பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ராதேவி முன்னிலை வகித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார்.
போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் திருக்குறள் பேரவை மாநாட்டில் வழங்கப்படும் என்று பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர். போட்டிகளுக்கு நடுவராக மெய்ச்சுடர் வெங்கடேசன், நீலகண்டன், பேராசிரியர் கணேஷ்குமார், திருவேங்கடம், பேரவை பொருளாளர் ஜேம்ஸ் பணியாற்றினர்.
0 coment rios: