டெங்கு பேராவூரணியில் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆய்வு.
பேராவூரணி பகுதியில் டெங்கு காய்ச்சல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர்எம்.எட்வின் தெரிவித்தார்.பேராவூரணி அரசு மருத்துவமனையிலும் அங்குள்ள செல் கவுண்டிங் இயந்திரத்தையும் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,” கடந்த அக்டோபர் 8 ஆம் தேதிக்குப்பிறகு இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை.
சாதாரண காய்ச்சலுக்கு 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.பின்னர் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, சரியாக பதில்அளித்ததற்காகவும், மாணவர்களுக்கு தொடர்ச்சியாக நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கும் பள்ளி தாளாளர்ஜி.ஆர்.ஸ்ரீதரிடம் பாராட்டுதெரிவித்தார். பின்னர் பேராவூரணி காவல்நிலையம், மாவடுகுறிச்சி, சேதுரோடு, கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: