பேராவூரணி பெரிய குளம் தற்போது தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
இந்த குளத்தின் மூலமாக பொன்னாங்கண்ணிக்காடு, பழை பேராவூரணி, செங்கமங்கலம் பகுதியில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்த குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் சீரமப்படுகின்றனர்.
இந்த பகுதியில் விளையும் நெல் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இந்த குளத்தின் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டது.
மழை பெய்யும் காலத்தில் தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு பேராவூரணி பெரிய குளம் தூர்வாரி தண்ணீர் நிரப்பினால் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் பயன்பெறுவர். இதனால் பேராவூரணி பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளம் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்.
0 coment rios: