Wednesday, May 31, 2017
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்வு.
by Unknown
நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிரலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு போன்றவற்றை பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 காசுகளும், டீசல் விலை 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலை உயர்வுக்கு பின்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.24 காசுகளும், டீசல் விலை ரூ.59.50 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த 16ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2.16 காசுகளும், டீசல் விலை ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேராவூரணி சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி.
by Unknown
பேராவூரணியில் புதுக்கோட்டை சாலையில் கட்டிட இடிபாடு கழிவுகள், தென்னை மற்றும் பனை மரத்துண்டுகள், குப்பைகள் ஆகியவற்றை சாலையோரம் கொட்டியும், சில நேரங்கள் தீ வைத்தும் எரித்துச் செல்லும் மர்ம நபர்களின் செயல்களால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேராவூரணியில் ஊர் பெயருக்கு காரணமான பெரியகுளம் என்ற ஏரி உள்ளது. இது பேராவூரணி பெரியார் சிலையில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் புதுக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளது. கடந்த பல வருடங்களாகவே ஆக்கிரமிப்பில் உள்ள பெரியகுளம் ஏரி, தனது பரப்பை இழந்து குறுகி வருகிறது. நீண்ட நெடுங்காலமாக தூர் வாரப்படாததால் இந்த ஏரி கருவேல மரங்கள் நிறைந்து, மண் மேடிட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் கட்டிட இடிபாடுகளையும், தேவையின்றி வெட்டி எறியப்படும் தென்னை, பனைமரங்கள், மரத்தின் வேர்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை ஏரியின் ஓரத்தில் கண்காணிப்பு இல்லாத நள்ளிரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் பலமுறை அப்புறப்படுத்தியும், மீண்டும் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டதால் தற்போது பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இதனால் ஏரியை நிறைத்த குப்பைகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதன்காரணமாக மாநில நெடுஞ்சாலையான இந்த சாலை குறுகலாக காணப்படுகிறது. இவ்வழியே நாள்தோறும் பள்ளி வாகனங்களும், தனியார், அரசு பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் மிதிவண்டிகளில் சென்று வருகின்றனர்.
சாலையோரம் சேர்ந்து வரும் குப்பைகளாலும், தீ வைத்து எரித்து விடுவதால் ஏற்படும் புகை மாசுகளாலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும், ஒவ்வாமை, ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இப்பகுதியில் கோழிக்கழிவுகளும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி பேராவூரணி நகரச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கூறுகையில், "சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. பேரூராட்சி மற்றும் காவல்துறை கவனம் செலுத்தி குப்பைகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சேதப்படுத்தும் நபர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தும்" என்றார்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் நடந்த கைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி.
by Unknown
பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடந்தது. மின்னொளி திடலில் நடந்த இந்த கைப்பந்து போட்டிக்கு முதல் பரிசு ரூபாய் 20,000, இரண்டாம் பரிசு 15,000 , மூன்றாம் பரிசு 10,000, நான்காம் பரிசு 5,000 மற்றும் சிறப்பு பரிசுகள் பல அறிவிக்கப்பட்டிருந்தன.
உடையநாடு ஸ்போர்ஸ் கிளப் நடத்திய இப்போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு துவங்கி வைத்தார். இதில் திருச்சி, இடைமேலையூர், கீழக்கரை, திட்டச்சேரி, கீரமங்கலம், பொன்காடு, கடலூர் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் பரிசை .திருச்சி அணியினரும்., இரண்டாம் பரிசை கீரமங்கலமஅணியினரும், மூன்றாம் பரிசை இடைமேலையூர் அணியினரும், நான்காம் பரிசை பொன்காடு அணியினரும் பெற்றனர். பரிசுகளை பண்ணவயல் நீதியரசர் ஆர். ராஜதம்பி வழங்கினார். விழவில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் ஏ.தாஜுதீன், யாசர்அரபாத், குலாம்கனி, அப்துல்ரசாக், அப்துல்சபார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Monday, May 29, 2017
Sunday, May 28, 2017
பேராவூரணி ரமலான் மாத நோன்பு தொடக்கம்.
by Unknown
இஸ்லாமியர்களின் புனித கடமையாக விளங்கும் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்குகிறது.
இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஐந்து கடமைகளில் முக்கியமாக கருதுகின்றனர். அதில் ஒன்று ரமலான் மாதத்தை புனித மாதமாக கொண்டாடுவது ஆகும். அந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து, 5 வேளை தொழுகை நடத்துவர். மாலையில் நோன்பு நோற்க அனைத்துப் பள்ளி வாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஸர் என்னும் உணவு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து இறுதியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.
இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஐந்து கடமைகளில் முக்கியமாக கருதுகின்றனர். அதில் ஒன்று ரமலான் மாதத்தை புனித மாதமாக கொண்டாடுவது ஆகும். அந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து, 5 வேளை தொழுகை நடத்துவர். மாலையில் நோன்பு நோற்க அனைத்துப் பள்ளி வாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஸர் என்னும் உணவு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து இறுதியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.
தஞ்சைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,331 டன் உரம் வந்தது
by Unknown
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகின. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் நெற்சாகுபடி நடைபெற்றது.இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.
உர மூட்டைகள்
இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 21 வேகன்களில் 1,012 டன் பொட்டாஷ் உரம், 319 டன் டி.ஏ.பி. உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.
நன்றி:தினத்தந்தி
இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 21 வேகன்களில் 1,012 டன் பொட்டாஷ் உரம், 319 டன் டி.ஏ.பி. உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.
நன்றி:தினத்தந்தி
வரலாற்றில் இன்று மே 29.
by Unknown
1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
1727 – இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை “பனஸ்ட்ரே டார்லெட்டன்” தலைமையிலான படைகள் கொன்றனர்.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.
1867 – ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
1903 – சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 – புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1947 – இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1988 – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.
பிறப்புகள்
1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)
1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)
1917 – ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)
1984 – கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1926 – அப்துலாயே வாடே, செனிகல் நாட்டின் 3வது அரசுத்தலை8வர்
1929 – பீட்டர் ஹிக்ஸ், ஆங்கிலேய-ஸ்கொட்டிய இயற்பியலாளர்
இறப்புகள்
1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1778)
1892 – பகாவுல்லா, பாரசீக ஆன்மிகத் தலைவர், பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1817)
1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1836)
1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)
1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (பி. 1892)
1987 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (பி. 1902)
2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவ உதவியாளர் (பி. 1926)
2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)
சிறப்பு நாள்
நைஜீரியா – மக்களாட்சி நாள் (1999)
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்
பேராவூரணியில் ஜமாபந்தி நடைபெற்றது.
by Unknown
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426 ஆம்பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் மே 25 அன்று தொடங்கியது. இதில் வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன், சமூகப் பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியர் இரா.கோபி, வட்ட வழங்கல் அலுவலர் இரா .சாந்தகுமார் மற்றும் அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
25ம் தேதி பேராவூரணி வட்டம் பெருமகளுர் உள்வட்டத்தை சேர்ந்த கிராமங்களான பெருமகளுர்தென்பாதி, பெருமகளுர்வடபாதி, கொளக்குடி, ருத்திரசிந்தாமணி, திருவத்தேவன், அடைக்கதேவன், விளங்குளம், செந்தலைவயல், ராவுத்தன்வயல், உள்ளிட்ட கிராமங்களுக்கும்,
26ம் தேதி குருவிக்கரம்பை உள்வட்டம், நாடியம், மருங்கப்பள்ளம், சேதுபாவாசத்திரம், வீரையன்கோட்டை, உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் கணக்கு தணிக்கை நடைபெற்றது.
மே 30ம் தேதி ஆவணம் உள்வட்ட பகுதிகளான பெரியநாயகிபுரம், பைங்கால், அம்மையாண்டி, காலகம், மாவடுகுறிச்சி, பழையநகரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும்,
மே 31ம் தேதி பேராவூரணி உள்வட்ட பகுதியான ஆதனூர் , பின்னவாசல், மணக்காடு, நெல்லடிக்காடு, நாட்டாணிக்கோட்டை ,சாணாகரை, பேராவூரணி 1, பேராவூரணி 2 ஆகிய கிராம பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் பட்டா மாறுதல், முதியோர்,விதவை உதவித் தொகை, உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன் தெரிவித்துள்ளார்.
Saturday, May 27, 2017
பேராவூரணி அரசுக்கல்லூரியில் கலந்தாய்வு மே 31.
by Unknown
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கலந்தாய்வு மே- 31, ஜூன்-1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
31-ம் தேதியன்று பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 1-ம் தேதி பி,எஸ்.சி (கணிதம்), பி,எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
அரசு விதிமுறைகளின்படி, மதிப்பெண் தர வரிசைப்ப ட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர் விண்ணப்ப தரவரிசைப் பட்டியல் 30-ம் தேதி அன்று கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:தீக்கதிர்
31-ம் தேதியன்று பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 1-ம் தேதி பி,எஸ்.சி (கணிதம்), பி,எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
அரசு விதிமுறைகளின்படி, மதிப்பெண் தர வரிசைப்ப ட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர் விண்ணப்ப தரவரிசைப் பட்டியல் 30-ம் தேதி அன்று கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி மே 30-ல் மறியல்.
by Unknown
பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் -இரண்டாம்புலிக்காடு சாலையில் புதிதாக இரண்டு மதுக்கடைகள் அமைத்துள்ளதைக் கண்டித்தும், அக்கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், மல்லிப்பட்டினம் மற்றும் இரண்டாம்புலிக்காடு பொதுமக்கள், மீனவர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுவரை மதுக்கடைகள் அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து மே 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், இரண்டாம்புலிக்காடு கடைத்தெருவிலும் (சேதுபாவாசத்திரம்- பட்டுக்கோட்டை சாலை) மற்றும் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் சாலை மறியல் நடைபெறும் எனவும், இரண்டாம்புலிக்காட்டில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பா.சண்முகநாதன் தலைமையிலும் மல்லிப்பட்டினத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத்தலைவர் கே.என். செரீப், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் ஏ.தாஜூதீன் தலைமையில் மறியல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்
ரூ.106 கோடியில் மல்லிப்பட்டினத்தில் துறைமுகப் பணிகள் விரைவில் தொடக்கம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தகவல்.
by Unknown
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ.106 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய துறை முகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பழைய துறைமுகம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் போதிய வசதிகள் இல்லை எனவும், நெருக்கடியாக இருப்பதாகவும், நவீன முறையில் புதிதாக துறைமுகம் அமைத்து தரவேண்டும் எனவும் இப்பகுதி மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மல்லிப்பட்டினத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில், துறைமுக மேம்பா ட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இதையடுத்து துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் துறைமுகம் அமைக்கும் பணிகள் தாமதப்பட்டு வந்தது.
உடனடியாக துறைமுகம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து, போராட்டம் நடத்தின.
இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.கோவிந்தராசு தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மல்லிப்பட்டினம் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்துவேன் என உறுதியளி த்திருந்தார்.
இந்நிலையில் துறைமுக விரிவா க்கப் பணிக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு ள்ளதாகவும், விரைவில் சில தினங்களில் பணிகள் தொடங்கும் என சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தெரிவித்தார்.
துறைமுகப் பணிகள் தொடங்கும் என்ற அறிவிப்பிற்கு இப்பகுதி மீனவ மக்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்
வரலாற்றில் இன்று மே 28.
by Unknown
1503 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1815 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.
1987 – மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 – ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
பிறப்புகள்
1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)
1923 – என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)
1923 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)
1980 – ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்
இறப்புகள்
1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)
1972 – எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894)
1998 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916)
சிறப்பு நாள்
அசர்பைஜான், ஆர்மீனியா – குடியரசு நாள்
பிலிப்பீன்ஸ் – தேசிய கொடி நாள்
ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி.
by Unknown
42-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழா திங்கட்கிழமை வரை நடக்கிறது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.
பட்டுக்கோட்டையில் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கோமளவிலாஸ் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.05.2017) வழங்கினார்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு நில அளவைத்துறையில் பணியாற்றி பணியிலிருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணையும், சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் காசோலை, 220 நபர்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்து நிவாரண நிதியுதவி 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரமும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை, தேசிய முதியோர் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.1.20த்திற்கான ஆணையும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் இடுபொருள் 10 நபர்களுக்கு ரூ.22,944 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு இடுபொருட்களும், வருவாய்த் துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.4,73,040 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைபட்டாவும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு ஸ்மார்ட் கார்டும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கான ஆணையும் ஆக மொத்தம் 342 பயனாளிகளுக்க ரூ.1,17,63,784 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் அரசு மக்களை தேடி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென்று உத்திரவிட்டிருந்தார். மக்களுக்காகவே அரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சி செய்தார்கள். அதன் வழியில் வந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அம்மா அவர்கள் 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் 4 கிராமலிருந்து 8 கிராமாக உயர்த்தி ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதன் முதலாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, பேராவூரணி, திருவோணம் ஆகிய 6 ஒன்றியங்களைச் சோர்ந்த 220 பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்க்களுக்கு உதவித்தொகை 6 ஆயிரமாக இருந்ததை 12 ஆயிரமாக உயர்த்தியதும், 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தியதும் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்டால் தலா ரூ.25,000 வீதம் ரூ.50000 நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தை பிறந்தால், 3 பெண் குழந்தைகளுக்கு சேர்த்து ரூ.75000 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தவர் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் தான்.
இந்த திட்டங்கள் எல்லாம் ஏழை எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடைகள், பாடப்புத்தகம், கணித உபகரணம், புத்தக பை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அர்ப்பணித்தார்கள். அம்மா அவர்கள் சுட்டிக்காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர்பாபு, பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மலைஅய்யன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்வளத்தலைவர் துரை.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் வெ.பாக்கியலெட்சுமி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் மரிய ஜோசப் நன்றி கூறினார்.
நன்றி:அதிரை நியூஸ்
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை வெளியாகிறது.
by Unknown
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.
இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ.யின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் தெரிவித்துள்ளதால் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்படும். தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பேராவூரணி அருகே பள்ளத்தூரில் நிரந்தரமாக மூடக்கோரி டாஸ்மாக் கடையை முன்பு பாஜக சார்பில் முற்றுகை போராட்டம்.
by Unknown
பேராவூரணி அருகே பள்ளத்தூரில் நிரந்தரமாக மூடக்கோரி டாஸ்மாக் கடையை முன்பு பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள பள்ளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடைவீதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை நீதிமன்றம் உத்தரவிற்கு பின் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கடை நேற்று முன்தினம் மாலை பள்ளத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ள இடத்தின் அருகில் திறக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்கள் நிறைந்த வயல்வெளி பகுதியான இந்த பகுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படும் குளங்கள் உள்ளன. டாஸ்மாக் கடை திறந்த தகவல் அறிந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டதால், திறந்த சிறிது நேரத்திலேயே கடை மூடப்பட்டது. இருப்பினும் அந்த கடையை நிரந்தரமாக மூடகோரி நேற்று மதியம் பாஜகட்சியின் சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் குகன் தலைமையில் அந்த டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக நடமாடும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தற்போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு 12 மணிக்கு பிறகுதான் விற்பனை செய்யவேண்டும் என அறிவித்ததிருந்தும் பார்களில் காலை முதல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி:தினகரன்
நன்றி:தினகரன்
தஞ்சை புத்தக கண்காட்சியில் புதிய வரவுகள்.
by Unknown
தஞ்சையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் புதிய வரவுகளாக பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தஞ்சை தெற்கு வீதி தங்வேல் செட்டியார் திருமண மண்டபத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் கல்வி தொடர்பான சிடி விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் புதிய வரவு புத்தகங்களாக டாவின்சிகோட், நகரம் தமிழில், நான் பூலான்தேவி வாழ்க்கை வரலாறு, ஜெருசலேம், உலகத்தின் வரலாறு, 2016 சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழி பெயர்ப்பு நூல், தஞ்சை வரலாறு, பெரிய கோயில் வரலாறு, மாணவர்களுக்கான போட்டி தேர்வு, பொது அறிவு, டிஎன்பிஎஸ்சி, ஜோதிடம், ஆன்மீகம், மருத்துவம், கதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் கல்விக்கான சிடிக்கள் புதிய பொலிவுடன் கிடைக்கும்.
நன்றி : தினகரன்
நன்றி : தினகரன்
Friday, May 26, 2017
வரலாற்றில் இன்று மே 27.
by Unknown
மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1703 – ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.
1860 – இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.
1883 – ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜெர்மனியரிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்ஃபோக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
1960 – துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967 – அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1994 – சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.
1997 – முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.
பிறப்புகள்
1907 – ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இ.1964)
1923 – ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர்.
1956 – கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர்
1975 – மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்.
1977 – மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள்
1910 – ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளர் (பி. 1843)
1964 – ஜவஹர்லால் நேரு, முதலாவது இந்தியப் பிரதமர் (பி. 1889)
1597 – டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன்
சிறப்பு நாள்
பொலீவியா – அன்னையர் நாள்
நைஜீரியா – சிறுவர் நாள்
பேராவூரணியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்.
by Unknown
பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரூராட்சி 3- ஆவது வார்டு ஆத்தாளூர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே குடிதண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை அன்று பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மணி ரவி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். தகவல் அறிந்து போராட்ட இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர்.பி.ராஜேந்திரன், தெட்சணாமூர்த்தி, பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் தர்ஷணா, கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் மதியழகன் ஆகியோரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.இதில் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும், ஆத்தாளூரில் அங்காடி கட்டித்தரப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நன்றி : தீக்கதிர்
கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு: ஜூன் 7-ல் திறக்கப்படும்.
by Unknown
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு கூடுதலாக கோடை விடுமுறை அளிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் கூடுதலாகவே இருந்தது. அதனால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஜூன் 7-ல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளராக நியமனம்.
by Unknown
சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக நியமனம்.
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு நாகை மாவட்டம், சீர்காழிக்கும், சீர்காழி காவல் ஆய்வாளர் அழகுதுரை திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நன்னிலம் காவல் ஆய்வாளர் மணிமாறன் நாகை மாவட்டம் திருவெண்காடுக்கும், திருவெண்காடு காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் சென்பனார்கோவிலுக்கும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் ஆய்வாளர் செல்வம் நாகை மாவட்டம் ஏ.கே.சத்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏ.கே.சத்திரம் காவல் ஆய்வாளர் சிவபிரகாசம் திருவாரூர் மாவட்டம்,
குடவாசலுக்கும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மகாதேவன் கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்துக்கும்,
கும்பகோணம் கிழக்கு ஆய்வாளர் பெரியசாமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கும், மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி : தினமணி
வரலாற்றில் இன்று மே 26.
by Unknown
மே 26 கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1538 – ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
1637 – பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
1838 – கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.
1896 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1917 – இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1958 – இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1983 – ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1991 – தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
பிறப்புகள்
1799 – அலெக்சாண்டர் புஷ்கின், உருசியக் கவிஞர் (இ. 1837)
1844 – மகா வைத்தியநாதையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)
1937 – மனோரமா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (இ. 2015)
இறப்புகள்
1989 – கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (பி. 1907)
சிறப்பு நாள்
அவுஸ்திரேலியா – தேசிய மன்னிப்பு நாள்
போலந்து – அன்னையர் நாள்
ஜோர்ஜியா – தேசிய நாள்
Thursday, May 25, 2017
நெடுவாசலில் 44வது நாள் ஜெம் நிறுவனத்தை அடித்து விரட்டும் போராட்டம்.
by Unknown
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஜெம்லேபரட்டரீஸ் நிறுவனத் தின் உருவ பொம்மையை அடித்து விரட்டும் நூதனப்போராட்டத்தில் வியாழக்கிழமையன்று விவசாயிகள் ஈடுபட்டனர்.மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட் டோம் என்று வாய் மொழியாக சொல்லிக் கொண்டே பாஜக பிரமுகரின் ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசுஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு ஒப்பந்தம் போட்டது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி பல்வேறு நூதனப் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப் பினரும் அரசியல் பிரமுகர்களும், திரைத் துறையினரும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 44-ஆவது நாளாக வியாழக்கிழமையன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு நூதனப்போராட்டத்தில் ஜெம் நிறுவனத்தின் உருவ பொம் மைக்கு தலையில் மண்சட்டியைக் கவிழ்த்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹைட்ரோ கார்பனை தடை செய்யக்கோரி,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். மேலும், ஜெம் நிறுவன உருவ பொம்மையை அடித்துநொறுக்கியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.ஹைட்ரோகார்பன் திட்டம் என்கிற பெயரில் எங்கள் நிலத்தை துளைப்பதற்கு யார் வந்தாலும் ஊருக்குள் நுழைய விடமாட்டோம். எங்கள் மண்ணைக் காக்கும் போராட்டத்தில் எங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அடித்து விரட்டுவோம் என்றனர். போராட் டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங் கேற்றனர்
உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27,28-05-2017.
by Unknown
பேராவூரணி அடுத்த உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27.28-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு 07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
பேராவூரணி ரெட்டவயல் சாலையை சரி செய்யகோரிக்கை.
by Unknown
பேராவூரணி – ரெட்டவயல் மெயின் சாலையின் குறுக்கே ரயில்வே சாலையில் செங்குத்தான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து தருமாறு
பேராவூரணி மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வேத .குஞ்சருளன் மாவட்ட ஆட்சியருக்கு மனுஅனுப்பியுள்ளார்.
அவ் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பேராவூரணி காவல் நிலையம் அருகே ஆதனூர் வழியாக நெல்லடிக்காடு, ரெட்ட வயல் வழியாக ஆவுடையார் கோவில் செல்லும் மெயின் சாலையில் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில்வே சாலை மெயின் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயில்வே துறையினர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை செய்து வரும்போது மெயின் சாலையை விட ரயில்வே சாலை சுமார் 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இதனால் ரயில்வே சாலையை கடக்கும் இடம் செங்குத்தான நிலையில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில் 25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த வழியாக தான் பேராவூரணி நகருக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் . மேலும் ஒரு பக்கத்திலிருந்து வாகனம் ஏறும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இல்லை என்றால் பின்னால் வாகனத்தை எடுக்கும் போது பிரேக் பிடிக்க முடியாமல் பின்னால் செல்லும் வாகனங்களில் ஏறி சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாகனத்தில் செல்பவர்களாவது விழுந்து எழும் சூழ்நிலையில் உள்ளனர்.மேலும் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி, மற்றும் நவதானியங்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும்போது செங்குத்தான பாதையில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் விவசாயிகள் சைக்கிள் மூலம் விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல சம்பளத்திற்கு ஆள் கூட்டிச் செல்லும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே தாங்கள் இந்த மனுவை ஏற்று சாலையை அகலப்படுத்தியும், எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு மெயின் சாலையை உயர்த்தியும் தந்து பொது மக்களின் கஷ்டம் போக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வரலாற்றில் இன்று மே 25.
by Unknown
மே 25 கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்” (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 – ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1458 – மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 – முரளி, மலையாள நடிகர் (இ. 2009)
இறப்புகள்
19?? – சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 – சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)
சிறப்பு நாள்
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா – மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் – விடுதலை நாள் (2000)
Wednesday, May 24, 2017
பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.
by Unknown
பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் படப்பனார்வயல் கிராமத்தில் அரசு மதுக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம், அம்மாவாரச்சந்தை, அரவைமில் மற்றும் கடைவீதி உள்ளது. இந்த மதுக்கடையில் மது அருந்துபவர்கள் பெண்களை கேலி செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
நேற்று காலை மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த வேணிகலா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த மதுக் கடையை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஒரு மாதம் கால அவகாசம் தேவை என்றும், வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இது குறித்து பேசி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருமகளூரில் முறையீடு மனு அளித்தல் ஆர்ப்பாட்டம்.
by Unknown
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெருமகளூர் பேரூராட்சி அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முறையீடு, மனு அளித்தல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பழனிவேலு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெருமகளூர் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்திடவேண்டும் . 24 மணி நேரமும் மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பெருமகளூர்-ரெட்டவயல் சாலையை சீரமைத்து, கடைவீதியில் உள்ள மதுக்கடை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்றி : தினகரன்
Tuesday, May 23, 2017
பேராவூரணி அடுத்த உடையநாடு நாளை சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி.
by Unknown
உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி நாளை 25.26-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம்பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
இரண்டாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
மூன்றாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும்,
நான்காம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
மேலும்தொடர்புக்கு :
வரலாற்றில் இன்று மே 24.
by Unknown
மே 24 கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1738 – மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.
1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.
1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.
1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற ஜெர்மன் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1956 – சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
1962 – அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.
1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
2000 – இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2001 – எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.
2002 – ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.
2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
2007 – ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
2007 – ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1686 – கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1736)
1819 – விக்டோரியா மகாராணி, ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இ. 1901)
1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 1984)
1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
1979 – ட்ரேசி மெக்ரேடி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் (பி. 1473)
1981 – சி. பா. ஆதித்தனார் தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் (பி. 1905)
சிறப்பு நாள்
எரித்திரியா: விடுதலை நாள் (1993)
பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்.
by Unknown
பாடங்களுக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது: பிளஸ்-2 பொதுத் தேர்வு முறையில் மாற்றம் - தேர்வு நேரத்தை குறைக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டம்
பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ போல பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்க ளுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கவும், தேர்வு நேரத்தை 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் பெரிய அளவி லான மாற்றங்கள் நிகழ்ந்து வரு கின்றன. கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச் சந்திரன் ஆகியோர் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி அவர் களின் கருத்துகளையும் யோசனை களையும் கேட்டு வருகின்றனர்.
மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் ரேங்க் பட்டியல் முறை இந்த ஆண்டில் இருந்து கைவிடப் பட்டுள்ளது. அண்மையில் வெளி யிடப்பட்ட பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட வாரியான ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த முடிவை பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.
பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு
அடுத்த கட்டமாக, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வாக இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பிளஸ் 1 வகுப்பை கண்டுகொள்வ தில்லை. பெரும்பாலான பள்ளி களில் பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்களே நடத்தப்படுகின்றன.
பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை படிப்பதால் போதிய அடிப்படை பாட அறிவை மாணவர்கள் பெற முடியாமல் போகிறது. இதன் காரணமாக, மிகச் சிறந்த தொழிற்கல்வி கல்லூரி களில் சேர்ந்தாலும்கூட அங்கு பாடங் களை படிக்க மிகவும் சிரமப்படு கின்றனர். பலர் செமஸ்டர் தேர்வு களில் தோல்வி அடைகின்றனர்.
மேல்நிலைக் கல்வியில் அடிப் படை பாட அறிவு இல்லாததால் ஐஐடி, ‘நீட்’ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பிளஸ் 1 பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்களை தயார் படுத்தவும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
3 வண்ண சீருடைகள்
தமிழகத்தில் 10 ஆண்டுக ளுக்கு மேலாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. எனவே, தற்போதைய கல்விச்சூழ லுக்கு ஏற்ப மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு, மேல்நிலைக் கல்வி பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக வெகுவிரைவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சீருடையும் மாற்றப்பட உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 10-ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 3 விதமான வண்ணங் களில் மாணவ, மாணவிகளின் சீருடைகள் அமைந்திருக்கும். மேலும், வரும் ஆண்டில் இருந்து பள்ளிகளில் யோகா வகுப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வல்லுநர் குழு பரிந்துரை
இந்நிலையில், மூத்த ஆசிரி யர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட வல்லுநர் குழு, பள்ளிக் கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரை களை வழங்கியுள்ளது. அந்த பரிந் துரையின் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் 6 பாடங் களுக்கு மொத்தம் 1,200 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கான மதிப் பெண்ணை 200-லிருந்து 100 ஆக குறைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. (தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்களே வழங்கப்படுகிறது). எனவே, பிளஸ் 2 தேர்வில் மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆக குறையும்.
கேள்வி முறையில் மாற்றம்
மேலும், மாணவர்களை அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வண்ணம் பிளஸ் 2 தேர்வில் கேள்வி முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்தான் பாடப்புத்தகங் களில் இருந்து கேட்கப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்கு குறிப்பிட்ட பாடம் தொடர்பான பொது அறிவுக் கேள்விகளாக, புரிந்துகொள்ளும் திறனை ஆய்வு செய்யும் கேள்விகளாக இருக்கும்.
பாடத்துக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டதைப் போன்று தேர்வு நேரத்தையும் 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக 6 செமஸ்டர் தேர்வுகளின் மதிப் பெண்களையும் சேர்த்து ஒருங் கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்கள். அதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான் றிதழ் வழங்கலாமா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
வல்லுநர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகளை நிறை வேற்றும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு ஓரிரு நாளில் உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, May 22, 2017
வரலாற்றில் இன்று மே 23.
by Unknown
மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத தன்னை அறிவித்தார்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
பிறப்புகள்
1707 – கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)
1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)
1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)
1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.
இறப்புகள்
1906 – ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)
1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)
தஞ்சைக்கு ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,600 டன் புழுங்கல் அரிசி வந்தது
by Unknown
மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இதைப்போல தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கிலும், தமிழக அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலும் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
3,600 டன் புழுங்கல் அரிசி
இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 58 வேகன்களில் 3,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.
நன்றி : தினத்தந்தி
Sunday, May 21, 2017
பேராவூரணியில் மே 26-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்.
by Unknown
பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
நன்றி: தினமணி