
























தஞ்சை நாணயவியல் கழகம் சார்பில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (கிழக்கு) யில் நாணயக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தின் பேராவூரணி பொறுப்பாளர்கள் காசு சு.கதிரேசன், மு.சாதிக்அலி இவர்களின் முயற்சியில் இக்கண்காட்சி இரண்டு நாட்கள் (09.12.2017 - 10.12.2017) நடைபெற உள்ளது. இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் இரா.மாலதி தலைமையில், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் முன்னிலையில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி தொடங்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகிறார்கள். இக்கண்காட்சியில் தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த 1000 ரூபாய் நாணயம், தமிழ் எழுத்துக்கள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட நாணயத் தாள்கள், சோழர்கள், மொகலாயர்கள் கால நாணயங்கள், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள், நாற்பதாயிரம் 25 பைசா நாணயங்கள், பதிமூன்றாயிரம் 20 பைசா நாணயங்கள், ஏழாயிரம் 10 பைசா நாணயங்கள், முற்கால அணா நாணயங்கள், புதுக்கோட்டை அம்மன் காசு, வெள்ளி நாணயங்கள், அறிஞர் அண்ணா கையொப்பமிட்ட நாணயம், துளையிட்ட நாணயங்கள், திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயம், நூற்றாண்டு பழைமையான விளக்குகள், பன்னாட்டு நாணயங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
0 coment rios: