Thursday, September 28, 2017

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.

செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
1227 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
1833 – மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
1848 – ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1911 – இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
1941 – உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1962 – கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
1972 – ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.

பிறப்புக்கள்

1901 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1954)
1920 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியப் பிரதமர்
1951 – மிசெல் பாச்செலெட், சிலியின் குடியரசுத் தலைவர்
1975 – ஸ்டுவட் கிளார்க், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1988 – கெவின் டுரான்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: