இதற்கு 2 சத டி.ஏ.பி.கரைசலை சூல் கட்டும் பருவம் மற்றும் தொண்டை கதிர் பருவங்களில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதற்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 2 கிலோ யூரியா மற்றும் 2 கிலோ பொட்டாஷ் உரங்களை கரைத்து, 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
சூல் கட்டும் பருவம் மற்றும் தொ ண்டை கதிர் பருவத்தில் தவறாது இக்கரை சலை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் கதிரில் உருவாகும் மணிகள் அனைத்தும் பதரற்ற மணிகளாக கிடைப்பதுடன் நல்ல எடையுடன் கூடிய மணிகளாகவும் கிடைக்கிறது.
இவ்வாறு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

0 coment rios: