
பேராவூரணியில் தமிழ்ப்பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர் சேர்க்கை 28ம் தேதி வரை நீட்டிப்பு.
பேராவூரணி தமிழ்ப்பல்கலைக்கழக கல்விமையத்தில் நடைபெற்று வரும் 2017-2018 கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜனவரி 28 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கல்வி மையம் பேராவூரணி வாரச்சந்தை எதிரில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் அறிவித்துள்ளபடி கல்வியாண்டு மாணவர் சேர்ப்பு ஜனவரி 28ம் தேதி வரை நீடித்து மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வரும் மே மாதம் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை பேராவூரணியிலேயே எழுத முடியும் .மேலும் விவரங்களுக்கு மைய ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

0 coment rios: