
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சாமானிய மக்கள் பயன்படுத்தும் ரேசன் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அண்மையில் ரேசன் கடையில் சர்க்கரை விலையை 2 மடங்காக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தமிழக மக்களுக்கு மேலும் ஒரு இடியாக ரேசன் கடைகளில் உளுத்தம்பருப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் திமுக வினர் நேற்று ரேசன் கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனார். அந்த வகையில் பேராவூரணி திமுக வினர் தங்கள் முற்றுகை போராட்டத்தை பேராவூரணி முடப்புளிக்காடு ரேசன் கடை முற்றுகை ஈட்டனர்.
0 coment rios: