
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பேரணியை தலைமையாசிரியர் என். பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார். உதவித் தலைமையாசிரியர் சோழ. பாண்டியன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என்சிசி அலுவலர் சத்தியநாதன் தலைமையில் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் அணிவதின் அவசியம் உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு பேராவூரணி கடைவீதி சேதுசாலை, ஆவணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
0 coment rios: