Thursday, April 27, 2017

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.


பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி மேற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிகரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் வீரராகவபுரம் கடைவீதியில் வியாழனன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லையாம். குறிப்பாக கடந்த 15 தினங்களாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என்று கூறுகின்றனர். மின் மாற்றி பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லையாம். இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இயங்கவில்லை. அருகில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளனர்.இதுகுறித்து வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரிய அலு வலகம், உள்ளாட்சி நிர்வா கம் ஆகியவற்றிற்கு தகவல்தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் கண்டு கொள்ளப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வெகுண் டெழுந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் வீரராகவபுரம் கடைவீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை7 மணிக்கு துவங்கிய சாலைமறியல் 10 மணி வரை நடை பெற்றது. திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை ஏட்டு ஆதிமூலம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். உரிய அதிகாரிகள் வந்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என பொது மக்கள் கடும் வெயிலில் சாலையில் அமர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.பின்னர் 10 மணியளவில் பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மறியல் இடத்திற்கு வந்து, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.இப்பகுதியை சேர்ந்த நீலா என்பவர் கூறுகையில், சில தினங்களாகவே தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகிறோம். கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் நூற்றுக் கணக்கானோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளாத தன்மைபொதுமக்களை வீதிக்கு போராட்டத்திற்கு தள்ளி யுள்ளது. இனியாவது பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வலி யுறுத்துகின்றனர்.பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி மேற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிகரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் வீரராகவபுரம் கடைவீதியில் வியாழனன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லையாம். குறிப்பாக கடந்த 15 தினங்களாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என்று கூறுகின்றனர். மின் மாற்றி பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லையாம். இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இயங்கவில்லை. அருகில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளனர்.இதுகுறித்து வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரிய அலு வலகம், உள்ளாட்சி நிர்வா கம் ஆகியவற்றிற்கு தகவல்தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் கண்டு கொள்ளப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வெகுண் டெழுந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் வீரராகவபுரம் கடைவீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை7 மணிக்கு துவங்கிய சாலைமறியல் 10 மணி வரை நடை பெற்றது. திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை ஏட்டு ஆதிமூலம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். உரிய அதிகாரிகள் வந்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என பொது மக்கள் கடும் வெயிலில் சாலையில் அமர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.பின்னர் 10 மணியளவில் பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மறியல் இடத்திற்கு வந்து, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.இப்பகுதியை சேர்ந்த நீலா என்பவர் கூறுகையில், சில தினங்களாகவே தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகிறோம். கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் நூற்றுக் கணக்கானோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளாத தன்மைபொதுமக்களை வீதிக்கு போராட்டத்திற்கு தள்ளி யுள்ளது. இனியாவது பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வலி யுறுத்துகின்றனர்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: