
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தினர் உள்ளனர். இவர்களுக்கு தனி வழிபாடு முறை, வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தனி நாட்காட்டி உண்டு.
அதன்படி இவர்கள் கோளரிசாலையர் பொங்கல் திருவிழா, பங்குனி பிறவானாட்பிறப்பு திருனாள் திருவிழா, வைகாசி பாசுபத சன்னத திருக்காப்பு திருவிழா, புத்தாடை புனைசீர் திருவிழா, புரட்டாசி பிச்சைஆண்டவர் திருக்கோலகாட்சி திருவிழா, கார்த்திகை கார்க்கும் தீ கை கொண்ட கார்த்திகையர் தீபதிருனாள் போன்ற திருவிழாக்களை கொண்டாடுவது வழக்கம்.
இதன்படி இன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாலை ஆண்டவர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றி கூட்டு பிரார்தனையுடன் விழாவை துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட சுமார் ஐயாயிரம் பேர் தீபங்களை வணங்கி சுற்றிவந்து சபைக்கரசரிடம் ஆசி பெற்றனர். இந்த தீப விழாவானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கின்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
0 coment rios: