பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426 ஆம்பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் மே 25 அன்று தொடங்கியது. இதில் வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன், சமூகப் பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியர் இரா.கோபி, வட்ட வழங்கல் அலுவலர் இரா .சாந்தகுமார் மற்றும் அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
25ம் தேதி பேராவூரணி வட்டம் பெருமகளுர் உள்வட்டத்தை சேர்ந்த கிராமங்களான பெருமகளுர்தென்பாதி, பெருமகளுர்வடபாதி, கொளக்குடி, ருத்திரசிந்தாமணி, திருவத்தேவன், அடைக்கதேவன், விளங்குளம், செந்தலைவயல், ராவுத்தன்வயல், உள்ளிட்ட கிராமங்களுக்கும்,
26ம் தேதி குருவிக்கரம்பை உள்வட்டம், நாடியம், மருங்கப்பள்ளம், சேதுபாவாசத்திரம், வீரையன்கோட்டை, உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் கணக்கு தணிக்கை நடைபெற்றது.
மே 30ம் தேதி ஆவணம் உள்வட்ட பகுதிகளான பெரியநாயகிபுரம், பைங்கால், அம்மையாண்டி, காலகம், மாவடுகுறிச்சி, பழையநகரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும்,
மே 31ம் தேதி பேராவூரணி உள்வட்ட பகுதியான ஆதனூர் , பின்னவாசல், மணக்காடு, நெல்லடிக்காடு, நாட்டாணிக்கோட்டை ,சாணாகரை, பேராவூரணி 1, பேராவூரணி 2 ஆகிய கிராம பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் பட்டா மாறுதல், முதியோர்,விதவை உதவித் தொகை, உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன் தெரிவித்துள்ளார்.
0 coment rios: