பேராவூரணியில் கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த பழைய இரும்பு கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.
பேராவூரணி கடைவீதியில் பொதுசுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடைவீதியில் உள்ள பழைய இரும்புக் கடை குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் குடங்களில் லார்வா கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பழைய இரும்பு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அருகில் செயலபட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயன்பாடின்றி இருந்த தண்ணீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டு தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன், தவமணி, புண் ணியநாதன், ராஜேந்திரன் உடனிருந்தனர்.
நன்றி:தினகரன்
0 coment rios: