நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிரலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு போன்றவற்றை பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 காசுகளும், டீசல் விலை 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலை உயர்வுக்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.24 காசுகளும், டீசல் விலை ரூ.59.50 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த 16ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2.16 காசுகளும், டீசல் விலை ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: