சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டி கோரிக்கை.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் வழியில்உள்ள சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதியதை பொருத்த வேண்டும் என்று மின்வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டாணிக்கோட்டையில் இருந்து அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பிகள்மட்டும் வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. இதனால் வரும் மழை காலங்களில் பலத்தக்காற்று வீசினால் மேலும் சேதமடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதன் வழியில் கயர் தொழிற்சாலை உள்ளது.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இவ்வழியே கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: