தற்போது காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.700 கோடி செலவில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாதையில் கடந்த 3 நாட்களாக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.
இந்த புதிய வழித்தடத்தில் அதிவேக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி, தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர்ராவ், தலைமை கட்டுமான பொறியாளர் காளிமுத்து, தலைமை பொது மேலாளர் தவமணி பாண்டி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு நேற்று மாலை சரியாக 3.45 மணிக்கு சிறப்பு ரெயிலில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிவேக சோதனை ஓட்டம் புறப்பட்டது. பட்டுக்கோட்டையில் இருந்து ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயிங்குடி, அறந்தாங்கி, வாழ்ரமாணிக்கம், கண்டனூர், புதுவயல் வழியாக காரைக்குடியை அடைந்தது.


0 coment rios: