Saturday, September 30, 2017

பேராவூரணி கலைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.

பேராவூரணி கலைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.

















 

பேராவூரணி பகுதியில் தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை விமைசையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டும் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் அரசு அலுவலகம், வங்கிகள், கல்வி நிறுவனங்களில் கடந்த 28ம் தேதி மாலை ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை கொண்டாடினர். தனியார் தொழில் நிறுவனங்கள், வர்த்த்க் நிறுவனங்கள், சிறு வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் போன்றவர்கள் நேற்று ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடினர். இறைவனை வழிப்பட்டு பொங்கல், சுண்டல், பொறி, பழங்கள், அவல் ஆகியவற்றை தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு வழங்கி ஆயுத பூஜையை கொண்டாடினர். ஆயுத பூஜை ஒட்டி பேராவூரணியில் வாழைமரம், வாழை இலை, பூக்கள், பழங்கள், தேங்காய், பூசனிக்காய் விற்பனை விறு விறுப்பாக இருந்தது.பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் கருப்பன் திரைப்படம்.

பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் கருப்பன் திரைப்படம்.



பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் திரைப்படம் 29.09.2017 முதல் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது.

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30 .

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30 .



செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1744 – பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர்.
1791 – மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது.
1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
1860 – பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (tram) சேவை ஆரம்பமானது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1882 – உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
1895 – மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது.
1901 – ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
1935 – அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது.
1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன.
1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
1945 – இங்கிலாந்தில் தொடருந்து விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – பாகிஸ்தான், யேமன் ஐநாவில் இணைந்தன.
1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
1966 – “பெக்குவானாலாந்து” பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானாக் குடியரசு ஆகியது.
1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1993 – இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் நகரங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2001 – இந்தியக் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.

பிறப்புகள்

1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)
1550 – மைக்கேல் மாயிஸ்ட்லின், செருமானிய வானியலாளர் (இ. 1631)
1870 – சான் பத்தீட்டு பெரென், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-அமெரிக்கர் (இ. 1942)
1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரோமானிய-அமெரிக்கர்
1931 – எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)
1941 – கமலேஷ் சர்மா, இந்தியக் கல்வியாளர்
1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை
1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிசு டென்னிசு ஆட்டக்காரர்
1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

2004 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (பி. 1936)
2008 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)

சிறப்பு நாள்

பொட்சுவானா – விடுதலை நாள் (1966)
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

Thursday, September 28, 2017

பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.

பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.







பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.பூ, பழம், பூஜை பொ ருட் கள் உள்ளிட்ட ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை  கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் செவ்வந்திபூ, மல்லிகை,முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 முதல் 100 ரூபாய் வரை விற்ற செவ்வந்திபூ ரூ.300க்கும், கிலோ ரூ.150க்கு விற்ற முல்லை, மல்லியின் விலை ரூ.500க்கும் விற்ப னையானது. பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன என்றார்.

 
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு
மரக்கன்றுகள் நடும் விழா.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.





பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமையன்று கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமையில் நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் வேம்பு, புங்கை, ரோஸ்வுட், மகிழம், நெல்லி, தேக்கு உள்ளிட்ட பல வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.

செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1911 – இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
1941 – உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1962 – கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
1972 – ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.

பிறப்புக்கள்

1901 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1954)
1920 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியப் பிரதமர்
1951 – மிசெல் பாச்செலெட், சிலியின் குடியரசுத் தலைவர்
1975 – ஸ்டுவட் கிளார்க், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1988 – கெவின் டுரான்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)
அறந்தாங்கி மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி

அறந்தாங்கி மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி



அறந்தை விநாயகா அணியினரால் நடத்தப்படும் 24 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 07-10-2017 ஆம் தேதி நடைபெறவுள்ளது..

அறந்தாங்கி பிள்ளைதாச்சியம்மன் கோவில் திடலில் நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹20,017 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,017 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,017 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,017 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 57 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹400 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு : +91 7373163078,+91 8610572150 ,+91 8489811379

பட்டுக்கோட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

பட்டுக்கோட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

 

பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.
வருகின்ற 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் 1.00 மணிவரை பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெருகிறது.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர்
மேலாண்மை பயிற்சி.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.



பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர். ராமநாதன் தலைமை வகித்தார்  பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் பழ. தியாகராஜன் முன்னிலையில் தீயணைப்பு வீரர் ரெ. செல்வம் தீ விபத்து ஏற்பட்டால் தீ பரவாமல் தடுப்பது ஆபத்து காலங்களில் முதலுதவி பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.

பேராவூரணி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம்.

பேராவூரணி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம்.



பேராவூரணி வட்டாரத்தில் தமிழக அரசின் உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி கூட்டுப் பண்ணைய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு. பேராவூரணி வட்டாரத்தில் சிறுகுறு விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் அவர்களது வருமானத்தை மும்மடங்காகப் பெருக்கவும் ஒருமித்த பயிர் சாகுபடி மேற்கொள்ள உள்ள சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 விவசாயிகளுக்கு ஓர் உழவர் ஆர்வலர் குழு அமைத்து ஒரு கிராமத்திற்கு 5 உழவர் ஆர்வலர் குழு வீதம் சொர்ணக்காடு, செங்கமங்கலம், பெரியநாயகிபுரம், திருச்சிற்றம்பலம், இடையாத்தி ஆகிய 5 கிராமங்களில் 25 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுக்களுக்கு வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டி கோரிக்கை.

சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டி கோரிக்கை.



பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் வழியில்உள்ள சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதியதை பொருத்த வேண்டும் என்று மின்வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டாணிக்கோட்டையில் இருந்து அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பிகள்மட்டும் வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. இதனால் வரும் மழை காலங்களில் பலத்தக்காற்று வீசினால் மேலும் சேதமடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதன் வழியில் கயர் தொழிற்சாலை உள்ளது.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இவ்வழியே கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.