பேராவூரணி மதுக்கடையை மூட கோரி கையெழுத்து இயக்கம்.
பேராவூரணி நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்தக் கோரி கடைத்தெரு வணிகர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம், திவிக, சி.பி.ஐ., சி.பி.எம்., மதிமுக, நாம் தமிழர் கட்சி, உழைக்கும் மக்கள் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனித நேய ஜனநாயக கட்சி மற்றும் மதுவுக்கு எதிரான இயக்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் இந்நிகழ்வுக்கு வணிகர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
0 coment rios: