தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கோமளவிலாஸ் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.05.2017) வழங்கினார்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு நில அளவைத்துறையில் பணியாற்றி பணியிலிருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணையும், சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் காசோலை, 220 நபர்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்து நிவாரண நிதியுதவி 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரமும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை, தேசிய முதியோர் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.1.20த்திற்கான ஆணையும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் இடுபொருள் 10 நபர்களுக்கு ரூ.22,944 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு இடுபொருட்களும், வருவாய்த் துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.4,73,040 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைபட்டாவும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு ஸ்மார்ட் கார்டும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கான ஆணையும் ஆக மொத்தம் 342 பயனாளிகளுக்க ரூ.1,17,63,784 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் அரசு மக்களை தேடி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென்று உத்திரவிட்டிருந்தார். மக்களுக்காகவே அரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சி செய்தார்கள். அதன் வழியில் வந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அம்மா அவர்கள் 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் 4 கிராமலிருந்து 8 கிராமாக உயர்த்தி ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதன் முதலாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, பேராவூரணி, திருவோணம் ஆகிய 6 ஒன்றியங்களைச் சோர்ந்த 220 பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்க்களுக்கு உதவித்தொகை 6 ஆயிரமாக இருந்ததை 12 ஆயிரமாக உயர்த்தியதும், 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தியதும் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்டால் தலா ரூ.25,000 வீதம் ரூ.50000 நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தை பிறந்தால், 3 பெண் குழந்தைகளுக்கு சேர்த்து ரூ.75000 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தவர் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் தான்.
இந்த திட்டங்கள் எல்லாம் ஏழை எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடைகள், பாடப்புத்தகம், கணித உபகரணம், புத்தக பை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அர்ப்பணித்தார்கள். அம்மா அவர்கள் சுட்டிக்காட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர்பாபு, பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மலைஅய்யன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்வளத்தலைவர் துரை.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் வெ.பாக்கியலெட்சுமி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் மரிய ஜோசப் நன்றி கூறினார்.
நன்றி:அதிரை நியூஸ்
0 coment rios: