


பேராவூரணி லயன்ஸ் சங்கம்,ஸ்ரீவிநாயகா ஜூவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு லயன்ஸ் சங்கத்தலைவர் பொறி டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆசிரியர்செ.இராமநாதன் வரவேற்றார். விநாயகா ஜூவல்லர்ஸ்உரிமையாளர்கள் இ.வீ.சந்திரமோகன், இ.வீ.ச.சரவணன் முகாமை தொடங்கி வைத்தனர்.இம்முகாமில் 437 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் கண்புரை நோய் கண்டறியப்பட்ட 147 பேர்அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டனர்.
0 coment rios: