தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறனன.
இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்காக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் சென்னையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும். சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 29 முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் மூலம் வெளியூர் செல்வதற்காக, 13ஆயிரத்து 850 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தீபாவளிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து வெளிஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்விவரங்களை பார்க்கலாம்.
செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம், வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூருக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். திருச்சி,மதுரை, மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.
0 coment rios: