பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மகளிர் கல்லூரியின் கணனி அறிவியல் துறை சார்பில் 'டேட்டா சயின்ஸ்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பாலசுப்ரமணியன் தலைமையுரையாற்ற, கல்லூரியின் ஆராய்ச்சி ஆலோசகர் முனைவர் ராமைய்யன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்விற்கு சென்னை பல்கலைக்கழக, கணனி அறிவியல் துறையின் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் பேராசிரியர் வேதகரம்சந்த் காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டேட்டா சயின்ஸ் எனும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விளக்கங்களை மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார். நிகழ்வில் துறைத் தலைவர் பேராசிரியர் சகிலா பானு வரவேற்புரையாற்ற, மாணவி ரஹிலா அம்மாரா நன்றியுரையாற்றினார். கணனி துறையின் 150 க்கும் மேற்பட்ட மாணவிகளும் 10 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நன்றி:வேதகரம்சந்த் காந்தி
0 coment rios: