

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதி அவர்களால் இக்கோட்டையானது கட்டப்பட்ட போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி அவர்களாலும் உதவி ஆணையர் அவர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
0 coment rios: