கதையாகி விட்டது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு துணைபோகும் ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Friday, February 16, 2018
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: